படம் : காளி (2018)
இசை : விஜய் ஆண்டனி
பாடியவர் : ஹேமசந்திரா, சங்கீதா ராஜேஸ்வரன்
பாடல் வரி : அருண் பாரதி
நூறாய் யுகம் நூறாய்
உனக்காய் பிறப்பேன்
கண்ணின் இமை போல
துணையாய் இருப்பேன்
ஈடாய் உனக்கு ஈடாய்
எனை நான் கொடுப்பேன்
ஏதும் உனக்கு என்றால்
உயிரால் தடுப்பேன்
நீ கடவுளின் பரிசென கரங்களில் வர
தவமென்ன புரிந்தேன் உனையிங்கு பெற
வரமென கிடைத்தவள் உனக்கென்ன தர
உடலுக்குள் இறங்கிடு உயிரினை பெற
நூறாய் யுகம் நூறாய்
உனக்காய் பிறப்பேன்
கண்ணின் இமைப் போல
துணையாய் இருப்பேன்
பள்ளம் சேரும் வெள்ளம் போலே
உனை நிறைத்திடுவேன்... தோழி
செல்லம் கொஞ்சும் உந்தன் திமிரை
கட்டி அணைத்திடுவேன்...
உள்ளத்தாலும் உடலின் மீதும்
உன்னை சுமந்திடுவேன்... தோழா
உலகம் அழியும் போதும் நானோ
உன்னை நினைத்திடுவேன்
இதயத்தின் மைய பகுதியில்
இருக்கை விரித்து அமர்ந்தாய்
உலகத்தின் மொத்த மகிழ்ச்சியும்
ஒருத்தி வடிவில் கொடுத்தாய்
உந்தன் மடியில் நிரந்தரமாக
எனக்கு இடம் கொடுத்தாய்... தோழி
தெய்வம் வந்து நின்றால் கூட
திரும்பிட மறுத்தேன்
உனக்கு மட்டும் தானே
எந்தன் இருதயம் துடிக்கும்... தோழா..
உறங்கும் போதோ எந்தன் உதடோ
உந்தன் பெயர் அழைக்கும்
உனக்குள்ளே எனை புதைப்பதால்
திரும்பி திரும்ப பிறப்பேன்
வழி துணை நீ இருப்பதால்
இறுதி வரைக்கும் நடப்பேன்
நூறாய் யுகம் நூறாய்
உனக்காய் பிறப்பேன்
கண்ணின் இமைப் போல
துணையாய் இருப்பேன்
ஈடாய் உனக்கு ஈடாய்
எனை நான் கொடுப்பேன்
ஏதும் உனக்கு என்றால்
உயிரால் தடுப்பேன்
நீ கடவுளின் பரிசென கரங்களில் வர
தவமென்ன புரிந்தேன் உனையிங்கு பெற
வரமென கிடைத்தவள் உனக்கென்ன தர
உடலுக்குள் இறங்கிடு உயிரினை பெற
நூறாய் யுகம் நூறாய்
உனக்காய் பிறப்பேன்
கண்ணின் இமைப் போல
துணையாய் இருப்பேன்
இசை : விஜய் ஆண்டனி
பாடியவர் : ஹேமசந்திரா, சங்கீதா ராஜேஸ்வரன்
பாடல் வரி : அருண் பாரதி
நூறாய் யுகம் நூறாய்
உனக்காய் பிறப்பேன்
கண்ணின் இமை போல
துணையாய் இருப்பேன்
ஈடாய் உனக்கு ஈடாய்
எனை நான் கொடுப்பேன்
ஏதும் உனக்கு என்றால்
உயிரால் தடுப்பேன்
நீ கடவுளின் பரிசென கரங்களில் வர
தவமென்ன புரிந்தேன் உனையிங்கு பெற
வரமென கிடைத்தவள் உனக்கென்ன தர
உடலுக்குள் இறங்கிடு உயிரினை பெற
நூறாய் யுகம் நூறாய்
உனக்காய் பிறப்பேன்
கண்ணின் இமைப் போல
துணையாய் இருப்பேன்
பள்ளம் சேரும் வெள்ளம் போலே
உனை நிறைத்திடுவேன்... தோழி
செல்லம் கொஞ்சும் உந்தன் திமிரை
கட்டி அணைத்திடுவேன்...
உள்ளத்தாலும் உடலின் மீதும்
உன்னை சுமந்திடுவேன்... தோழா
உலகம் அழியும் போதும் நானோ
உன்னை நினைத்திடுவேன்
இதயத்தின் மைய பகுதியில்
இருக்கை விரித்து அமர்ந்தாய்
உலகத்தின் மொத்த மகிழ்ச்சியும்
ஒருத்தி வடிவில் கொடுத்தாய்
உந்தன் மடியில் நிரந்தரமாக
எனக்கு இடம் கொடுத்தாய்... தோழி
தெய்வம் வந்து நின்றால் கூட
திரும்பிட மறுத்தேன்
உனக்கு மட்டும் தானே
எந்தன் இருதயம் துடிக்கும்... தோழா..
உறங்கும் போதோ எந்தன் உதடோ
உந்தன் பெயர் அழைக்கும்
உனக்குள்ளே எனை புதைப்பதால்
திரும்பி திரும்ப பிறப்பேன்
வழி துணை நீ இருப்பதால்
இறுதி வரைக்கும் நடப்பேன்
நூறாய் யுகம் நூறாய்
உனக்காய் பிறப்பேன்
கண்ணின் இமைப் போல
துணையாய் இருப்பேன்
ஈடாய் உனக்கு ஈடாய்
எனை நான் கொடுப்பேன்
ஏதும் உனக்கு என்றால்
உயிரால் தடுப்பேன்
நீ கடவுளின் பரிசென கரங்களில் வர
தவமென்ன புரிந்தேன் உனையிங்கு பெற
வரமென கிடைத்தவள் உனக்கென்ன தர
உடலுக்குள் இறங்கிடு உயிரினை பெற
நூறாய் யுகம் நூறாய்
உனக்காய் பிறப்பேன்
கண்ணின் இமைப் போல
துணையாய் இருப்பேன்