Saturday, November 10, 2018

Kalloori - Unnarugil Varugaiyil

ப‌டம் : கல்லூரி (2007)
இசை : ஜோஷ்வா ஸ்ரீதர்
பாடியவர் : ஹரிசரண், ஹரிணி சுதாகர்
பாடல்வரிகள் : நா.முத்துகுமார்


Image result for Kalloori



உன்னருகில் வருகயில் உள்ளே ஒர் பரவசம்
உன்னாலே தோழனே நானில்லை என்வசம்

உன்னருகில் வருகயில் உள்ளே ஒர் பரவசம்
உன்னாலே தோழனே நானில்லை என்வசம்
உன் பேரை கேக்கையிலே உற்சாகம் துளிர்விடுதே
உன் நிழலை தேடயிலே என் நிழலும் தொடருது இன்று
எப்போது மாறினேன் என்னை நான் மீறினேன்
என் நெஞ்சை கேக்கிறேன் பதில் சொல்லிடுமே...

உன்னருகில் வருகயில் உள்ளே ஒர் பரவசம்
உன்னாலே தோழனே நானில்லை என்வசம்
உன்னருகில் வருகயில் உள்ளே ஒர் பரவசம்
உன்னாலே தோழனே நானில்லை என்வசம்


உன் கண்கள் மீது ஓரு பூட்டு வைத்து பூட்டும் போதும்
உன் இதயம் தாண்டி வெளியே வருவேன் பெண்ணே
நீ பயண‌ம் போகும் பாதை வேண்டாம் என்று சொல்லும் போதும்
உன் கால்கள் வருமே வருவதை தடுத்திட முடியாது


என்னுடன் என் மனம் என் உற‌வெல்லாம் 
இன்று புதிதாக உருமாறும்
நண்பர்கள் பேசும் வார்தைகள் எல்லாம்
காதில் நுழையாமல் வெளியேரும்
இது அன்பால் வருகிற அவஸ்தைகளா
இல்லை உன்மேல் வருகிற‌ ஆசைகளா
இதுவரை சேர்த்த இன்பம் துன்பங்களை
உன்னுட‌ன் பகிர்ந்திட துடிக்கிறேன்
இது என்ன இது என்ன புது மயக்கம்
இரவோடும் பகலோடும் என்னை எரிக்கும்



கனவினில் தினம்தினம் பூத்திடும் பூக்களை
கைகளில் பறித்திட முடிந்திடுமா?
எதிரினில் பேசிட தயங்கிடும் வார்த்தைகள்
சொன்னால் அது புரிந்திடுமா?
கடவுளின் இருப்பிடம் காதலின் ரகசியம்
இருதயம் அறிந்திட முடிந்திடுமா?
இடம் பொருள் ஏவலும் இதயத்தின் காவலும்
இன்றே மெல்ல மீறிடுமா?

உன் கண்கள் காட்டும் திசையோடு
காரண‌மின்றி தெரிகின்றேன்
உந்த‌ன் பார்வை எந்தன் மீது விழ‌ 
ஏனோ நானும் காத்திருப்பேன்
வெளியே சொன்னால் ரகசியமா 
என் நெஞ்சில் உறுத்துகிறாய் நீயே
சொல்லாமல் நான் மறைத்தாலும்
என் கண்ணின் மணிகள் உன்னை காட்டிவிடும்

Popular Posts