Showing posts with label Heera. Show all posts
Showing posts with label Heera. Show all posts

Wednesday, November 28, 2012

இதயம் - இதயமே இதயமே


படம்: இதயம் (1991)
இசை: இளையராஜா
பாடியவர்: S.P பாலசுப்ரமணியம்
பாடல்வரிகள்: வாலி






இதயமே... இதயமே...
உன் மௌனம் என்னை கொல்லுதே
இதயமே... இதயமே...
என் விரகம் என்னை வாட்டுதே
நிலவில்லாத நீல வானம் போலவே
உயிரில்லாமல் எனது காதல் ஆனதே

இதயமே... இதயமே...
உன் மௌனம் என்னை கொல்லுதே
இதயமே... இதயமே...


பனியாக உருகி நதியாக மாறி
அலைவீசி விளையாடி இருந்தேன்
தனியாக இருந்தும் உன் நினைவோடு வாழ்ந்து
உயிர் காதல் உறவாடி கலந்தே நின்றேன்
இது எந்தன் வாழ்வில் நீ போட்ட கோலம்
இது எந்தன் வாழ்வில் நீ போட்ட கோலம்
கோலம் கலந்ததே புது சோகம் பிறந்ததே
நீயில்லாத வாழ்வு இங்கு காணல்தான்

இதயமே... இதயமே...
உன் மௌனம் என்னை கொல்லுதே
இதயமே... இதயமே...


என் ஜீவ ராகம் கலந்தாடும் காற்று
உன் மீது படவில்லை துடித்தேன்
அரங்கேரும் பாடல் உலகெங்கும் கேட்டும்
உன் நெஞ்சை தொடவில்லை ஏன் சொல்லம்மா
இசைக்கின்ற கலைஞன் நானாகி போனேன்
இசைக்கின்ற கலைஞன் நானாகி போனேன்
ஜீவன் நீயம்மா என் பாடல் நீயம்மா
நீயில்லாத வாழ்வு இங்கு காணல்தான்

இதயமே... இதயமே...
உன் மௌனம் என்னை கொல்லுதே
இதயமே... இதயமே...

இதயம் - பூங்கொடி தான்


படம்: இதயம் (1991)
இசை: இளையராஜா
பாடியவர்: S.P பாலசுப்பிரமணியம்
பாடல்வரிகள்: வாலி








பூங்கொடி தான் பூத்ததம்மா
பொன்வண்டு தான் பார்த்ததம்மா
பாட்டெடுக்க தாமதிக்க
வாடைக் காற்று பூப்பறித்து.... போனதம்மா
பூங்கொடி தான் பூத்ததம்மா
பொன்வண்டு தான் பார்த்ததம்மா


ஆசைக்குத் தாழ் போட்டு அடைத்தென்ன லாபம்?
அது தானே குடந்தன்னில் எரிகின்ற தீபம்
மனதோடு திரை போட்டு மறைக்கின்ற மோகம்
மழை நீரைப் பொழியாமல் இருக்கின்ற மேகம்
சிலருக்கு சில நேரம் துணிச்சல்கள் பிறக்காது
துணிச்சல்கள் பிறக்காமல் கதவுகள் திறக்காது
காட்டாத காதலெல்லாம் மீட்டாத வீணையைப் போல்
ஓ... ஓ... ஓ........ ஓ... ஓ... ........

பூங்கொடி தான் பூத்ததம்மா
பொன்வண்டு தான் பார்த்ததம்மா
பாட்டெடுக்க தாமதிக்க
வாடைக் காற்று பூப்பறித்து... போனதம்மா
பூங்கொடி தான் பூத்ததம்மா
பொன்வண்டு தான் பார்த்ததம்மா


தாய் கூட அழுகின்ற பிள்ளைக்குத் தானே
பசி என்று பரிவோடு பாலூட்ட வருவாள்
உன் வீட்டுக் கண்ணாடி ஆனாலும் கூட
முன் வந்து நின்றால் தான் முகம் காட்டும் இங்கே
மனதுக்குள் பல கோடி நினைவுகள் இருந்தாலும்
உதடுகள் திறந்தால் தான் உதவிகள் பெறக்கூடும்
கோழைக்குக் காதலென்ன? ஊமைக்குப் பாடலென்ன?
ஓ... ஓ... ஓ........ ஓ... ஓ... ........

பூங்கொடி தான் பூத்ததம்மா
பொன்வண்டு தான் பார்த்ததம்மா
பாட்டெடுக்க தாமதிக்க
வாடைக் காற்று பூப்பறித்து... போனதம்மா
பூங்கொடி தான் பூத்ததம்மா
பொன்வண்டு தான் பார்த்ததம்மா
பூங்கொடி தான் பூத்ததம்மா
பொன்வண்டு தான் பார்த்ததம்மா

Friday, November 23, 2012

இதயம் - பொட்டு வைத்த

படம்: இதயம் (1991)
இசை: இளையராஜா
பாடியவர்கள்: K.J.ஜேசுதாஸ்
பாடல்வரிகள்: வாலி





பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா
என் மனதில் அம்பு விட்ட நிலா
இது எட்ட நின்று என்னை சுட்ட நிலா
வாழ்நாள் தோறும் தினம் தான் காதோரம் பாடல் கூறும்
பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா
என் மனதில் அம்பு விட்ட நிலா
இது எட்ட நின்று என்னை சுட்ட நிலா


ஆறாத ஆசைகள் தோன்றும் என்னை தூண்டும்
ஆனாலும் வாய் பேச அஞ்சும் இந்த நெஞ்சம்
அவள் பேரை நாளும் அசை போடும் உள்ளம்
அவள் போகும் பாதை நிழல் போல செல்லும்
மௌனம் பாதி மோகம் பாதி என்னை கொல்லும் என்னாளும்

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா
என் மனதில் அம்பு விட்ட நிலா
இது எட்ட நின்று என்னை சுட்ட நிலா
வாழ்நாள் தோறும் தினம் தான் காதோரம் பாடல் கூறும்
பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா
என் மனதில் அம்பு விட்ட நிலா
இது எட்ட நின்று என்னை சுட்ட நிலா


யாப்போடு சேராதோ பாட்டு தமிழ் பாட்டு
தோப்போடு சேராதோ காத்து பனி காத்து
வினா தாள் போல் இங்கே கனா காணும் காளை
விடை போலே அங்கே நடை போடும் பாவை
ஒன்றாய் கூடும் ஒன்றாய் பாடும் பொன்னாள் இங்கு என்னாளோ

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா
என் மனதில் அம்பு விட்ட நிலா
இது எட்ட நின்று என்னை சுட்ட நிலா
வாழ் நாள் தோறும் தினம்தான் காதோரம் பாடல் கூறும்
பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா
என் மனதில் அம்பு விட்ட நிலா
இது எட்ட நின்று என்னை சுட்ட நிலா


Friday, May 18, 2012

திருடா திருடா - ராசாத்தி என் உசுரு




படம் : திருடா திருடா (1993)
இசை : A.R. ரஹ்மான்
பாடியவர் : சாகுல் ஹமீது
பாடலாசிரியர் : வைரமுத்து











ராசாத்தி என் உசுரு என்னதில்ல
ம்.... ம்....
பூச்சூடி வாக்கப்பட்டு போற புள்ள
ம்.... ம்....
நீ போனா என் உடம்பு மண்ணுக்குள்ள
ம்.... ம்ம்ம்... ம்.... ம்ம்ம்
ராவோடு சேதி வரும் வாடி புள்ள
ம்.... ம்ம்ம்... ம்.... ம்ம்ம்
ராசாத்தி என் உசுரு என்னதில்ல
ம்.... ம்.... ம்.... ம்.... ம்.... ம்....




ஆ... ஆ... ஆ... ஆ...


காரை வீட்டு திண்ணையில கறிக்கு மஞ்சள் அரைக்கையிலே


மஞ்சளை அரைக்குமுன்னே மனசை அரைச்சவளே


கரிசைக்காட்டு ஓடையிலே கண்டாங்கி தொவைக்கையிலே


துணிய நனையவிட்டு மனச புழிஞ்சவளே


நெல்லு களத்துமேட்டில் என்னை இழுத்து முடிஞ்சிகிட்டு போறவளே


போறவ போறவ தான் புத்தி கெட்டி போனவ தான்


கல்யாண சேலையில கண்ணீரை தொடச்சிகிட்டு போறவளே


போறவ போறவ தான் பொஞ்சாதியா போறவ தான்


நான் தந்த மல்லிகைய நட்டாத்தில் போட்டு விட்டு
அரளிப் பூச்சூடி அழுதபடி போறவளே


கடலை காட்டுக்குள்ள கையடிச்சு சொன்ன புள்ள
காத்துல எழுதணும் பொம்பளைங்க சொன்ன சொல்ல
கடலை காட்டுக்குள்ள கையடிச்சு சொன்ன புள்ள
காத்துல எழுதணும் பொம்பளைங்க சொன்ன சொல்ல


ராசாத்தி என் உசுரு என்னதில்ல
ம்.... ம்....
பூச்சூடி வாக்கப்பட்டு போற புள்ள
ம்.... ம்ம்ம்... ம்.... ம்ம்ம்
நீ போனா என் உடம்பு மண்ணுக்குள்ள
ம்.... ம்ம்ம்... ம்.... ம்ம்ம்
ராவோடு சேதி வரும் வாடி புள்ள
ம்.... ம்ம்ம்... ம்.... ம்ம்ம்
ராசாத்தி என் உசுரு என்னதில்ல


ஒ... ஒ... ஒ... ஒ... ஆ... ஆ... ஆ...
ஒ... ஒ... ஒ... ஒ... ஆ... ஆ... ஆ...
ஒ... ஒ... ஒ... ஒ... ஒ... ஒ... ஒ... ஒ... ஆ... ஆ... ஆ...


தொட்டு தொட்டு பொட்டு வெச்ச சுட்டு விரல் காயலையே


மரிக்கொழுந்து வெச்ச கையில் வாசம் இன்னும் போகலையே


மருதையிலே வாங்கி தந்த வளவி ஒடையலையே


மல்லுவேட்டி மத்தியில மஞ்சகறை மாறலையே


அந்த கழுத்து தேமலையும் காதோர மச்சத்தையும் பாப்பதெப்போ


பாப்பதெப்போ பாப்பதெப்போ பெளர்ணமியும் வாரதெப்போ


அந்த கொலுசு மணி சிரிப்பும் கொமரி இளஞ்சிரிப்பும் கேட்பதெப்போ


கேட்பதெப்போ கேட்பதெப்போ கீரத்தண்டும் பூப்பதெப்போ


கருவேளங்காட்டுக்குள்ள கருச்சாங்குருவி ஒன்னு சுதி மாறி கத்துதம்மா
துணையத்தான் காணோமுன்னு


கடலை காட்டுக்குள்ள கையடிச்சு சொன்ன புள்ள
காத்துல எழுதணும் பொம்பளைங்க சொன்ன சொல்ல
துணையத்தான் காணோமுன்னு
கடலை காட்டுக்குள்ள கையடிச்சு சொன்ன புள்ள
காத்துல எழுதணும் பொம்பளைங்க சொன்ன சொல்ல


ராசாத்தி என் உசுரு என்னதில்ல
ம்.... ம்....
பூச்சூடி வாக்கப்பட்டு போற புள்ள
ம்.... ம்....
நீ போனா என் உடம்பு மண்ணுக்குள்ள
ம்.... ம்....
ராவோடு சேதி வரும் வாடி புள்ள
ம்.... ம்....
ராசாத்தி என் உசுரு என்னதில்ல
ம்.... ம்....
பூச்சூடி வாக்கப்பட்டு போற புள்ள





Popular Posts