Sunday, May 8, 2011

மைனா - மைனா மைனா நெஞ்சுக்குள்ள



படம் : மைனா (2010)
இசை : D.இமான்

பாடியவர் : 
ஷான்
பாடல் வரி : யுகபாரதி







மைனா மைனா நெஞ்சுக்குள்ள வம்ப பண்ணுற
மைனா மைனா என்ன சொல்ல என்ன கொல்லுற
சொல்லு புள்ள என்ன ஆச்சு சொல்லாமலே மறைக்காத
நெஞ்சு மேல கைய வெச்சு கண்ணால நீ சிரிக்காத
என்ன மறந்தே தள்ளி இருந்திட துணிஞ்சது சரியா சரியா
தன்னந்தனியே என்ன தவிப்புல எறிஞ்சது முறையா முறையா
எனக்கேதும் புரியவே இல்ல பதில் பேச வருவியா

மைனா... மைனா...
ஏலே... ஏலே ஏலே ஏலே...
ஏலே ஏலே......

சிமினிக்கு மண்ணெண்ணைய போல
சித்திரைக்கு உச்சி வெயில் போல
நீயும் எனக்காக உயிர் வாழ்வேன் உனக்காக
சக்கரத்த போல சுத்தி வரும் ஆச
கண்ணு மைய வாங்கி தீட்டிக்கிறேன் மீச
அடியே... நீ மணல திரிச்ச கயிரா
கொடியே... நீ உசுர கடஞ்ச தயிரா

மைனா மைனா நெஞ்சுக்குள்ள வம்ப பண்ணுற
மைனா மைனா என்ன சொல்ல என்ன கொல்லுற

கட்ட வண்டி செல்லும் வழி தேட
உண்டி வில்லு ஜல்லி கல்ல தேட
நானும் உன்ன தேடி அலைஞ்சேனே மனம் வாடி
பள்ளிக்கூடம் போயும் ஏறவில்ல பாடம்
பல்லாங்குழி ஆட கூட இல்ல நீயும்
தோணையா... நீ இருந்தா ஜெயிப்பேன் ஊர
கனவா... நீ கலஞ்சா நெனப்பேன் தீர


மைனா மைனா நெஞ்சுக்குள்ள வம்ப பண்ணுற
மைனா மைனா என்ன சொல்லஎன்ன கொல்லுற
சொல்லு புள்ள என்ன ஆச்சு சொல்லாமலே மறைக்காத
நெஞ்சு மேல கைய வெச்சு கண்ணால நீ சிரிக்காத
என்ன மறந்தே தள்ளி இருந்திட துணிஞ்சது சரியா சரியா
தன்னந்தனியே என்ன தவிப்புல எறிஞ்சது முறையா முறையா
அடையாளம் தெரியவே இல்ல புதுசா நீ பொறந்தியா

மைனா... மைனா....

Popular Posts