Tuesday, July 12, 2011

ஒரு கல்லூரியின் கதை - காதல் என்பது

படம் : ஒரு கல்லூரியின் கதை (2005)
இசை : யுவன் சங்கர் ராஜா
பாடியவர் : ஹரீஸ்ராகவேந்திரா, சின்மயி

பாடல் வரி : நா.முத்துகுமார்








காதல் என்பது கடவுள் அல்லவா
அது கனவு தேசத்தின் கோயில் அல்லவா


காதல் என்றால் பொய்கள் அல்லவா
இரு விழிகள் வாங்கும் வலிகள் அல்லவா


செல்ல பொய்களும் சுகங்கள் அல்லவா
இங்கு விழியின் வலிகளும் வரங்கள் அல்லவா


வரங்கள் என்பது வலைகள் அல்லவா
அதில் விழுந்து எழுவது துயரம் அல்லவா


காதல் என்பது கடவுள் அல்லவா
அது கனவு தேசத்தின் கோயில் அல்லவா


காதல் என்றால் பொய்கள் அல்லவா
இரு விழிகள் வாங்கும் வலிகள் அல்லவா




கண்கள் மூடி படுத்தால் கனவில் உந்தன் பிம்பம்
காலை நேரம் எழுந்தால் நினைவில் உந்தன் சுகந்தம்
உனை பார்க்கும் முன்பு நானே வெட்ட வெளியிலே திரிந்தேன்
உன் அருகில் வந்ததால் என் வேடந்தாங்களை உணர்ந்தேன்
உனக்காக தானே உயிர் வாழ்வேன் நானே
நீ இன்றி நானே வெறும் கூடு தானே
தாயோடு உணர்கின்ற வெப்பத்தை நீயே தந்தாய்


காதல் என்பது கடவுள் அல்லவா
அது கனவு தேசத்தின் கோயில் அல்லவா


காதல் என்றால் பொய்கள் அல்லவா
இரு விழிகள் வாங்கும் வலிகள் அல்லவா


காற்றில் ஆடும் கைகள் நெருங்கி நெருங்கி துரத்தும்
விரலைப் பிடித்து நடக்க விருப்பம் நெருப்பை கொழுத்தும்
உந்தன் அருகில் நானும் இருந்தால் நிமிடம் நொடிகள் என கரையும்
என்னை விலகி நீயும் பிரிந்தால் நேரம் பாரமாய் கனக்கும்
உன் அருகில் இருந்தால் என்ன இனி வேண்டும்
உலகம் கையில் வந்ததாய் எண்ணம் ஒன்று தோன்றும்
தாயோடு உணர்கின்ற வெப்பத்தை நீயே தந்தாய்

காதல் வருவது புரிவதில்லையே
அதை கடவுள் கூட தான் அறிவதில்லையே
பூக்கள் பூப்பது தெரிவதில்லையே
அதை யாரும் எங்குமே பார்த்ததில்லையே

Popular Posts