Wednesday, December 5, 2012

விரும்புகிறேன் - நிஜமா... நிஜமே...


படம்: விரும்புகிறேன் (2002)
இசை: தேவா
பாடியவர்கள்: திப்பு, சாதனாசர்கம்
பாடல்வரிகள்: வைரமுத்து




சிரிச்சா சிரிப்பு வராதடி தோழி
அழுதா அழுக வராதடி தோழி
காயம் பட்டாலும் வலிக்காதடி தோழி
தீ பட்ட விரலும் தித்திக்கும் தோழி

வஞ்சிக்கொடி வாய்த்ததடி 
வயசு பொண்ணுக்குள் முளைத்த புதிய தேசமடி
தெரிஞ்சிக்கடி புரிஞ்சிக்கடி
இது தான் காதல் அறிகுறி என்று அறிஞ்சிக்கடி

நிஜமா... நிஜமே...
சுமையா... சுகமே...
நெஞ்சம் சட்டென்று பூத்தது நிஜமே
நான் திரையில் கண்டதுண்டு இது போன்ற தொல்லை
இது எனக்கே நேர்திடுமா நான் நம்ப வில்லை
பந்த பாசம் விடவும் இந்த நேசம் பெரிதாய்
எந்தன் மனம் எண்ணுகின்றதே... தோழா
நிஜமா... நிஜமே... நிஜமா....


பாறாங்கல் மார்பழகா பாலாடை நிறத்தழகா
பள்ளி கொள்ள உன் மார்பு போதும்
கோயில் சிலை அழகா கொலை செய்யும் கண்ணழகா
கூத்தாட உன் அழகு போதும்
கொஞ்சுடா கொஞ்சம் அள்ளி துள்ள வாடா
அஞ்சு நாள் சொர்க்கம் தினம் தானம் தாடா...

காதல் வந்தால் வெட்கம் வெளியே போய்விடுமா
மான்களுக்கும் புலி போல் ஆசை தோன்றிடுமா... ஹ... ஹ...
நிஜமா... நிஜமே... நிஜமா....

தா தா...  திர தா தா... திர தா தா... தா தா...
தா தா...  திர தா தா... திர தா தா... தா தா...


வஞ்சிக்கொடி வாய்த்ததடி 
உனக்குள் முளைத்த புதிய தேசமடி
தெரிஞ்சிக்கடி புரிஞ்சிக்கடி
இது தான் காதல் அறிகுறி 


****This part is in audio version only***

அரும்பாக இருந்த உள்ளம் இரும்பாக மாறுவது
உன்னாலே நான் அடைந்த மாற்றம்

இரும்பாக இருந்த உள்ளம் கரும்பாக மாறுவது
உன்னாலே நான் அடைந்த மாற்றம்

கொஞ்ச நாளிலே உள்ளம் மாறி போனேன்
கொஞ்சி காட்டவா பாதி ஆணாய் ஆனேன்

காதலியே உன்னில் பாதி நானடியே
கருவிழியே இனி இருவர் வழி ஒரு வழியே ஹே... ஹே...
நிஜமா

நிஜமே

சுமையா

சுகமே... நெஞ்சம் சட்டென்று பூத்தது நிஜமே


நான் திரையில் கண்டதுண்டு இது போன்ற தொல்லை
இது எனக்கே நேர்திடுமா நான் நம்ப வில்லை
பந்த பாசம் விடவும் இந்த நேசம் பெரிதாய்
எந்தன் மனம் எண்ணுகின்றதே... தோழா... தோழி...


Popular Posts