Wednesday, June 6, 2012

பூவெல்லாம் உன் வாசம் - திருமண மலர்கள்



படம் : பூவெல்லாம் உன் வாசம் (2001)
இசை : வித்யா சாகர்
பாடியவர் : ஸ்வர்ணலதா
பாடல் வரி :  வைரமுத்து







திருமண மலர்கள் தருவாயா
தோட்டத்தில் நான் வைத்த பூச்செடியே
தினம் ஒரு கனியே தருவாயா
வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே
மலர்வாய் மலர்வாய் கொடியே
கனிவாய் கனிவாய் மரமே
நதியும் கரையும் அருகே
நானும் அவனும் அருகே
பிறந்த இடம் புகுந்த இடம் வேறு இல்லை
ஞாயிறுக்கும் திங்களுக்கும் தூரம் இல்லை

திருமண மலர்கள் தருவாயா
தோட்டத்தில் நான் வைத்த பூச்செடியே
தினம் ஒரு கனியே தருவாயா
வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே

தாலி கொள்ளும் பெண்கள் தாயை நீங்கும் போது
கண்ணோடு குற்றாலம் காண்பதுண்டு
மாடி கொண்ட ஊஞ்சல் மடிமேல் கொஞ்சும் பூனை
சொல்லாமல் போகின்ற சோகம் உண்டு
அந்த நிலை இங்கே இல்லை அனுப்பி வைக்க வழியே இல்லை
அழுவதற்கு வாய்ப்பே இல்லை அதுதான் தொல்லை
போனவுடன் கடிதம் போடு புதினாவும் கீரையும் சேரு
புத்திமதி சொல்லும் தாயின் மொழியே இல்லை
ஏன் என்றால் சுவர் தான் உண்டு தூரம் இல்லை
இப்படி ஓர் நல்லுறவு வாய்த்திடுமா
வீட்டுக்குள் விண்மீன்கள் காய்த்திடுமா

திருமண மலர்கள் தருவாயா
தினம் ஒரு கனியே தருவாயா
வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே

கன்னம் கிள்ளும் மாமி காதை திருகும் மாமா
என்போல சொந்தங்கள் யார்க்கு உண்டு
மாதம் பத்து செல்ல மழலை பெற்றுக்கொள்ள
அம்மம்மா தாய் வீடு ரெண்டு உண்டு
பாவாடை அவிழும் வயதில் கைறு கட்டிவிட்டவன் எவனோ
தாலி கட்ட வந்தவன் அவனே உறவானவன்
கொழுசு இடும் ஓசை கேட்டே மனசில் உள்ள பாஷை சொல்வாய்
மழை நின்ற மலரை போல பதமானவன்
உறவெல்லாம் ஒன்றாய் ஒன்றாய் கூடியவன்
தெய்வங்களும் எங்களைதான் நேசிக்குமே
தேவதைகள் வாழ்த்து மடல் வாசிக்குமே

திருமண மலர்கள் தருவாயா
தோட்டத்தில் நான் வைத்த பூச்செடியே
தினம் ஒரு கனியே தருவாயா
வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே
மலர்வாய் மலர்வாய் கொடியே
கனிவாய் கனிவாய் மரமே
நதியும் கரையும் அருகே
நானும் அவனும் அருகே
பிறந்த இடம் புகுந்த இடம் வேறு இல்லை
ஞாயிறுக்கும் திங்களுக்கும் தூரம் இல்லை

Popular Posts