Friday, January 4, 2013

சொல்ல மறந்த கதை - குண்டு மல்லி

படம் : சொல்ல மறந்த கதை (2002)
இசை : இளையராஜா
பாடியவர் : ஹாரீஸ் ராகவேந்திரா, ஸ்ரேயா கோஷல்
பாடல் வரிகள் : இளையராஜா






குண்டு மல்லி குண்டு மல்லி
குண்டு மல்லி குண்டு மல்லி
தென்றல் காத்து அடிச்சதும் கண்ண தொறக்குது
கண்ணன் கண்ணு பட தேனு சுரக்குது
கையில் நீ எடுத்து மெல்ல தோளில் மாலை கட்டு
கையில் நீ எடுத்து... தோளில் மால கட்டு

குண்டு மல்லி குண்டு மல்லி
தென்றல் காத்து அடிச்சதும் கண்ண தொறக்குது
கண்ணன் கண்ணு பட தேனு சுரக்குது
கையில் நீ எடுத்து மெல்ல தோளில் மாலை கட்டு

ஆ... மஞ்சள் நிலா வானத்திலே அந்தியிலே ஒட்டிக்கிச்சு
குங்குமமும் சேர்ந்துகுச்சு தாங்கிடுமா பிஞ்சு நெஞ்சு

குண்டு மல்லி குண்டு மல்லி
தென்றல் காத்து அடிச்சதும் கண்ண தொறக்குது
கண்ணன் கண்ணு பட தேனு சுரக்குது
கையில் நீ எடுத்து மெல்ல தோளில் மாலை கட்டு


அல்லி தண்டு விரல் மெல்ல மெல்ல
தொடும் வீணை நரம்பினிலே ஹோ... ஓ...
நெஞ்சம் கிள்ளும் இசை துள்ளி வந்து
தொடும் எந்தன் நரம்பினிலே ஹோ... ஓ...

காற்று குழலின் ஓட்டையிலே
கண்டபடி உன் கை படுதே
மூடி திறக்கும் மாயையிலே
மெல்ல என் மூச்சை தான் தொடுதே

காமனும் இந்த காட்டினிலா
வேடிக்கை பாக்குது மஞ்சள் நிலா
மேக பெண்ணே... வந்து மூடிகொள்ளு

குண்டு மல்லி குண்டு மல்லி
தென்றல் காத்து அடிச்சதும் கண்ண தொறக்குது
கண்ணன் கண்ணு பட தேனு சுரக்குது
கையில் நீ எடுத்து மெல்ல தோளில் மாலை கட்டு


சிற்பத்திலும் சின்ன பெண்ணிடத்தில்
இந்த வெட்கம் தெரிகிறதே ஹோ... ஓ...
சிற்பி செய்த அந்த செல்ல பெண்ணுக்கு
அவன் எண்ணம் புரிகிறதே ஹோ... ஓ...

இன்பகலைகள் எத்தனையோ
அது என்று தொடங்கியதாரரிவார்
சொல்லி தரவும் மீதம் உண்டோ
இந்த சொர்க்கக் சுகங்கள் தந்தது யார்

காலங்கள் எங்கே நின்றதுவோ
கண் கொண்டு காதலர் கண்டதுவோ
மின்மினியே... நேரம் என்ன சொல்லு

குண்டு மல்லி குண்டு மல்லி
தென்றல் காத்து அடிச்சதும் கண்ண தொறக்குது
கண்ணன் கண்ணு பட தேனு சுரக்குது
கையில் நீ எடுத்து மெல்ல தோளில் மாலை கட்டு


Popular Posts