படம் : சிங்கம் (2010)
இசை : தேவி ஸ்ரீபிரசாத்
பாடியவர் : திப்பு, சுசீத்ரா
பாடியவர் : திப்பு, சுசீத்ரா
பாடல் வரி : நா.முத்துகுமார்
என் இதயம் இதுவரை துடிக்கவில்லை
இப்போ துடிக்கிறதே
என் மனசு இதுவரை பறந்ததில்லை
இப்போ பறக்கிறதே
இது எதனால் எதனால் தெரியவில்லை
அதனால் பிடிக்கிறதே
இது சுகமா வலியா புரியவில்லை
கொஞ்சம் சுகமும் கொஞ்சம் வலியும்
சேர்ந்து துரத்துக்கிறதே
என் இதயம் இதுவரை துடிக்கவில்லை
இப்போ துடிக்கிறதே
என் மனசு இதுவரை பறந்ததில்லை
இப்போ பறக்கிறதே
கூட்டத்தில் நின்றாலும் உன்னையே தேடுது கண்கள்
ஒற்றையாய் போனாலும் உன்னுடன் நடக்குது கால்கள்
தாவணி மோதியே சாயுதே தேரடி
ரெண்டடி நாலடி நூறடி இழுத்தாய்
என் இதயம்... இதயம்... இதயம்...
என் இதயம் இதுவரை துடிக்கவில்லை
இப்போ துடிக்கிறதே
என் மனசு இதுவரை பறந்ததில்லை
இப்போ பறக்கிறதே
உன்னிடம் எப்போதும் உரிமையாய் பழகிட வேண்டும்
வைரமே ஆனாலும் தினம் தினம் தொலைத்திட தூண்டும்
இதுவரை என் நெஞ்சில் இல்லவே இல்லை பயங்கள்
இரண்டு நாள் பார்த்தேனே மிரட்டுதே உந்தன் குணங்கள்
என் இதயம்.... என் இதயம்.....
என் இதயம் இதுவரை துடிக்கவில்லை
இப்போ துடிக்கிறதே
என் மனசு இதுவரை பறந்ததில்லை
இப்போ பறக்கிறதே.....
பறக்கிறதே.... பறக்கிறதே......