Friday, April 22, 2011

பச்சைக்கிளி முத்துச்சரம் - உன் சிரிப்பினில்



படம் : பச்சைக்கிளி முத்துச்சரம் (2007)
இசை : ஹரீஸ் ஜெயராஜ்
பாடியவர் : கௌதமி ராவ், ராபி
பாடல் வரி : தாமரை










ம்ம்ம்.. ம்ம்ம்ம்.. ம்ம்ம்ம்..



உன் சிரிப்பினில் உன் சிரிப்பினில்
என் மனதின் பாதியும் போக
உன் இமைகளின் கண் இமைகளின்
மென்பார்வையில் மீதியும் தேய
ம்.. இன்று நேற்று என்று இல்லை
என் இந்த நிலை
ம்.. உன்னை கண்ட நாளிளின்றே
நான் செய்யும் பிழை


உன் சிரிப்பினில் உன் சிரிப்பினில்
என் மனதின் பாதியும் போக
உன் இமைகளின் கண் இமைகளின்
மென்பார்வையில் மீதியும் தேய


உனக்குள் இருக்கும் மயக்கம்
அந்த உயரத்து நிலவை அழைக்கும்
இதழில் விழுந்து துளிர்க்கும்
என் இரவினை பனியில் நனைக்கும்
எதிரினில் நான் எரிகிற நான்
உதிர்ந்திடும் மழை சரம் நீயே
ஒரு முறை அல்ல
முதல் முறை அல்ல
தினம் தினம் என்னை சூழும் தீ


உன் சிரிப்பினில் உன் சிரிப்பினில்
என் மனதின் பாதியும் போக
உன் இமைகளின் கண் இமைகளின்
மென்பார்வையில் மீதியும் தேய


முதல் நாள் பார்த்த வனப்பு
துளி குறையவும் இல்லை உனக்கு
உறக்கம் விழிப்பில் கனவாய்
உன்னை காண்பதே வழக்கம் எனக்கு
அருகினிலே வருகையிலே
துடிப்பதை நிறுத்துது நெஞ்சம்
முதல் முதல் இன்று நிகழ்கிறதென்று
நடிப்பதில் கொஞ்சம் வஞ்சமே


உன் சிரிப்பினில் உன் சிரிப்பினில்
என் மனதின் பாதியும் போக
உன் இமைகளின் கண் இமைகளின்
மென்பார்வையில் மீதியும் தேய


ம்.. இன்று நேற்று என்று இல்லை
என் இந்த நிலை
ஒ ஹோ.. ம்.. உன்னை கண்ட நாளிளின்றே
நான் செய்யும் பிழை

Popular Posts