Wednesday, January 23, 2013

சிப்பிக்குள் முத்து - மனசு மயங்கும்

படம் : சிப்பிக்குள் முத்து (1986)
இசை : இளையராஜா
பாடியவர்கள் : S.P.பாலசுப்ரமணியம், S.ஜானகி
பாடல்வரிகள் : வைரமுத்து




Download this MP3

மனசு மயங்கும்.... மனசு மயங்கும்
மெளன கீதம்... மெளன கீதம்
மனசு மயங்கும் மெளன கீதம் பாடு

மன்மதக் கடலில்... மன்மதக் கடலில்
சிப்பிக்குள் முத்து... சிப்பிக்குள் முத்து
மன்மதக் கடலில் சிப்பிக்குள் முத்து தேடு
இதழில் தொடங்கு எனக்குள் இறங்கு
இதழில் தொடங்கு எனக்குள் இறங்கு
சுகங்கள் இருமடங்கு

ம்... ம்... ம்...
மனசு மயங்கும் மெளன கீதம் பாடு

மன்மதக் கடலில் சிப்பிக்குள் முத்து தேடு


மார்பில் உண்டு பஞ்சணை
மடிகள் ரெண்டும் தலையணை

மடிகள் ரெண்டும் தலையணை

நீரில் நெருப்பின் வேதனை
அணைத்துக்கொண்டேன் தலைவனை

அணைத்துக்கொண்டேன் தலைவனை

இதயம் மாறியதோ எல்லை மீறியதோ
இதயம் மாறியதோ எல்லை மீறியதோ
புதிய பாடம்... விரக தாபம்...
புதிய பாடம் விரக தாபம் போதையேறியதோ

மனசு மயங்கும் மெளன கீதம்... பாடு
மன்மதக் கலையில் சிப்பிக்குள் முத்து... தேடு


காதல் இங்கே பலவகை
உனக்கு மட்டும் புதுவகை

உனக்கு மட்டும் புதுவகை

காமன் கலைகளும் எத்தனை
பழக வேண்டும் அத்தனை

பழக வேண்டும்

காதல் யாகங்களோ காம வேதங்களோ

காதல் யாகங்களோ காம வேதங்களோ

உனக்குள் மறைந்து உயிரில் கரைந்து
உனக்குள் மறைந்து உயிரில் கரைந்து
உருகும் நேரங்களோ


மனசு மயங்கும்.... மனசு மயங்கும்
மெளன கீதம்... மெளன கீதம்

மனசு மயங்கும் மெளன கீதம் பாடு


மன்மதக் கடலில்... மன்மதக் கடலில்
சிப்பிக்குள் முத்து... சிப்பிக்குள் முத்து

மன்மதக் கடலில் சிப்பிக்குள் முத்து... தேடு

இதழில் தொடங்கு எனக்குள் அடங்கு
இதழில் தொடங்கு எனக்குள் அடங்கு
சுகங்கள் இருமடங்கு


Popular Posts