Tuesday, April 28, 2020

Anbe Sivam - Mouname Paarvaiyai

படம்: அன்பே சிவம் (2003)
இசை: வித்யாசாகர்
பாடியவர்கள்: S.P.பாலசுப்ரமணியம்,  சந்தராயீ
பாடல்வரிகள்: பா.விஜய்





மௌனமே பார்வையாய் பேசி கொண்டோம்
நாண‌மே வண்ணமாய் பூசி கொண்டோம்

புன்னகை புத்தகம் வாசிக்கின்றோம்
என்னில்லே உன்னையே ஸ்வாசிக்கின்றோம்

இது உள்ளம் பல வண்ண்ங்களை அள்ளும்
சில எண்ண‌ங்களை சொல்லும் துள்ளும் கண்ணம்மா
மௌனமே பார்வையாய் பேசி கொண்டோம்
நாண‌மே வண்ணமாய் பூசி கொண்டோம் கண்ணம்மா...


ஜனனம் தந்தாய் சலனம் தந்தாய் காதல் மொழியில்

மரணம் கொஞ்சம் மயக்கம் கொஞ்சம் உந்தன் த‌ர‌வில்

என்றும் வாழ்க வாழ்க இந்த‌ நேரங்கள்...
சுகம் சேர்க சேர்க வரும் காலங்கள்...
மலர் சூழ்க சூழ்க இவர் பாதைகள்...
தினம் வெல்க வெல்க இளம் ஆசைகள்...

ஒரு சேதி அடி நீயென்பதென் பாதி
இனி நானென்பதுன் மீதி தேதி சொல்லம்மா...

மௌனமே பார்வையாய்.....
மௌனமே பார்வையாய் பேசிக்கொண்டோம்

நாணமே வண்ணமாய் பூசிக்கொண்டோம்
கண்ணம்மா...


இலக்கணம் உடைத்ததும் கவிதை வரும்
இரவினை துடைத்ததும் கனவு வரும்

ஸ்வரங்களை திறந்ததும் இசை மலரும்
உணர்விலே கரைந்த‌தும் கலை வளரும்

மொழி தோன்றாத காலத்தில் நுழைந்தாலென்ன
விழி ஜாடைகள் பேசியே நடந்தாலென்ன

என்றும் வாழ்க வாழ்க இந்த‌ நேரங்கள்...
சுகம் சேர்க சேர்க வரும் காலங்கள்...
மலர் சூழ்க சூழ்க இவர் பாதைகள்...
தினம் வெல்க வெல்க இளம் ஆசைகள்...

ஒரு மெல்லினத்தை வல்லினமும் கைசேர
ஒரு காப்பியத்தை தோழி உந்தன் கண்ணாலே பேசு
மௌனமே பார்வையாய் பேசிக்கொண்டோம்

நாணமே வண்ணமாய் பூசிக்கொண்டோம்

புன்னகை புத்தகம் வாசிக்கின்றோம்
என்னிலே உன்னையே சுவாசிக்கின்றோம்
இரு உள்ளம்

பல வண்ணங்களை அள்ளும்

சில எண்ணங்களை சொல்லும்

துள்ளும்

கண்ணம்மா...

Popular Posts