Monday, May 14, 2012

மஜ்னு - முதற்கனவே முதற்கனவே




படம் : மஜ்னு (2001)
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள் : ஹரிஷ் ராகவேந்திரா, பாம்பே ஜெயஸ்ரீ
பாடலாசிரியர்: வைரமுத்து







முதற்கனவே முதற்கனவே மறுபடி ஏன் வந்தாய்
நீ மறுபடி ஏன் வந்தாய்


முதற்கனவே முதற்கனவே மறுபடி ஏன் வந்தாய்
நீ மறுபடி ஏன் வந்தாய்
விழி திறந்ததும் மறுபடி கனவுகள் வருமா வருமா?
விழி திறக்கையில் கனவென்னை துரத்துவது நிஜமா நிஜமா?


முதற்கனவு முதற்கனவு மூச்சுள்ள வரையில் வருமல்லவா?
கனவுகள் தீர்ந்து போனால் வாழ்வில்லை அல்லவா?
கனவல்லவே கனவல்லவே கண்மணி நானும் நிஜம் அல்லவா?
சத்தியத்தில் முளைத்த காதல் சாகாது அல்லவா?


முதற்கனவே முதற்கனவே மறுபடி ஏன் வந்தாய்
நீ மறுபடி ஏன் வந்தாய்
விழி திறந்ததும் மறுபடி கனவுகள் வருமா வருமா?
விழி திறக்கையில் கனவென்னை துரத்துவது நிஜமா நிஜமா?


எங்கே எங்கே நீ எங்கே என்று காடு மேடு தேடி ஓடி
இரு விழி இரு விழி தொலைத்து விட்டேன்


இங்கே இங்கே நீ வருவாய் என்று சின்ன கண்கள் சிந்துகின்ற
துளிகளில் துளிகளில் உயிர் வளர்ப்பேன்


தொலைந்த என் கண்களை பார்த்ததும் கொடுத்து விட்டாய்
கண்களை கொடுத்து இதயத்தை எடுத்துவிட்டாய்


இதயத்தை தொலைத்ததற்காக என் ஜீவன் எடுக்கிறாய்
முதற்கனவே முதற்கனவே மறுபடி ஏன் வந்தாய்
நீ மறுபடி ஏன் வந்தாய்

விழி திறந்ததும் மறுபடி கனவுகள் வருமா வருமா?
விழி திறக்கையில் கனவென்னை துரத்துவது நிஜமா நிஜமா?



ஊ.... ஊடல் வேண்டாம் ஓடல்கள் வேண்டாம்
ஓசையோடு நாதம் போல உயிரிலே உயிரிலே கலந்து விடு


கண்ணீர் வேண்டாம் காயங்கள் வேண்டாம்
ஆறு மாத பிள்ளை போல மடியிலே மடியிலே உறங்கிவிடு


நிலா வரும் நேரம் நட்சத்திரம் தேவையில்லை
நீ வந்த நேரம் நெஞ்சில் ஒரு ஊடல் இல்லை
வண்ண பூக்கள் வேர்க்கும் முன்னே வரச்சொல்லு தென்றலை
வரச்சொல்லு தென்றலை


தாமரையே தாமரையே நீரில் ஒளியாதே நீ நீரில் ஒளியாதே
தினம் தினம் ஒரு சூரியன் போல வருவேன் வருவேன்
அனுதினம் உன்னை ஆயிரம் கையால் தொடுவேன் தொடுவேன்


சூரியனே சூரியனே தாமரை முகவரி தேவை இல்லை
விண்ணில் நீயும் இருந்துக்கொண்டே விரல் நீட்டி திறக்கிறாய்
மரங்கொத்தியே மரங்கொத்தியே மனதை கொத்தி துளையிடுவாய்
உள்ளத்துக்குள் விளக்கணைத்து  தூங்கும் காதல் எழுப்புவாய்
தூங்கும் காதல் எழுப்புவாய்
தூங்கும் காதல் எழுப்புவாய்
நீ தூங்கும் காதல் எழுப்புவாய்
தூங்கும் காதல் எழுப்புவாய்



Popular Posts