Friday, February 1, 2013

ஜீன்ஸ் - கண்ணோடு காண்பதெல்லாம்

படம் : ஜீன்ஸ் (1998)
இசை : A.R.ரஹ்மான்
பாடியவர்கள் : நித்யஸ்ரீ
பாடல்வரிகள் : வைரமுத்து





ப பனி பனிபம பனிபம கமப... சகசனி பனிபம கமகசகமப
ப பனி பனிபம பனிபம கமப... சகசனி பனிபம கமகசகமப
தகட தகட தகதிம்... தகட தகட தகதிம்...
தகட தகட தகதிம்... தகஜம் 
தகட தகட தகதிம்... தகட தகட தகதிம்...
தகட தகட தகதிம்... தகஜம் 


கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா
கண்களுக்குச் சொந்தமில்லை
கண்களுக்குச் சொந்தமில்லை
கண்ணோடு மணியானாய் அதனால்
கண்ணைவிட்டுப் பிரிவதில்லை
நீ என்னைவிட்டு பிரிவதில்லை


தகட தகட தகதிம்... தகட தகட தகதிம்...
தகட தகட தகதிம்... தகஜம் 
தகட தகட தகதிம்... தகட தகட தகதிம்...
தகட தகட தகதிம்... தகஜம் 



சலசல சலசல இரட்டைக்கிளவி
தகதக தகதக இரட்டைக்கிளவி
உண்டல்லோ தமிழில் உண்டல்லோ
பிரித்து வைத்தல் நியாயம் இல்லை
பிரித்து பார்த்தால் பொருளும் இல்லை
இரண்டல்லோ இரண்டும் ஒன்றல்லோ


தினக்கு தினக்கு தின தில்லில்லா நா
நாகிருதானி தோங்கிருதானி தினதோம்
தினக்கு தினக்கு தின தில்லில்லா நா
நாகிருதானி தோங்கிருதானி தினதோம்


இரவும் பகலும் வந்தாலும்
நாள் என்பது ஒன்றல்லோ
கால்கள் இரண்டு கொண்டாலும்
பயணம் என்பது ஒன்றல்லோ
இதயம் இரண்டு என்றாலும்
காதல் என்பது ஒன்றல்லோ
கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா
கண்களுக்குச் சொந்தமில்லை
கண்களுக்குச் சொந்தமில்லை


தகட தகட தகதிம்... தகட தகட தகதிம்...
தகட தகட தகதிம்... தகஜம் 
தகட தகட தகதிம்... தகட தகட தகதிம்...
தகட தகட தகதிம்... தகஜம் 

அன்றில் பறவை இரட்டைப் பிறவி
ஒன்றில் ஒன்றாய் வாழும் பிறவி
பிரியாதே விட்டுப் பிரியாதே
கண்ணும் கண்ணும் இரட்டைப் பிறவி
ஒரு விழி அழுதால் இருவிழி அருவி 
பொழியாதோ அன்பே வழியாதோ


தினக்கு தினக்கு தின தில்லில்லா நா
நாகிருதானி தோங்கிருதானி தினதோம்
தினக்கு தினக்கு தின தில்லில்லா நா
நாகிருதானி தோங்கிருதானி தினதோம்

ஒருவர் தூங்கும் தூக்கத்தில்
இருவர் கனவுகள் காணுகிறோம்
ஒருவர் வாங்கும் சுவாசத்தில்
இருவர் இருதயம் வாழுகிறோம்
தாங்கிக்கொள்ள மட்டும்தான்
தனித் தனியே தேடுகின்றோம்


ம ம க க ம ம ச ச க க ச ச க க நி நி
ச க க ச ம ம ச க க ச ப ப ச க க ச நி
நி ச க க ச சா நி த ப ம க
க ம ப நி சா க ரி சா ச நி ட ப ம க ரி ச ரி ம


கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா....


ரி ரி  ச நி ச ரி ரி ச ச ரி ரி நி நி
ச ச க ரி ச நி சி க ரி ச நி ச
நி த ப ம க நி ச க ச க ம க ம ப
த ப ம நி ம ப ந ச க ரி ச க ரி
ச நி ச நி த ப ம க ரி ச ரி ம


கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா
கண்களுக்குச் சொந்தமில்லை
கண்களுக்குச் சொந்தமில்லை
கண்ணோடு மணியானாய் அதனால்
கண்ணைவிட்டுப் பிரிவதில்லை
நீ என்னைவிட்டு பிரிவதில்லை

Popular Posts