Saturday, April 2, 2011

அல்லி அர்ஜுனா - சொல்லாயோ சோலைக்கிளி




படம் : அல்லி அர்ஜுனா (2001)
இசை : 
A.R. ரஹ்மான்
பாடியவர் : S.P.B, சொர்ணலதா
பாடல் வரி : வைரமுத்து






சொல்லாயோ சோலைக்கிளி
சொல்லும் உந்தன் ஒரு சொல்லில்
உயிர் ஒன்று ஊசல் ஆடுதே

சொல்லாயோ சோலைக்கிளி
சொல்லும் உந்தன் ஒரு சொல்ல்லில்
உயிர் ஒன்று ஊசல் ஆடுதே
இந்த ஊமை நாடகம் முடிந்ததே
குயில் பாடிச்சொல்லுதே நம் காதல் வாழ்கவே

சொல்லாது சோலைக்கிளி
சொல்லிக்கடந்த காதலிது
கண்ணோரம் காதல் பேசுதே

பச்சைக் கிளை இலைகளுக்குள்ளே
ஒற்றைக்கிளி ஒளிதல் போல
இச்சைக்காதல் நானும் மறைத்தேன்

பச்சைக்கிளி மூக்கைப்போல
வெட்கம் உன்னைக்காட்டி கொடுக்க
காதல் உள்ளம் கண்டுபிடித்தேன்

பூவில்லாமல் சோலையில்லை
பொய்யில்லாமல் காதல் இல்லை
பொய்யைச் சொல்லி காதல் வளர்த்தேன்

பொய்யின் கையில் ஆயிரம் பூட்டு
மெய்யின் கையில் ஒத்தைச்சாவி
எல்லா பூட்டும் இன்றே திறந்தேன் ஹோ.. ஹோய்..

சொல்லாது சோலைக்கிளி
சொல்லிக்கடந்த காதலிது
கண்ணோரம் காதல் பேசுதே

ஹோய்..சொல்லாயோ சோலைக்கிளி
சொல்லும் உந்தன் ஒரு சொல்லில்
உயிர் ஒன்று ஊசல் ஆடுதே
இந்த ஊமை நாடகம் முடிந்ததே
குயில் பாடிச்சொல்லுதே நம் காதல் வா..ழ்கவே

சேராத காதலர்கெல்லாம் 
சேர்த்து நாம் காதல் செய்வோம்
காதல் கொண்டு வானை அளப்போம்

புதிய கம்பன் தேடிப்பிடித்து
லவ்வ்வாயனம் எழுதிடச்செய்வோம்
நிலவில் கூடி கவிதைப் படிப்போம்

கொஞ்சம் கொஞ்சம் ஊடல் கொள்வோம்
நெஞ்சும் நெஞ்சும் மோதிக் கொள்வோம்
சண்டை போட்டு இன்பம் வளர்ப்போம்

பூவும் பூவும் மோதிக்கொண்டால்
தேனைத்தானே சிந்திச்சிதறும்
கையில் அள்ளி காதல் குடிப்போம்

Popular Posts