Tuesday, July 26, 2011

Suryavamsam - Kadhala Kadhala

படம் : சூரியவம்சம் (1997)
இசை : S.A.ராஜ்குமார்
பாடியவர் : ஹரிஹரன், சொர்ணலதா 
பாடல் வரி : பழனிபாரதி

Suryavamsham.jpg

 


காதலா காதலா காதலின் சாரலா

காதலா காதலா காதலின் சாரலா
தீயிலே தென்றலாய் வாழ்கிறேன் காதலா
கண்களா தூண்டிலா கண்களா தூண்டிலா
மாறினேன் மீன்களாய்

காதலா காதலா காதலின் சாரலா


இதயத் துடிப்பினில் ஒசையில்லை
எடுத்துச் சொல்லவும் பாஷையில்லை

இதற்கு முன் இந்த ஆசையில்லை
இமைகள் விசிறிகள் வீசவில்லை

தனிமையில் இன்று நான் நகம் கடித்தேன்
அடிக்கடி என்னை நான் தினம் ரசித்தேன்

கனவினில் உன்னை நான் படம் பிடித்தேன்
தலையணையோடு நான் அடம் பிடித்தேன்

ஏனிந்த மாற்றமோ?

காதலா காதலா காதலின் சாரலா



பெருகிப் பெருகி ஒரு அலையானேன்
உருகி உருகி பனி துளியானேன்

பறந்து பறந்து ஒரு சிறகானேன்
நனைந்து நனைந்து இப்புல்வெளியானேன்

பூமியும் இங்கு பின் சுழல்வதென்ன
வானவில் ஒன்று என்னை வளைப்பதென்ன

மலர்களிலெல்லாம் பொன் முடைப்பதென்ன
ரகசியம் சொல்லி என்னை ரசிப்பதென்ன

ஏனிந்த மாற்றமோ....
காதலா காதலா காதலின் சாரலா

தீயிலே தென்றலாய் வாழ்கிறேன் காதலா

கண்களா தூண்டிலா கண்களா தூண்டிலா

மாறினேன் மீன்களாய்

காதலா காதலா காதலின் சாரலா

Popular Posts