Monday, May 27, 2013

குட்டி புலி - அருவாகாரன்...

படம் : குட்டி புலி (2013)
இசை : M. ஜிப்ரான்
பாடியவர்கள் : பத்மலதா, கௌசிகி சக்கரபார்தி
பாடல்வரிகள் : வைரமுத்து






அருவாகாரன்... அழகன் பேரன்...
அடிநெஞ்ச தேய்ச்சு போனான் தாடிகாரன்
ஆந்த கண்ணன்... அழுக்கு லுங்கி...
ஆனாலும் ஆச வைக்கும் மீசகாரன்
இரை வைத்து சிக்காத பறவ போல
என் கையில் சிக்கலையே இளையன் காளை
ஓடும் நீரு காடு கரையும் கூட வார நிழல போல

அருவாகாரன்... அழகன் பேரன்...
அடிநெஞ்ச தேய்ச்சு போனான் தாடிகாரன்
ஆந்த கண்ணன்... அழுக்கு லுங்கி...
ஆனாலும் ஆச வைக்கும் மீசகாரன்


ஆ... ஆ... ஆ... ஆ...
கிறுகிறு கிறுவென வருகுது ஒரு கீழ் பார்வ பாக்கையில
விறுவிறு விறுவென உருகுது மனம் வேரசா நீ போகையில
போகுதே உயிர் பாதியிலே
போ.. போ..  போகுதே உயிர் பாதியிலே
வெடவெட வெடவென விறு விறுவென மேற்காத்து வீசயில
மடமட மடவென சரியுது ஒரு மாராப்பு ஆசையில
பூக்கவா உன் சாலையில
தங்கம் நான் என்ன தேய்க்க வா
தாலியில் கட்டி மேய்க்க வா
ஏங்கும் நெஞ்ச வாங்கி கொள்ள வாடா வாடா

அருவாகாரன்... அழகன் பேரன்...
அடிநெஞ்ச தேய்ச்சு போனான் தாடிகாரன்
ஆந்த கண்ணன்... அழுக்கு லுங்கி...
ஆனாலும் ஆச வைக்கும் மீசகாரன்


பட படவென பொளம்புது பொண்ணு பனங்காட்டு மழையாக
நழுவுது ஒதுங்குது பதுங்குது மனம் நரி கண்ட நண்டாக
ஓடுதே உயிர் நீராக...
கருவிழி கிறங்குது மயங்குது சிறு கண் பாரு நேராக
கல கலவென ஒரு சொல்லு சொல்லு யார் பாக்க போறாக
தேயுதே உடல் நாராக....
தே... தே... தேயுதே உடல் நாராக
கோணலாய் மனம் ஆனதே
நாணலாய் அது சாயுதே
ஆன்னாகயிரில் தாலி கட்ட வாடா வாடா

அருவாகாரன்... அழகன் பேரன்...
அடிநெஞ்ச தேய்ச்சு போனான் தாடிகாரன்
ஆந்த கண்ணன்... அழுக்கு லுங்கி...
ஆனாலும் ஆச வைக்கும் மீசகாரன்
இரை வைத்து சிக்காத பறவ போல
என் கையில் சிக்கலையே இளையன் காளை
ஓடும் நீரு காடு கரையும் கூட வார நிழல போல


Popular Posts