Wednesday, October 17, 2012

18 Vayasu - Unnai Ondru Naan


படம் : 18 வயசு (2012)
இசை : சார்லஸ் போஸ்கோ & தினேஷ்
பாடியவர் :  ஸ்ரீராம் பார்த்தசாரதி, சுதா ரகுநாதன்
பாடல் வரி : நா.முத்துகுமார்







உன்னை ஒன்று நான் கேட்கவா?
உன்னை மட்டும் தான் கேட்கவா?
சின்ன பிள்ளை போலாகவா?
என்னை கொஞ்சம் தாலாட்டவா?
முதல் முறை மழை பார்த்த சிறு பிள்ளை போலே
மனம் இன்று கொண்டாடுதே
இது என்ன இருதயம் மிருதங்கம் போலே
இன்று புது பண் பாடுதே

உன்னை ஒன்று நான் கேட்கவா?
உன்னை மட்டும் தான் கேட்கவா?
கையில் உன்னை நான் ஏந்தவா?
செல்லம் கொஞ்சி தாலாட்டவா?
முதல் முறை தாவணியில் நான் தெரிந்த நாளில்
மனம் இன்று சை போடுதே
பெண்மை கொண்ட நாணத்தின் பொருள் புரியும் வேலை
மௌனம் என்னை பந்தாடுதே

காதல் வந்தால் கண் பார்த்து பேசுவேதனோ
காமம் வந்தால் வேறெங்கோ பார்ப்பதும் ஏனோ

நதியில் பூ விழுந்தால் மேலே நீந்திடுமே
நதியில் கல் வழிந்தால் அது ஆழம் சென்றிடுமே

மயக்கம் வந்தால் அன்பே சொல் தயக்கங்கள் ஏனோ
தயக்கம் வந்தால் அங்கேயும் மயக்கங்கள் ஏனோ

உடலில் தீ விழுந்தால் உடனே அணைந்திடுமே
மனதில் தீ விழுந்தால் அது அணைத்தால் எழுந்திடுமே

உன்னை ஒன்று நான் கேட்கவா?
உன்னை மட்டும் தான் கேட்கவா?
சின்ன பிள்ளை போலாகவா?
என்னை கொஞ்சம் தாலாட்டவா?

கூச்சம் வந்தால் அச்சங்கள் வருவது ஏனோ
அச்சம் இருத்தும் மச்சங்கள் மலர்வதும் ஏனோ

கைகள் தீண்டவந்தால் வளையல் தடுத்திடுமே
மீண்டும் தீண்டவந்தால் அது உடைந்திட துடித்திடுமே

ஏக்கம் வந்தால் எல்லாமும் புரிவதும் ஏனோ
எல்லாம் துலைந்தும் என் நெஞ்சம் தேடுவதனோ

ஆ... துளைவது எல்லாமே மீண்டும் கிடைத்திடதான்
கிடைப்பது எல்லாமே நாம் மீண்டும் துளைத்திடதான்

உன்னை ஒன்று நான் கேட்கவா?
உன்னை மட்டும் தான் கேட்கவா?
சின்ன பிள்ளை போலாகவா?
என்னை கொஞ்சம் தாலாட்டவா?
முதல் முறை மழை பார்த்த சிறு பிள்ளை போலே
மனம் இன்று கொண்டாடுதே
இது என்ன இருதயம் மிருதங்கம் போலே
இன்று புது பண் பாடுதே

Popular Posts