Sunday, September 25, 2011

கண்ணெதிரே தோன்றினாள் - சந்தா ஓ சந்தா

படம்: கண்ணெதிரே தோன்றினாள் (1998)
இசை: தேவா
பாடியவர்: ஹரிணி







சந்தா ஓ சந்தா இவள் சம்மதம் தந்தாள்


சந்தா ஓ சந்தா இவள் சம்மதம் தந்தாள்
உள்ளுக்குள் காதல் கொடி வளர்த்தாள்
மொட்டுக்கள் முட்ட கண்டு துடித்தாள்
மொட்டுக்கு மூடியிட்டு மறைத்தாள்
இனி மேலும் திரை போட வழியில்லையே
உன் காதல் பிழையில்லையே
சந்தா ஓ சந்தா இவள் சம்மதம் தந்தாள்


ஆணின் இனம் அது கிளை மாதிரி
பெண்ணின் இனம் அது வேர் மாதிரி
கிளை பேசினால் அதை ஊர் கேட்குமே
வேர் பேசினால் அதை யார் கேட்பது
இன்று நானே வெட்க திரை கிழித்தேன்
என்னை நானே யுத்தம் செய்து ஜெயித்தேன்
விதை தாண்டி வந்த இலைகள் விதைக்குள் மீண்டும் போகாது
சுற்றம் மீறி வந்த காதல் சுட்டால் கூட வேகாது
உன் கண் விழிக்குள் குடியிருந்தால் காற்றும் வெயிலும் தாக்காது



சந்தா ஓ சந்தா இவள் சம்மதம் தந்தாள்
சந்தா ஓ சந்தா இவள் சம்மதம் தந்தாள்


ஒரு பூவிலும் மனம் பார்க்காதவள்
உன் வேர்வையில் புது மனம் பார்க்கிறேன்
குயில் பாடலில் மனம் மசியாதவள்
ரயில் ஓசையில் இன்று இசை கேட்கிறேன்
எல்லாம் இந்த காதல் செய்த மாயம்
என்னை போல வெண்ணிலவும் தேயும்
பாவை உன்னை கேட்க நினைத்த பரிசு ஒன்று அறிவாயா
உனக்குள் சென்ற காற்று வேண்டும் எனக்கு மட்டும் தருவாயா
என் இதயம் என்னும் பாத்திரத்தில் நீயே நிறைந்து வழிவாயா



சந்தா ஓ சந்தா இவள் சம்மதம் தந்தாள்
சந்தா ஓ சந்தா இவள் சம்மதம் தந்தாள்
உள்ளுக்குள் காதல் கொடி வளர்த்தாள்
மொட்டுக்கள் முட்ட கண்டு துடித்தாள்
மொட்டுக்கு மூடியிட்டு மறைத்தாள்
இனிமேலும் திரை போட வழியில்லையே
உன் காதல் பிழையில்லையே

சந்தா ஓ சந்தா இவள் சம்மதம் தந்தாள்
சந்தா ஓ சந்தா இவள் சம்மதம் தந்தாள்

Popular Posts