Friday, January 4, 2013

சொல்ல மறந்த கதை - ஏதோ ஒன்னு

படம் : சொல்ல மறந்த கதை (2002)
இசை : இளையராஜா
பாடியவர் : கார்த்திக், பவதாரணி
பாடல் வரிகள் : இளையராஜா





ஏதோ ஒன்னு நினச்சிருந்தேன்
ஏதேதோ சொல்ல வாய் எடுத்தேன்
வார்த்தை மறந்ததென்ன
வந்த மயக்கமென்ன
பூங்கிளியே மாங்குயிலே கூறு
பூ மனசில் புகுந்தது யார் நீ கூறு
உண்மைய நீ ரகசியமா பேசு
உள்ளத்துணை உன்னை விட்டா வேறாரு

ஏதோ ஒன்னு நினச்சிருந்தேன்
ஏதேதோ சொல்ல வாய் எடுத்தேன்
வார்த்தை மறந்ததென்ன
வந்த மயக்கமென்ன
பூங்கிளியே மாங்குயிலே கூறு
பூ மனசில் புகுந்தது யார் நீ கூறு
உண்மைய நீ ரகசியமா பேசு
உள்ளத்துணை உன்னை விட்டா வேறாரு

ஏதோ ஒன்னு நினச்சிருந்தேன்
ஏதேதோ சொல்ல வாய் எடுத்தேன்


என்ன சொல்லுது உந்தன் பெண்மை
உள்ளத்தில் உள்ள சங்கதியா சங்கதியா
உண்மை உன் கண்கள் சொல்ல
கண்கள் என் உள்ளம் கொல்ல நிம்மதியா நிம்மதியா

நடப்பத சொல்ல நான் யாரு
நடக்குது உள்ள தகராறு
உள்ளமும் உண்மைய அறியாது
ஒருவருக்கும் இது தெரியாது

போயி வரும் வெண்ணிலவே
நீ தேன் அமுதா நெஞ்சில் தெளிப்பது ஏன்
போய்விட வேணாம் இங்கே நில்லு இப்படியே

ஏதோ ஒன்னு நினச்சிருந்தேன்
ஏதேதோ சொல்ல வாய் எடுத்தேன்


பக்கம் நீ நின்றிருக்க தூரம் என் உள்ளம் செல்லும்
என்னடியோ... ஏனடியோ...
எங்கோ நீ தூரம் நிற்க நெஞ்சில் நீ ஒட்டி நிற்ப
என்னடியோ... ஏனடியோ...

தாளம் எங்கே தெரியாம அடிக்குது அடிக்குது இள மனசு
ராகம் என்னும் கடலினிலே தவிக்குது தவிக்குது அலை அடிச்சு

புது வழியில் மனசு போகையிலே
புது புதுசா எதையோ பாக்கையிலே
பொத்தி வைச்சத புரிய வைக்கவும் தெரியலயே

ஏதோ ஒன்னு நினச்சிருந்தேன்
ஏதேதோ சொல்ல வாய் எடுத்தேன்

வார்த்தை மறந்ததென்ன
வந்த மயக்கமென்ன
பூங்கிளியே மாங்குயிலே கூறு

பூ மனசில் புகுந்தது யார் நீ கூறு

உண்மைய நீ ரகசியமா பேசு

உள்ளத்துணை உன்னை விட்டா வேறாரு

ஏதோ.....

Popular Posts