Wednesday, March 16, 2011

Thulluvadho Ilamai - Theenda Theenda

படம் : துள்ளுவதோ இளமை (2002)
இசை : யுவன் சங்கர் ராஜா
பாடியவர் :  பாம்பே ஜெயஸ்ரீ
பாடலாசிரியர் : பா.விஜய்







தீண்ட தீண்ட
பார்வை பார்த்து

எனது உதடுகள் உந்தன் மார்பில்
போகும் ஊர்வலங்கள்


தீண்ட தீண்ட மலர்ந்ததென்ன 
பார்வை பார்த்து கலந்ததென்ன 
தீண்ட தீண்ட மலர்ந்ததென்ன 
பார்வை பார்த்து கலந்ததென்ன 


எனது உதடுகள் உந்தன் மார்பில் 
போகும் ஊர்வலங்கள் 
நகங்கள் கீறியே மூதுகில் எங்கும் 
நூறு ஒவியங்கள் 


எங்கு துவங்கி எங்கு முடிக்க 
எதனை விடுத்து எதனை எடுக்க 
என்ன செய்ய ஏது செய்ய உரச உரச... 


தீண்ட தீண்ட மலர்ந்ததென்ன 
பார்வை பார்த்து கலந்ததென்ன 
தீண்ட தீண்ட மலர்ந்ததென்ன 
பார்வை பார்த்து கலந்ததென்ன 



காதல் தீ எரிய கண்ணில் நீர் வழிய 
நான் நின்றேன் அருகில் நின்றேன்


மெல்ல நமது கால் விரல் 
ஒன்றை ஒன்று தீண்டிட 
என் காது நுனியின் ஒரமாய் 
கொஞ்சம் கொஞ்சம் கூசிட 


உன்னை கலந்துவிட என் உள்ளம் தவித்திட 
கால்கள் பூமியுடன் கல்லாகி கிடந்திட 
வார்த்தை உதடுகளில் வழுக்கி விழுந்திட 
உனக்குள் எனக்குள் நெருப்பு எரிந்திட
தீண்ட தீண்ட மலர்ந்ததென்ன 
பார்வை பார்த்து கலந்ததென்ன 
தீண்ட தீண்ட மலர்ந்ததென்ன
பார்வை பார்த்து கலந்ததென்ன 



காற்று கலைத்துவிடும் கேசம் தள்ளிவிட 
விரல் தீண்ட தீ தீண்ட 
உன்னை தள்ளி விடுவது போல் 
உண்மையாக தீண்டுகிறேன் 
கண்கள் விழித்து பார்க்கையில் 
கனவு நடந்தது அறிகிறேன் 


சற்று முன்பு வரை ஜொலித்த வெண்ணிலா 
மேக போர்வையில் ஒளிந்து கொண்டது
கண்கள் ஒரம் நீர் துளித்து நின்றது
அடித்த காற்று துடைத்து சென்றது 
தீண்ட தீண்ட மலர்ந்ததென்ன 
பார்வை பார்த்து கலந்ததென்ன 
எனது உதடுகள் உந்தன் மார்பில் 
போகும் ஊர்வலங்கள் 
நகங்கள் கீறியே மூதுகில் எங்கும் 
நூறு ஒவியங்கள் 

எங்கு துவங்கி எங்கு முடிக்க 
எதனை விடுத்து எதனை எடுக்க 
என்ன செய்ய ஏது செய்ய உரச உரச...
தீண்ட தீண்ட பார்வை பார்த்து

Popular Posts