Friday, October 5, 2012

சங்கர் குரு - சின்ன சின்னப் பூவே


படம்: சங்கர் குரு (1987)
இசை: சந்திரபோஸ்
பாடியவர்கள்: K.J.ஜேசுதாஸ், S. ஜானகி






லல் லல் லாலா லாலா
லல் லல் லாலா லாலா
லல் லல் லாலா லாலா லல் லல் லா
லல் லா லா லா

ஆஹா ஹா..... ஆ..... ஹா ஹா....
ஓஹோ.... ஹோ.... ம்ம்ம்ம்....

சின்ன சின்னப் பூவே.....
நீ கண்ணால் பாருப் போதும்......

சின்ன சின்னப் பூவே நீ கண்ணால் பாருப் போதும்
தொட்டுத் தொட்டுப் பேசு என் துன்பம் எல்லாம் தீரும்
கண்ணே உன் கைப்பட்டால் காஞ்ச கொடி பிஞ்சு விடும்
பட்ட மரம் பாலூறும் பாகற்காய் தேனூறும்
ஒ... ஒ... ஒஹோ... ஹோ...

சின்ன சின்னப் பூவே நீ கண்ணால் பாருப் போதும்
தொட்டுத் தொட்டுப் பேசு என் துன்பம் எல்லாம் தீரும்

உலகத்தில் பூவெல்லாம் உம் போல அழகில்ல
நானும் உன் அம்மாவும் பண்ணாத தவமில்ல
தென்பாண்டி மன்னவனோ முழுகித்தான் முத்தெடுத்தான்
தேனே உன் அம்மாவோ முழுகாம முத்தெடுத்தா
கண்ணே தெய்வம் கண்டேன் உந்தன் கண்ணே சந்நிதி
உன் முத்தம் பட்ட எச்சில் பட்டா கொஞ்சம் நிம்மதி
சின்ன சின்னப் பூவே நீ கண்ணால் பாருப் போதும்

தொட்டுத் தொட்டுப் பேசு என் துன்பம் எல்லாம் தீரும்

பாப்பா நீ இல்லாம பசி தூக்கம் வாராது
உன் பேச்சைக் கேட்காம ஒரு நாளும் விடியாது
நீ உண்ணப் பால் கிண்ணம் போதாது பொன்மானே
நிலவென்னும் கிண்ணத்தை நான் கொண்டு வருவேனே
பூவும் பூவும் உன்னைப் பார்த்துப் பேசிக் கொண்டது
இந்த காட்டில் ஓடும் ஓடக் கூட உம் பேர் சொன்னது

சின்ன சின்னப் பூவே நீ கண்ணால் பாருப் போதும்
தொட்டுத் தொட்டுப் பேசு என் துன்பம் எல்லாம் தீரும்

கண்ணே உன் கைப்பட்டால் காஞ்ச கொடி பிஞ்சு விடும்
பட்ட மரம் பாலூறும் பாகற்காய் தேனூறும்
ஒ... ஒ... ஒஹோ... ஹோ...
சின்ன சின்னப் பூவே நீ கண்ணால் பாருப் போதும்
தொட்டுத் தொட்டுப் பேசு என் துன்பம் எல்லாம் தீரும்
தன் நன் நன்.... நானே நா.... தானே நானே நா....


Popular Posts