படம்: டிக் டிக் டிக் (2018)
இசை: D. இமான்
பாடியவர்கள்: மிருதுலா சிவா
பாடல் வரிகள்: மதன் கார்க்கி
குறும்பா... குறும்பா...
குறும்பா... குறும்பா...
வலிகள் மகிழ்ந்தேன் உன்னால்
பல நாள் சிரித்தேன் உன்னால்
சில நாள் அழுதேன் உன்னாலே
எனை நான் உணர்ந்தேன் உன்னால்
எடையும் குறைந்தேன் உன்னால்
வரங்கள் நிறைந்தேன் உன்னாலே
கோபம் வந்தால் என்னை அடிப்பான்
நான் இறுகிடுவேன்
கட்டி கொண்டு முத்தம் கொடுப்பான்
நான் உருகிடுவேன்... உருகிடுவேன்
குறும்பா... என் உலகம் நீதான்டா
குறும்பா... என் விடியல் நீதான்டா
குறும்பா... என் உலகம் நீதான்டா
குறும்பா... என் விடியல் நீதான்டா
பள்ளிக்குள் நீ புகும் போதோ வெற்றிடமாகும் நெஞ்சம்
உன் பள்ளி விடுமுறை என்றால் அஞ்சும்
சாப்பிட கூப்பிடதானே எத்தனை கோடி லஞ்சம்
ஆனாலும் தட்டில் பாதி எஞ்சும்
எந்தன் ஆடை எல்லாமே
கசங்கி கிழியும் உன்னால்
எந்தன் கன்னம் ரெண்டோடு
முத்த தழும்பும் உன்னால்
உந்தன் குறும்பு மரபணு எவ்வழி
கொண்டாய் எனக்கு தெரியாதா?
குறும்பா... என் உலகம் நீதான்டா
குறும்பா... என் விடியல் நீதான்டா
குறும்பா... என் உலகம் நீதான்டா
குறும்பா... என் விடியல் நீதான்டா
குளியல் அறையில் ஒரு போர்
கார்ட்டூன் நிறுத்த ஒரு போர்
தினமும் போர்கள் நம்முள்ளே
பனிகூழ் பகிர ஒரு போர்
இரவில் உறங்க ஒரு போர்
அழகாய் போர்கள் நம்முள்ளே
விண்ணை விட்டு என்னில் வந்தாயே
என் உளம் குளிர
அன்னை என்று பட்டம் தந்தாயே
நான் தலை நிமிர... தலை நிமிர
குறும்பா... என் உலகே நீதான்டா
குறும்பா... என் விடியல் நீதான்டா
குறும்பா... என் உதிரம் நீதான்டா
குறும்பா... என் உயிரே நீதான்டா
இசை: D. இமான்
பாடியவர்கள்: மிருதுலா சிவா
பாடல் வரிகள்: மதன் கார்க்கி
குறும்பா... குறும்பா...
குறும்பா... குறும்பா...
வலிகள் மகிழ்ந்தேன் உன்னால்
பல நாள் சிரித்தேன் உன்னால்
சில நாள் அழுதேன் உன்னாலே
எனை நான் உணர்ந்தேன் உன்னால்
எடையும் குறைந்தேன் உன்னால்
வரங்கள் நிறைந்தேன் உன்னாலே
கோபம் வந்தால் என்னை அடிப்பான்
நான் இறுகிடுவேன்
கட்டி கொண்டு முத்தம் கொடுப்பான்
நான் உருகிடுவேன்... உருகிடுவேன்
குறும்பா... என் உலகம் நீதான்டா
குறும்பா... என் விடியல் நீதான்டா
குறும்பா... என் உலகம் நீதான்டா
குறும்பா... என் விடியல் நீதான்டா
பள்ளிக்குள் நீ புகும் போதோ வெற்றிடமாகும் நெஞ்சம்
உன் பள்ளி விடுமுறை என்றால் அஞ்சும்
சாப்பிட கூப்பிடதானே எத்தனை கோடி லஞ்சம்
ஆனாலும் தட்டில் பாதி எஞ்சும்
எந்தன் ஆடை எல்லாமே
கசங்கி கிழியும் உன்னால்
எந்தன் கன்னம் ரெண்டோடு
முத்த தழும்பும் உன்னால்
உந்தன் குறும்பு மரபணு எவ்வழி
கொண்டாய் எனக்கு தெரியாதா?
குறும்பா... என் உலகம் நீதான்டா
குறும்பா... என் விடியல் நீதான்டா
குறும்பா... என் உலகம் நீதான்டா
குறும்பா... என் விடியல் நீதான்டா
குளியல் அறையில் ஒரு போர்
கார்ட்டூன் நிறுத்த ஒரு போர்
தினமும் போர்கள் நம்முள்ளே
பனிகூழ் பகிர ஒரு போர்
இரவில் உறங்க ஒரு போர்
அழகாய் போர்கள் நம்முள்ளே
விண்ணை விட்டு என்னில் வந்தாயே
என் உளம் குளிர
அன்னை என்று பட்டம் தந்தாயே
நான் தலை நிமிர... தலை நிமிர
குறும்பா... என் உலகே நீதான்டா
குறும்பா... என் விடியல் நீதான்டா
குறும்பா... என் உதிரம் நீதான்டா
குறும்பா... என் உயிரே நீதான்டா