Wednesday, July 13, 2011

காதல் கோட்டை - நலம் நலமறிய

படம் : காதல் கோட்டை (1996)
இசை : தேவா
பாடியவர்கள் : S.P. பாலசுப்ரமணியம், அனுராதா ஸ்ரீராம்
பாடல் வரி: அகத்தியன்










நலம் நலமறிய ஆவல்
உன் நலம் நலமறிய ஆவல்
நீ இங்கு சுகமே.... நான் அங்கு சுகமா?


நீ இங்கு சுகமே.... நான் அங்கு சுகமா?
நலம் நலமறிய ஆவல்
உன் நலம் நலமறிய ஆவல்


தீண்ட வரும் காற்றினையே
நீ அனுப்பு இங்கு வேர்கிறதே


வேண்டும் ஒரு சூரியனே
நீ அனுப்பு குளிர் கேட்கிறதே


கடிதத்தில் முத்தங்கள் அனுப்பிடலாமே


என் இதழ் உனையன்றி பிறர் தொடலாமா


இரவினில் கனவுகள் தினம் தொல்லையே


உறக்கம் எனக்கில்லை கனவில்லையே


நலம் நலமறிய ஆவல்


உன் நலம் நலமறிய ஆவல்




கோவிலிலே நான் தொழுதேன்
கோல மயில் உனை சேர்ந்திடவே


கோடி முறை நான் தொழுதேன்
காலமெல்லாம் நீ வாழ்ந்திடவே


உன் முகம் நான் பார்க்க கடிதமே தானா


வார்தையில் தெரியாத வடிவமும் நானா


நிழல் படம் அனுப்பிடு என்னுயிரே


நிஜம் இன்றி வேறில்லை என்னிடமே




நலம் நலமறிய ஆவல்


உன் நலம் நலமறிய ஆவல்


ஒ... நீ இங்கு சுகமே
நான் அங்கு சுகமா ?


நீ இங்கு சுகமே
நான் அங்கு சுகமா ?


நலம் நலமறிய ஆவல்
உன் நலம் நலமறிய ஆவல்

Popular Posts