Showing posts with label George Vishnu. Show all posts
Showing posts with label George Vishnu. Show all posts

Monday, March 31, 2014

காதல் ரோஜாவே - மனம் போன போக்கில்

படம் : காதல் ரோஜாவே (1997)
இசை : இளையராஜா
பாடியவர்கள் : S.P. பாலசுப்ரமணியம், K.S.சித்ரா






மனம் போன போக்கில் போனேன் என் பாதையில்
விடிவெள்ளி ஒன்று கண்டேன் அதிகாலையில்
யார் நம்மை சேர்த்து வைத்தது
நம் கையில் என்ன உள்ளது
புது அன்பு ஒன்று தானே விளையாடுது
அது நெஞ்சில் இன்று தானே புதிர் போடுது


நீரில்லாத பாலையில் நிலவு போல நீயடி
நின்று காண இயலா வழிபோக்கன் நானடி

நீ மறுத்த போதிலும் உன்னை தொடரும் வெண்ணிலா
அமுத ஒளியை வீசும் தினம் உந்தன் காலடி

கடல் நீரில் தாகம் தீருமா
கதைகள் இங்கு வாழ்க்கையாகுமா
மனம் போன போக்கில் போனேன் என் பாதையில்
விடிவெள்ளி ஒன்று கண்டேன் அதிகாலையில்
யார் நம்மை சேர்த்து வைத்தது
நம் கையில் என்ன உள்ளது
புது அன்பு ஒன்று தானே விளையாடுது
அது நெஞ்சில் இன்று தானே புதிர் போடுது


காதல் வரிகள் பாடினால் கானல் வரிகள் ஆகுமா
உனது கைகள் மீட்டும் புது பொன்னின் வீணை நான்

வசந்த காலம் போனபின் குயில்கள் கூவ கூடுமோ
வந்து போகும் வசந்தம் வாழ்வில் என்று தோன்றுமோ

கடலோரம் ஆடும் நீரலை
ஒரு போதும் ஓய்வதில்லையே
மனம் போன போக்கில் போனேன் என் பாதையில்
விடிவெள்ளி ஒன்று கண்டேன் அதிகாலையில்

யார் நம்மை சேர்த்து வைத்தது

நம் கையில் என்ன உள்ளது

இது பிரிந்து போகும் நேரம் வழி அனுப்பவா
உன்னை அறிந்து கொண்ட நேரம் நீ சென்று வா


Popular Posts