Showing posts with label Surabhi. Show all posts
Showing posts with label Surabhi. Show all posts

Tuesday, April 8, 2014

இவன் வேற மாதிரி - லவ்வுல

படம் : இவன் வேற மாதிரி (2013)
இசை : சத்யா .C
பாடியவர்கள் : சத்யா.C, மதுஸ்ரீ
பாடல் வரிகள் : விவேகா


Ivan Veramathiri Poster.jpg




லவ்வுல லவ்வுல லவ்வுல லவ்வுல விழுந்திட்டேன்
என் கவல கவல கவல கவல மறந்திட்டேன்
அவள அவள அவள அவள நெனச்சிட்டேன்
இப்ப பகல பகல பகல இரவ தொலச்சிட்டேன்
வெண்ணையில செஞ்ச செல சென்னையில பாத்தேன்
அன்னையில இருந்து நான் என்னவோ ஆனேன்
ஆனேனே ஆனேனே ஏதேதோ ஆனேனே
போனேனே போனேனே எங்கேயோ போனேனே


நீ செல போல இருக்கேனு சொல்ல முடியல
அடி செலயெல்லாம் உன்ன போல ஆசை கொடுக்கல
ஒரு நதி போல இருக்கேன்னு எண்ண முடியல
நீ நடந்தாலே கடல் போல கூட்டம் தெருவுல
இங்கு பெண்ணையும் ஆணையும் படைக்குறது
பிரம்மனோட வேலை
உன் மூக்கையும் கண்ணையும் படைக்கும் போது
மூடில் இருந்தான் போல
என் காதல் சொல்ல வச்சிட்ட
என்ன மீனாக துள்ள வச்சிட்ட
என்னாச்சோ ஏதாச்சோ ஏதேதோ ஆயாச்சோ


என் உயிர் மேல ஓயாம தீய மூட்டுற
அடி வலியின்னா என்னான்னு நல்லா காட்டுற
ஒரு எறும்பாக சிறுசா தான் காதல் தெரியுது
அது யானை போல சில நேரம் மாறி மிதிக்குது
எலும்பொடைஞ்சா மாவுக்கட்டு போட்டு திறுத்த முடியும்
இதயத்துக்கு மருந்து போட காதலுக்கு தெரியும்
தல மேல வானம் உரசும்
தலைகீழா எல்லாம் தெரியும்
ஏதேதோ ஆனேனே எங்கேயோ போனேனே

லவ்வுல லவ்வுல லவ்வுல லவ்வுல விழிந்திட்டேன்
நான் அவள அவள அவள அவள நெனச்சிட்டேன்


இவன் வேற மாதிரி - என்ன மறந்தேன்

படம்: இவன் வேற மாதிரி (2013)
இசை: C.சத்யா
பாடியவர்: மதுஸ்ரீ
பாடல் வரிகள்: நா.முத்துக்குமார்





யார் அவனோ அவனோ... யார் அவனோ அவனோ...
யார் அவனோ அவனோ... அவனோ...

ம்..ம்…ஹும்…ஹும்.... ம்..ம்…ஹும்…ஹும்....
ம்..ம்…ஹும்…ஹும்.... ம்..ம்…ஹும்…ஹும்....

என்ன மறந்தேன்... எதற்கு மறந்தேன்...
என்னை கேட்டேனே
உன்னை நினைக்க... என்னை மறந்தேன்...
எல்லாம் மறந்தேனே
என் பேரை மறந்தேன்... என் ஊரை மறந்தேன்...
என் தோழிகளை மறந்தேனே
என் நடை மறந்தேன்... என் ஓடை மறந்தேன்...
என் நினைவினை மறந்தேனே
அந்தி மாலை கோவில் மறந்தேன்
அதிகாலை கோலம் மறந்தேன்
ஏன் மறந்தேன்....

ம்ம்ம்... ம்ம்ம்... ம்ம்ம்... ம்ம்ம்...
ஒ.. ஏன் என்னை மறந்தேன்
நான் என்னை மறந்தேன்

கண் திறந்தும் பார்க்க மறந்தேன்
கால் நடந்தும் பாதை மறந்தேன்
வாய் திறந்தும் பேச மறந்தேன்
நான் பண்பலையின் பாடல் மறந்தேன்
தினம் சண்டை போடும் தாயிடம் கெஞ்ச மறந்தேன்
என் குட்டி தங்கை அவளிடம் கொஞ்ச மறந்தேன்
மறந்தேன் மறந்தேன் எதனால் மறந்தேன்

யார் அவனோ அவனோ... யார் அவனோ அவனோ...
யார் அவனோ அவனோ... அவனோ...


பெண் மனம் கவரும் கொற்றர்க்கு...

தாழ் பணிந்தேன்... தாழ் பணிந்தேன்... 

படித்ததெல்லாம் பாதி மறந்தேன்
தேர்வறையில் மீதி மறந்தேன்
நாள் கிழமை தேதி மறந்தேன்
நான் மின்னஞ்சலின் சேதி மறந்தேன்
நான் என்னை பற்றி அவனிடம் சொல்ல மறந்தேன்
அவன் புன்னகையை மூட்ட கட்டி அள்ள மறந்தேன்
மறந்தேன் மறந்தேன் அவனால் மறந்தேன்

யார் அவனோ அவனோ

ஏன்  மறந்தேன்....

யார் அவனோ அவனோ
யார் அவனோ அவனோ

என்னை... மறந்தேன்....

ம்..ம்…ஹும்…ஹும்.... ம்..ம்…ஹும்…ஹும்....
ம்..ம்…ஹும்…ஹும்.... ம்..ம்…ஹும்…ஹும்....


Popular Posts