படம்: சொல்வதெல்லாம் உண்மை (ஜீ தமிழ்)
இசை: பால்ராஜ்
பாடியவர்கள்: முகேஷ், பத்மலதா
பாடல் வரி: டாக்டர். கீருத்தியா
சொல்வதெல்லாம்... உண்மை
மெழுகாய் வழிந்தோடும் ஒரு விழியின் கதையில்
மெலிதாய் ஒரு சோகம் அதை அறிவார் எவரோ?
பழுதாய் அலைந்தோடும் ஒரு வாழ்க்கை படகை
முழுதாய் கரை சேர்க்கும் வழி சொல்வார் எவரோ?
சொல்வதெல்லாம் உண்மை
வீட்டில் நான்கு அறைகளா
தீவுப்போல் அவை இருப்பதா
பார்க்கும் பார்வையில் குறைகளா
குமுறல் தான் அவர் மொழிகளா
மோதி கொண்டது இரு இனம்
மீதியை தேடி அலைந்திடும்
பாதிப்பென்ன, பலனென்ன
பேசினால் தெளிவாகலாம்
முரண்களை நீக்கி வரங்களாய்
மாற்றலாம் நிலை மாறலாம் துளி அன்பிலே
சொல்வதெல்லாம்.... உண்மை உண்மை
சொல்வதெல்லாம்... உண்மை