Wednesday, January 19, 2011

சிந்து பைரவி - நான் ஒரு சிந்து

படம் : சிந்து பைரவி (1985)
இசை : இளையராஜா
பாடியவர் : 
 K.S. சித்ரா
பாடல் வரி : வைரமுத்து




நான் ஒரு சிந்து காவடிச்சிந்து


நான் ஒரு சிந்து காவடிச்சிந்து 
ராகம் புரியவில்ல உள்ள சோகம் தெரியவில்ல
தந்தை இருந்தும் தாயும் இருந்தும்
சொந்தம் எதுவும் இல்ல அத சொல்ல தெரியவில்ல



நான் ஒரு சிந்து காவடிச்சிந்து
ராகம் புரியவில்ல உள்ள சோகம் தெரியவில்ல
தந்தை இருந்தும் தாயும் இருந்தும்
சொந்தம் எதுவும் இல்ல அத சொல்ல தெரியவில்ல



நான் ஒரு சிந்து காவடிச்சிந்து
ராகம் புரியவில்ல உள்ள சோகம் தெரியவில்ல



இல்லாத உறவுக்கு என்னென்ன பேரோ
நாடோடி பாட்டுக்கு தாய் தந்தை யாரோ


இல்லாத உறவுக்கு என்னென்ன பேரோ
நாடோடி பாட்டுக்கு தாய்தந்தை யாரோ
விதியோடு நான் ஆடும் விளையாட்ட பாரு
வெளையாத காட்டுக்கு வித போட்டதாரு


பாடு படிச்சா சங்கதி உண்டு
என் பாடுக்குள்ளையும் சங்கதி உண்டு கண்டு பிடி




நான் ஒரு சிந்து காவடிச்சிந்து
ராகம் புரியவில்ல உள்ள சோகம் தெரியவில்ல


பெண் கன்று பசு தேடி பார்கின்ற வேலை
அம்மான்னு சொல்லவும் அதிகாரம் இல்லை


பெண் கன்று பசு தேடி பார்கின்ற வேலை
அம்மான்னு சொல்லவும் அதிகாரம் இல்லை
என் விதி அப்போதே தெரிஞ்சிருந்தாலே
கர்ப்பத்தில் நானே கரைந்திருப்பேனே


தலை எழுத்தென்ன என் மொதல் எழுத்தென்ன
தலை எழுத்தென்ன மொதல் எழுத்தென்ன சொல்லுங்கள்ளேன்



நான் ஒரு சிந்து காவடிச்சிந்து
ராகம் புரியவில்ல உள்ள சோகம் தெரியவில்ல
தந்தை இருந்தும் தாயும் இருந்தும்
சொந்தம் எதுவும் இல்ல அத சொல்ல தெரியவில்ல



நான் ஒரு சிந்து காவடிச்சிந்து
ராகம் புரியவில்ல உள்ள சோகம் தெரியவில்ல



Popular Posts