Tuesday, March 26, 2013

Taj Mahal - Kulirudhu Kulirudhu

படம்: தாஜ் மஹால் (1999)
இசை: A.R.ரஹ்மான்
பாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன், ஸ்வர்ணலதா
பாடல்வரிகள்: வைரமுத்து

குளிருது குளிருது இரு உயிர் குளிருது காதல் உறவாடி
நகருது நகருது ஒரு விரல் நகருது மோட்ச வழி தேடி
கடலலை தீ பிடித்தால் மீன்களின் கனவுகள் கலைவதில்லை
ஊர்களில் தீ பிடித்தால் காதலில் உறவுகள் எரிவதில்லை

குளிருது குளிருது இரு உயிர் குளிருது காதல் உறவாடி
நகருது நகருது ஒரு விரல் நகருது மோட்ச வழி தேடி

இதயத்தில் வலி ஒன்று வருது
உன் இமைகளின் முடி கொண்டு தடவு

நெஞ்சிக்குள்ளும் எரியுது நெருப்பு
இதை நீர் கொண்டு அணைப்பது உன் பொறுப்பு

இது தண்ணீர் ஊற்றியா தீரும்
நான் பன்னீர் ஊற்றினால் மாறும்

தேகங்கள் பரிமாற நம் உள்ளங்கள் இடமாறும்

பேரின்ப பூஜைகளே உன் பெண்மைக்கு பரிகாரம்

மழை இல்லாமலும் தென்றல் சொல்லாமலும்

நம் நெஞ்சுக்குள் இப்போது லட்சம் பூ மலரும்

குளிருது குளிருது இரு உயிர் குளிருது காதல் உறவாடி
நகருது நகருது ஒரு விரல் நகருது மோட்ச வழி தேடி

நெஞ்சுக்குழி விட்டு விட்டு துடிக்கும்
அடி நெருப்புக்குள் ஏன் இந்த நடுக்கம்

முகத்துக்கும் முத்தத்துக்கும் சண்டையா
அட முத்தமிட வேறு இடம் இல்லையா

மழைத்துளி மழைத்துளி தொல்லையா
அட அடை மழை காக்க எண்ணம் இல்லையா

சுற்றி எல்லாம் எரிகிற போது
நாம் இன்பம் கொள்வது தீது

அடி பூகம்ப வேளையிலும்
இரு வான்கோழி களவி கொள்ளும்

தேகத்தை அணைத்து விடு 
சுடும் தீ கூட அணைந்துவிடும்
அட உன் பேச்சிலும் விடும் உன் மூச்சிலும்

சுற்றி நின்றாலும் தீவண்ணம் அணைவது தின்னம்

குளிருது குளிருது இரு உயிர் குளிருது காதல் உறவாடி
நகருது நகருது ஒரு விரல் நகருது மோட்ச வழி தேடி
கடலலை தீ பிடித்தால் மீன்களின் கனவுகள் கலைவதில்லை
ஊர்களில் தீ பிடித்தால் காதலில் உணர்வுகள் எரிவதில்லை

Popular Posts