Showing posts with label Luksimi Sivaneswaralingam. Show all posts
Showing posts with label Luksimi Sivaneswaralingam. Show all posts

Saturday, February 11, 2017

Bogan - Senthoora

படம் : போகன் (2017)
இசை :  D. இமான்
பாடியவர்: லுக்சிமி சிவனேசவரலிங்கம்
பாடல் வரிகள் :  தாமரை


Related image

நிதான நிதான நிதானமாக யோசித்தாலும்
நிலா நிலா நில்லாமல் ஓடி யோசித்தாலும்
நீ தான் மனம் தேடும் மாண்பாளன்
பூவாய் எனை ஏந்தும் பூபாளன்
என் மடியின் மணவாளன் என தோன்றுதே

செந்தூரா... ஆ... சேர்ந்தே செல்வோம்
செந்தூரா... ஆ... செங்காந்தள் பூ
உன் தேரா... ஆ... மாறன் அம்பு
ஐந்தும் வைத்து ஒன்றாய் காற்றில் எய்தாயா

செந்தூரா... ஆ... சேர்ந்தே செல்வோம்
செந்தூரா... ஆ... செங்காந்தள் பூ
உன் தேரா... ஆ... மாறன் அம்பு
ஐந்தும் வைத்து ஒன்றாய் காற்றில் எய்தாயா

நடக்கையில் அணைத்தவாறு போக வேண்டும்
விரல்களை பிணைத்தவாறு பேச வேண்டும்
காலை எழும் போது நீ வேண்டும்
தூக்கம் வரும் போது தோள் வேண்டும்
நீ பிரியா வரம் தந்தால் அதுவே போதும்

செந்தூரா... ஆ... சேர்ந்தே செல்வோம்
செந்தூரா... ஆ... செங்காந்தள் பூ
உன் தேரா... ஆ... மாறன் அம்பு
ஐந்தும் வைத்து ஒன்றாய் காற்றில் எய்தாயா
செந்தூரா... ஆ... ஆ...


மழையின் இரவில் ஒரு குடையினில் நடப்போமா?
மரத்தின் அடியில் மணிக்கணக்கினில் கதைப்போமா?
பாடல் கேட்போமா ஆடி பார்ப்போமா மூழ்கத்தான் வேண்டாமா?
யாரும் காணாத இன்பம் எல்லாமே கையில் வந்தே விழுமா?
நீ இன்றி இனி என்னால் இருந்திட முடிந்திடுமா?

செந்தூரா... ஆ... சேர்ந்தே செல்வோம்
செந்தூரா... ஆ... செங்காந்தள் பூ
உன் தேரா... ஆ... மாறன் அம்பு
ஐந்தும் வைத்து ஒன்றாய் காற்றில் எய்தாயா
செந்தூரா...


அலைந்து நான் கலைத்து போகும் போது அள்ளி
மெலிந்து நான் இழைத்து போவதாக சொல்லி
வீட்டில் நளபாகம் செய்வாயா?
பொய்யாய் சில நேரம் வைய்வாயா?
நான் தொலைந்தால் உனை சேரும் வழி சொல்வாயா?

செந்தூரா... ஆ... சேர்ந்தே செல்வோம்
செந்தூரா... ஆ... செங்காந்தள் பூ
உன் தேரா... ஆ... மாறன் அம்பு
ஐந்தும் வைத்து ஒன்றாய் காற்றில் எய்தாயா
எய்தாயா... ஆ...
கண்கள் சொக்க செய்தாயா... ஆ...
கையில் சாய சொல்வாயா... யா...
ஏதோ ஆச்சு வெப்பம் மூச்சு
வெட்கங்கள் போயே போச்சு



Popular Posts