Monday, June 25, 2012

Nizhalgal - Madai Thirandhu

படம் : நிழல்கள் (1980)
இசை : இளையராஜா
பாடியவர் :  S.P. பாலசுப்பிரமணியம்
பாடல் வரி : வைரமுத்து



Image result for Nizhalgal



தன நன....  தன நன..நன....

மடை திறந்து தாவும் நதியலை நான்
மனம் திறந்து கூவும் சிறு குயில் நான்
இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்
நினைத்தது பலித்தது ஹோ...
தன நன... நா...  தன நன..நன.... நா...
தன நன... நா...  தன நன..நன.... நா...

ஹேய்... ஹோ... பபப.... பபபப.....
காலம் கனிந்தது கதவுகள் திறந்தது
ஞானம் விளைந்தது நல்லிசை பிறந்தது
புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே
புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே
விரலிலும் குரலிலும் ஸ்வரங்களின் நாட்டியம்
அமைத்தேன் நான்....

மடை திறந்து தாவும் நதியலை நான்
மனம் திறந்து கூவும் சிறு குயில் நான்
இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்
நினைத்தது பலித்தது ஹோ.....


லல... லா... லல... லலலா....
நேற்றேன் அரங்கிலே நிழல்களின் நாடகம்
இன்றேன் எதிரிலே நிஜங்களின் தரிசனம்
வருங்காலம் வசந்த காலம் நாளும் மங்கலம்
வருங்காலம் வசந்த காலம் நாளும் மங்கலம்
இசைகென இசைகின்ற ரசிகர்கள் ராஜ்ஜியம்
எனக்கே தான்...

மடை திறந்து தாவும் நதியலை நான்
மனம் திறந்து கூவும் சிறு குயில் நான்
இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்
நினைத்தது பலித்தது ஹோ...
லல... லா... லல... லலலா....
லல... லா... லல... லலலா....

Popular Posts