Sunday, October 21, 2012

சொந்தம் 16 - அம்மன் கோயில்


படம் : சொந்தம் 16 (1989)
இசை : சங்கர் கணேஷ்

பாடியவர்கள் : S.P.பாலசுப்ரமணியம்
பாடல்வரிகள்: 






அம்மன் கோயில் தேரழகு
ஆயிரத்தில் ஓரழகு
நாணமுள்ள கண்ணழகு
நான் விரும்பும் பெண்ணழகு


அம்மன் கோயில் தேரழகு
ஆயிரத்தில் ஓரழகு
நாணமுள்ள கண்ணழகு
நான் விரும்பும் பெண்ணழகு
என்னுடைய கற்பனையில்
வந்து நிற்கும் வண்ணமயில்



அம்மன் கோயில் தேரழகு
ஆயிரத்தில் ஓரழகு
நாணமுள்ள கண்ணழகு
நான் விரும்பும் பெண்ணழகு
என்னுடைய கற்பனையில்
வந்து நிற்கும் வண்ணமயில்


நீரோடையில் நீந்தும் செந்தாமரை
மலர்தான் என முகம்தான் கொண்ட பெண்பாவைதான்
மேல்வானிலே தோன்றும் மூன்றாம் பிறை
புருவம் என அமையும் இளம் பூந்தோகைதான்
இடைதான் மண்ணில் வந்த மின்னல் என்று ஆட
நடைதான் மன்றம் வந்த தென்றல் என்று ஓட
கெண்டைமீனும் வண்ண மானும் கண்ணிரெண்டில் துள்ளாதோ



அம்மன் கோயில் தேரழகு
ஆயிரத்தில் ஓரழகு
நாணமுள்ள கண்ணழகு
நான் விரும்பும் பெண்ணழகு
என்னுடைய கற்பனையில்
வந்து நிற்கும் வண்ணமயில்


மீனாட்சிதான் காஞ்சி காமாட்சிதான்
மஞ்சள் தினம் பூசும் முகம் தெய்வீகம்தான்
தென்னாடுதான் பேசும் பண்பாடுதான்
காக்கும் குணம் நாளும் அந்த பெண்ணோடுதான்
அவள்தான் என்னோடுதான் பூமாலைதான் சூட
அடடா எங்கே அந்த பெண்தான் என்று தேட
என்னைத்தேடி சிந்து பாடி சொப்பனத்தில் வந்தாளே

அம்மன் கோயில் தேரழகு
ஆயிரத்தில் ஓரழகு
நாணமுள்ள கண்ணழகு
நான் விரும்பும் பெண்ணழகு
என்னுடைய கற்பனையில்
வந்து நிற்கும் வண்ணமயில்

அம்மன் கோயில் தேரழகு
ஆயிரத்தில் ஓரழகு
நாணமுள்ள கண்ணழகு
நான் விரும்பும் பெண்ணழகு


Popular Posts