Thursday, July 21, 2011

அரிச்சந்திரா - நாடோடிப் பாட்டு

படம் : ரிச்சந்திரா (1997)
இசை : S.V வெங்கடராமன்
பாடியவர் : S.P பாலசுப்பிரமணியம்









நாடோடிப் பாட்டுப் பாட தந்தன தந்தன தாளம்
நாடெங்கும் காதலாலே நெஞ்சினில் ஆயிரம் தாளம்


நாடோடிப் பாட்டுப் பாட தந்தன தந்தன தாளம்
நாடெங்கும் காதலாலே நெஞ்சினில் ஆயிரம் தாளம்


இருபது வயதில் வருவது தானா காதல்
றுபது வரையில் தொடர்வது தானே காதல்
சிரிக்கிற போது சிரிப்பது தானா காதல்
அழுகிற போது ஆறுதல் தானே காதல் ஹே...
காதலை நான் பாடவா பூவிலே தேன் தேடவா
காதலை நான் பாடவா ஹே... பூவிலே தேன் தேடவா


கண்ணை மெல்ல மூடிச் சாய்ந்து கொள்ளும் போது மடியாக வேண்டுமே
தட்டுத் தடுமாறி சோர்ந்து விழும் போது பிடியாக வேண்டுமே
உன் உள்ளம் நான் கண்டு என் உள்ளம் நீ கண்டு
உனக்காக நான் உண்டு என்று வாழும் காதல் தானே காதல்
மலர் விட்டு மலரைத் தாவுவதா நல்ல காதல்
ஒருத்திக்கு ஒருவன் என்பது தானே காதல் ஹே...
காதலை நான் பாடவா பூவிலே தேன் தேடவா


கங்கை நதி என்ன காவேரி என்ன எல்லாமே பெண்மையே
நம்மை இங்கு நாளும் தாங்குகிற பூமி அது கூடப் பெண்மையே
நாடாளும் ஆணுக்கும் வீடாளப் பெண் வேண்டும் 
கடல் போன்ற வாழ்வினில் கலங்கரை விளக்கம் தானே பெண்மை
பெண்ணிடம் மனதைக் கொடுத்து விட்டாலே போதும்
பெளர்னமி தானே வாழ்வின் எந்த நாளும் ஹே...
காதலை நான் பாடவா பூவிலே தேன் தேடவா

நாடோடிப் பாட்டுப் பாட தந்தன தந்தன தாளம்
நாடெங்கும் காதலாலே நெஞ்சினில் ஆயிரம் தாளம்

Popular Posts