Thursday, September 8, 2011

அழகன் - மழையும் நீயே

படம் : அழகன் (1991)
இசை : மரகதமணி
பாடியவர் :  S.P. பாலசுப்பிரமணியம்
பாடல் வரி : வைரமுத்து









மழையும் நீயே வெயிலும் நீயே
நிலவும் நீயே நெருப்பும் நீயே
அடடா உனைத்தான் இங்கு
வாழும் மானிடர் காதல் என்பதா


மழையும் நீயே வெயிலும் நீயே
நிலவும் நீயே நெருப்பும் நீயே
அடடா உனைத்தான் இங்கு
வாழும் மானிடர் காதல் என்பதா


This part is in audio
*******************************************
இது என்ன மண்ணில் கூட நிலவும் வருமா
சரசம் பயிலும் விழியில் வருமே
இது என்ன தென்றல் கூட அனலாய் சுடுமா
தனிமை நினைவில் அனலாய்ச் சுடுதே
பார்க்காமல் மெல்லப் பார்த்தாலே அது தானா காதல் கலை
தோளோடு அள்ளிச் சேர்த்தானே அது தானா மோன நிலை
இது தான் சொர்க்கமா
இது காம தேவனின் யாக சாலையா



மழையும் நீயே வெயிலும் நீயே
நிலவும் நீயே நெருப்பும் நீயே
அடடா உனைத்தான் இங்கு
வாழும் மானிடர் காதல் என்பதா
*******************************************

கலையெல்லாம் கற்று கொள்ளும் பருவம் பருவம்
கடல்நீர் அலைபோல் மனமும் அலையும்
கரு நீலக் கண்கள் ரெண்டும் பவழம் பவழம்
எரியும் விரகம் அதிலே தெரியும்
ஏகாந்தம் இந்த ஆனந்தம் அதன் எல்லை யாரரிவார்
ஏதேதோ சுகம் போதாதோ இந்த ஏக்கம் யாரரிவார்
முதலாய் முடிவாய் இங்கு
என்றும் வாழ்வது காதல் ஒன்று தான்



மழையும் நீயே வெயிலும் நீயே
நிலவும் நீயே நெருப்பும் நீயே
அடடா உனைத்தான் இங்கு
வாழும் மானிடர் காதல் என்பதா

Popular Posts