Friday, February 25, 2011

புது புது அர்த்தங்கள் - கேளடி கண்மணி




படம் : புது புது அர்த்தங்கள் (1989)
இசை : இளையராஜா

பாடியவர் : S.P.
பாலசுப்பிரமணியம்
பாடல் வரி : வாலி


கேளடி கண்மணி பாடகன் சங்கதி
நீ இதை கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி
ஆஅ...
நாள்முழுதும் பார்வையில் நான் எழுதும்
ஓர் கதையை உனக்கென நான் கூற

கேளடி கண்மணி பாடகன் சங்கதி

நீ இதை கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி


என்னாளும் தானே தேன் விருந்தாவது
பிறர்க்காக நான் பாடும் திரைப்பாடல் தான்
இன்னாளில் தானே நான் இசைத்தேனம்மா
எனக்காக நான் பாடும் முதல் பாடல் தான்
கானல் நீரால் தீராத தாகம்
கங்கை நீரால் தீர்ந்ததடி

நான் போட்ட பூமாலை மணம் சேர்க்கவில்லை
நீதானே எனக்காக மடல் பூத்த முல்லை



கேளடி கண்மணி பாடகன் சங்கதி
நீ இதை கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி


நீங்காத பாரம் என் நெஞ்சோடு தான்
நான் தேடும் சுமைதாங்கி நீயல்லவா
நான் வாடும் நேரம் உன் மார்போடு தான்
நீ என்னைத் தாலாட்டும் தாய் அல்லவா
ஏதோ ஏதோ ஆனந்த ராகம்
உன்னால் தானே உண்டானாது

கால்போன பாதைகள் நான் போனபோது
கைசேர்த்து நீ தானே மெய் சேர்த்த மாது


கேளடி கண்மணி பாடகன் சங்கதி
நீ இதை கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி
ஆஅ...
நாள்முழுதும் பார்வையில் நான் எழுதும்
ஓர் கதையை உனக்கென நான் கூற

கேளடி கண்மணி பாடகன் சங்கதி

நீ இதை கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி


Popular Posts