Friday, June 21, 2013

நீதானா அந்தக்குயில் - பூஜைக்கேத்த பூவிது

படம்: நீதானா அந்தக்குயில் (1986)
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கங்கை அமரன், K.S.சித்ரா
பாடல்வரிகள்: வைரமுத்து






பூஜைக்கேத்த பூவிது நேத்துத்தான பூத்தது
அட பூத்தது யாரத பாத்தது

மேல போட்ட தாவணி சேலையாகிப் போனது


சேலையிழுத்து விடுவதே வேலையாகிப் போனது


கொக்கு ஒண்ணு கொக்கி போடுது ஹோய்


பூஜைக்கேத்த பூவிது நேத்துத்தான பூத்தது
பூத்தது யாரத பாத்தது



பாவாடை கட்டயில பாத்தேனே மச்சம்
ஆனாலும் நெஞ்சுக்குள்ள ஏதோ அச்சம்


நோகாம பாத்துப்புட்ட வேறென்ன மிச்சம்
கல்யாணம் கட்டிக்கிட்டா இன்னும் சொச்சம்


அச்சு வெல்லப் பேச்சுல ஆளத் தூக்குற
கொஞ்ச நேரம் பாருன்னா கூலி கேக்குற


துள்ளிப் போகும் புள்ளி மான மல்லு வேட்டி இழுக்குது
மாமன் பேசும் பேச்சக் கேட்டு வேப்பங்குச்சி இனிக்கிது


பூஜைக்கேத்த பூவிது நேத்துத்தான பூத்தது
பூத்தது யாரத பாத்தது



ஊரெல்லாம் உன்னப் பத்தி வெறும் வாய மெல்ல
தோதாக யாருமில்ல தூது சொல்ல


வாய் வார்த்தை பொம்பளைக்கி போதாது புள்ள
கண் ஜாடை போல ஒரு பாஷையில்ல


சுத்திச் சுத்தி வந்து நீ சோப்பு போடுற
கொட்டிப் போன குடுமிக்கு சீப்பு தேடுற


என்னப் பார்த்து என்ன கேட்ட ஏட்ட ஏன்டி மாத்துற
கால நேரம் கூடிப் போச்சு மாலை வந்து மாத்துற


பூஜைக்கேத்த பூவிது நேத்துத்தான பூத்தது
அட பூத்தது யாரத பாத்தது

மேல போட்ட தாவணி சேலையாகிப் போனது


சேலையிழுத்து விடுவதே வேலையாகிப் போனது


கொக்கு ஒண்ணு கொக்கி போடுது ஹோய்


பூஜைக்கேத்த பூவிது


நேத்துத்தான பூத்தது


பூத்தது யாரத பாத்தது



Popular Posts