Friday, October 5, 2012

சின்னக் கண்ணம்மா - எந்தன் வாழ்க்கையின்


படம் : சின்னக் கண்ணம்மா (1993)
இசை : இளையராஜா
பாடியவர் : மனோ
பாடல்வரி: பஞ்சு அருணாச்சலம்





எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல
பூக்களின் வண்ணம் கொண்டு
பிறந்த மகளே என் மகளே
நான் வாழ்ந்தது கொஞ்சம்
அந்த வாசத்தில் வந்துதித்து
உயிரில் கலந்தாய் என் உயிரே
உன் பூவிழி குறுநகை
அதில்ஆயிரம் கவிதையே...

எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல
பூக்களின் வண்ணம் கொண்டு
பிறந்த மகளே என் மகளே
நான் வாழ்ந்தது கொஞ்சம்
அந்த வாசத்தில் வந்துதித்து
உயிரில் கலந்தாய் என் உயிரே

வானம் தாலாட்ட மேகம் நீராட்ட
வளரும் வெள்ளி நிலவே
வாழ்வில் நீ காணும் சுகங்கள்
நூறாக வேண்டும் தங்கச் சிலையே
தாயின் மடிசேரும் கன்று போல
நாளும் வளர்வாய் என் மார்பிலே
சேய் உன் முகம் பார்க்க துன்பம் தீரும்
காலம் கனியாகும் தேவியே
சிறுகிளி போல் பேசும் பேச்சில்
என்னை மறந்தேன் நானம்மா...
எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல
பூக்களின் வண்ணம் கொண்டு
பிறந்த மகளே என் மகளே!

கனவில் நினைவாக நினைவில் கனவாக
கலந்தாள் காதல் தேவி...
உறவின் பலனாக கடலில் அமுதாக
பிறந்தாய் நீயும் கனியே
காணக் கிடைக்காத பிள்ளை வரமே
கண்ணில் ஜொலிக்கின்ற வைரமே
கோடி கொடுத்தாலும் உன்னைப் போல
செல்வம் கிடைக்காது வாழ்விலே
புள்ளி மானே தூங்கும் மயிலே
என்னை மறந்தேன் நானம்மா

எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல
பூக்களின் வண்ணம் கொண்டு
பிறந்த மகளே என் மகளே
நான் வாழ்ந்தது கொஞ்சம்
அந்த வாசத்தில் வந்துதித்து
உயிரில் கலந்தாய் என் உயிரே
உன் பூவிழி குறுநகை
அதில்ஆயிரம் கவிதையே

எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல
பூக்களின் வண்ணம் கொண்டு
பிறந்த மகளே என் மகளே
நான் வாழ்ந்தது கொஞ்சம்
அந்த வாசத்தில் வந்துதித்து
உயிரில் கலந்தாய் என் உயிரே

Popular Posts