Wednesday, April 6, 2011

சந்தோஷ் சுப்பிரமணியம் - எப்படி இருந்த




படம் : சந்தோஷ் சுப்பிரமணியம் (2008)
இசை : தேவி ஸ்ரீபிரசாத்

பாடியவர் : 
திப்பு, கோபிகா பூர்ணிமா
பாடல் வரி :  விவேகா


எப்படி இருந்த எம் மனசு
அடி இப்படி மாறிப் போகிறது
உன் கண்களில் என்ன காந்தம் இருக்கிறதா


எப்படி இருந்த என் வயசு
அட இப்படி மாறிப் போகிறது
உன் சொற்களில் என்ன சர்க்கரை இருக்கிறதா


உனது சிரிப்பின் ஒலியில் எனது இளமை தவிக்கிறதே


அலையும் உனது விழியை பார்த்தால் பயமாய் இருக்கிறதே


அரிது அரிது இளமை அரிது 
விலகிப் போனால் நியாயமா
மழை வருதே மழை வருதே 
விழி மேகம் ஆகும் பொழுது
சுகம் தருதே சுகம் தருதே 
உன் சுவாசம் வீசும் பொழுது
எதை எதையோ நினைக்கிறதே மனது


ஹே.. எப்படி இருந்த எம் மனசு
அடி இப்படி மாறிப் போகிறது
உன் கண்களில் என்ன காந்தம் இருக்கிறதா


எப்படி இருந்த என் வயசு
அட இப்படி மாறிப் போகிறது
உன் சொற்களில் என்ன சர்க்கரை இருக்கிறதா




ஏ.. சொட்டு சொட்டு தேனா 
நீ நெஞ்சில் விட்டுப் போனா
ஏங்குதே என் மனம் துள்ளி துள்ளி தானா


கிட்ட கிட்ட வேணாம் 
ஹே.. தில்லு முல்லு வேணாம்
தொட்டதும் பால்குடம் கெட்டுப் போகும் வீணா


அழகு என்பதே பருகத்தானடி எனது ஆசைகள் தப்பா


நெருங்கும் காலம் தான் நெருங்கும் நாள் வரை
நினைத்து கொள்ளு நீ நட்பா


இரவோ பகலோ கனவோ நிஜமோ 
எதிலும் நீயே தானடி
மழை வருதே மழை வருதே 
விழி மேகம் ஆகும் பொழுது
சுகம் தருதே சுகம் தருதே 
உன் சுவாசம் வீசும் பொழுது
எதை எதையோ நினைக்கிறதே மனது




கிட்ட வந்து நின்னா 
அது குற்றம் என்று சொன்னா
ஏனடி நீ ஒரு தீயில் செய்த பெண்ணா


கொக்கு வந்து போனா 
அட நெஞ்சை சொல்லும் தானா
சிக்கிட நானொரு புத்தி கெட்ட மீனா


முறுக்க போலவே இருக்கும் காதுகள்
கடிக்கத் தூண்டுதே அன்பே


துடுப்பு போலவே இருக்கும் கைகளால்
அடிக்கத் தோன்றுதே அன்பே


நடையோ உடையோ ஜடையோ இடையோ 
எதுவோ என்னைத் தாக்குதே
மழை வருதே மழை வருதே 
விழி மேகம் ஆகும் பொழுது
சுகம் தருதே சுகம் தருதே 
உன் சுவாசம் வீசும் பொழுது
எதை எதையோ நினைக்கிறதே மனது 

Popular Posts