Friday, October 5, 2012

மெரினா - வணக்கம் வாழ வைக்கும்

படம் : மெரினா (2012)
இசை : கிரிஷ்
பாடியவர் :  முகேஷ், ராமசங்கர், ஷில்பா
பாடல் வரி :  நா.முத்துகுமார்

வணக்கம் வாழவைக்கும் சென்னை பிடிக்குதுன்னை
உனக்கு ஈடு இல்லையே...
மிரட்டி ஓட வைக்கும் சென்னை மிரடுதுதென்னை
இருந்தும் ஓட வில்லையே...

வங்க கடல் விட்டு விட்டு அலை அடிக்கும்
இங்கு வஞ்சர மீன் வாசத்துல வல விரிக்கும்
பர பர பரவென பரபரக்கும்
இங்கு பக்கத்து வீட்டுக்காரன் பேர் மறக்கும்

வணக்கம் வாழவைக்கும் சென்னை பிடிக்குதுன்னை
உனக்கு ஈடு இல்லையே...

வத்துபட்டி போல இங்கு வீடு இருக்கும்
தெரு சுத்தி எங்கும் கான்கீரீட் காடு இருக்கும்
மூச்சு முட்ட நெரிசலில் ரோடு இருக்கும்
அதில் மாட்டு வண்டி தொட்டியில பூ சிரிக்கும்
எத்தனை கண்கள் இங்கு பசித்திரிக்கும்
இது அத்தனை கனவையும் நெரவேத்தும்..

வணக்கம் வாழவைக்கும் சென்னை பிடிக்குதுன்னை
உனக்கு ஈடு இல்லையே...

கட்சி கொடி கூட்டணியா கை அசைக்கும்
நமக்கு அரனாகொடிதான் மிச்சம் இருக்கும்
பச்சை மஞ்ச சிவபுலதான் சிக்னல் இருக்கும்
அது விழுந்ததும் குழந்தைங்க பிச்சை எடுக்கும்

மிரட்டி ஓட வைக்கும் சென்னை மிரடுதுதென்னை
இருந்தும் ஓட வில்லையே...

சிங்கார சென்னை என்று சொல்லுவோம்

ஊர் எங்கும் போஸ்டர் ஒட்டி கொல்லுவோம்

சேரோடும் கூவம் எங்கும் கொசுக்களே
என்றாலும் விட்டு போக நினைகல

இன்பம் துன்பம் ரெண்டும் உள்ள சென்னையடா
இது இளைப்பாற இடம் தரும் திண்னையடா
நாகரிகம் வளர்ந்திடும் தொட்டில்லடா
இந்த விளக்கிலே எத்தனையோ விட்டில்லடா
பல ஊரு சனம் வந்து வாழும் இடம்தான்
அட பத்து நாளில் சொந்த ஊரு இந்த இடம்தான்

எல்லாருக்கும் தனி தனியா தாய் இருப்பா
நம்ம ஒட்டு மொத்த தாயாக சென்னை இருப்பா
எப்படி நீ திட்டும்போதும் உன்ன பொறுப்பா
அவ உன்னோடைய வளர்ச்சிக்கு ஏணி கொடுப்பா
உலகத்தில் பல கோடி ஊர் இருக்கும்
இந்த ஊர் போல பன்முகம் எதில் இருக்கும்?

Popular Posts