Tuesday, July 5, 2011

சிவப்பதிகாரம் - அற்றைத் திங்கள்



படம் : சிவப்பதிகாரம் (2006)
இசை : 
வித்யாசாகர்
பாடியவர் : மதுபாலகிருஷ்ணன, சுஜாதா
பாடல் வரி : யுகபாரதி









அற்றைத் திங்கள் வானிடம்


அல்லிச் செண்டோ நீரிடம்


சுற்றும் தென்றல் பூவிடம்


சொக்கும் ராகம் யாழிடம்


காணுகின்ற காதல் என்னிடம்


நான் தேடுகின்ற யாவும் உன்னிடம்




அற்றைத் திங்கள் வானிடம்


அல்லிச் செண்டோ நீரிடம்


சுற்றும் தென்றல் பூவிடம்


சொக்கும் ராகம் யாழிடம்


காணுகின்ற காதல் என்னிடம்


நான் தேடுகின்ற யாவும் உன்னிடம்




அடிதொட முடிதொட ஆசை பெருகிட
நேரும் பலவித பரிபாஷை


பொடிபட பொடிபட நாணம் பொடிபட
கேட்கும் மனதினில் உயிரோசை


முடிதொட முகந்தொட மோகம் முழுகிட
வேர்க்கும் முதுகினில் இதிகாசம்


உருகிட உருகிட ஏக்கம் உருகிட
கூடும் அனலிது குளிர் வீசும்


குலுங்கினேன் உடல் கூசிட
கிறங்கினேன் விரல் மேய்ந்திட


மயங்கினேன் சுகம் சேர்ந்திட
தளும்பினேன் எனை நீ தொட
பாய்ந்திட... ஆய்ந்திட...


காணுகின்ற காதல் என்னிடம்


நான் தேடுகின்ற யாவும் உன்னிடம்




அற்றைத் திங்கள் வானிடம்


அல்லிச் செண்டோ நீரிடம்


சுற்றும் தென்றல் பூவிடம்


சொக்கும் ராகம் யாழிடம்




உடலெது உடையெது தேடும் நிலையிது
காதல் கடலிது அடையாது


இரவெது பகலெது தேங்கும் சுகமிது
சாகும் வரையிலும் முடியாது


கனவெது நினைவெது கேட்கும் பொழுதிது
காமப் பசி வர அடங்காது


வலமெது இடமெது வாட்டும் கதையிது
தீண்டும் வரையிலும் விளங்காது


நடுங்கலாம் குளிர்வாடையில்
அடங்கலாம் ஒரு ஆடையில்


தயங்கலாம் இடைவேளையில்
உறங்கலாம் அதிகாலையில்
கூடலில்... ஊடலில்...


காணுகின்ற காதல் என்னிடம்


நான் தேடுகின்ற யாவும் உன்னிடம்

Popular Posts