படம் : கச்சேரி ஆரம்பம் (2010)
இசை : D. இமான்
பாடியவர்கள் : பலாஷ் சென்
பாடல் வரிகள் : நா.முத்துகுமார்
(Right click & Save Link As)
கடவுளே கடவுளே மீண்டும் நான் பிறந்து விட்டேன் உன்னாலே
கனவிலே கனவிலே வாழ்ந்திட தொடங்கி விட்டேன் தன்னாலே
அர்ச்சனை பூக்கள் எல்லாம் உன் முகம் மேல் தூவ
பூத்திடும் நாள் முதலாய் காத்துக்கொண்டே இருக்கும்
ஆலய மணி ஓசை உந்தன் செவி நுழைய
யார் வந்து அடித்தாலும் ஜோராய் தலை ஆட்டும்
நான் இன்று காண்பதெல்லாம் பொய் இல்லை மெய் தானம்மா
தட்சனை தருவதற்கே உயிரை தந்தாயம்மா

கண்ணை பார்த்ததும் வேகமாய் மின்னல் அடித்தது நெஞ்சிலே
தோளில் சிறகுகள் இன்றியே தேகம் பறக்குது விண்ணிலே
இந்த புது உயிரை நீ தந்ததாய் என் புலன் ஐந்தும் நன்றி சொல்லுது
ஒர் இறகாய் இறகாய் அலைந்து வந்தேன்
உன் இமையின் அழைப்பால் தரையில் வந்தேன்
உன் விரலில் என் மனசும் மோதிரம் ஆகியதே
கடவுளே கடவுளே மீண்டும் நான் பிறந்து விட்டேன் உன்னாலே
கனவிலே கனவிலே வாழ்ந்திட தொடங்கி விட்டேன் தன்னாலே
ஒ... ஒ... ஒ... ஒ...
மண்ணை முதல் முறை பார்த்திட தாயின் கருவறை சொன்னது
என்னை முதல் முறை பார்த்திட உந்தன் கருவிழி சொன்னது
மலை உயரத்திலே நதி தோன்றுமே அது சேரும் இடம் கடலாகுமே
இது உயிரும் உயிரும் பேசும் மொழி
இதை விடவும் சிறந்தது எந்த மொழி
என் உயிரை உன் பாதத்தில் காணிக்கை ஆக்குகிறேன்