Monday, April 18, 2011

Ullaasam - Veesum Kaatrukku

படம் : உல்லாசம் (1997)
இசை : கார்த்திக்ராஜா

பாடியவர் : 
உன்னிகிருஷ்ணன், ஹரிணி
பாடல் வரி :  பழனிபாரதி








வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா
பேசும் கண்ணுக்கு என்னை புரியாதா
அன்பே உந்தன் பேரை தானே விரும்பி கேட்கிறேன்
போகும் பாதை எங்கும் உன்னை திரும்பிப் பார்க்கிறேன்


வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா
பேசும் கண்ணுக்கு என்னை புரியாதா


என்னையே திறந்தவள் யாரவளோ
உயிரிலே நுழைந்தவள் யாரவளோ
வழியை மறித்தாள்... மலரை கொடுத்தாள்
மொழியைப் பறித்தாள்... மௌனம் கொடுத்தாள்
மேகமே மேகமே அருகினில் வா
தாகத்தில் மூழ்கினேன் பருகிட வா



வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா
பேசும் கண்ணுக்கு என்னை புரியாதா



அன்பே உந்தன் பேரை தானே விரும்பி கேட்கிறேன்
போகும் பாதை எங்கும் உன்னை திரும்பி பார்க்கிறேன்
வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா
பேசும் கண்ணுக்கு என்னை புரியாதா


சிரிக்கிறேன் இதழ்களில் மலருகிறாய்
அழுகிறேன் துளிகளாய் நழுவுகிறாய்
விழிகள் முழுதும்... நிழலா இருளா
வாழ்க்கைப் பயணம்... முதலா முடிவா
சருகென உதிர்கிறேன் தனிமையிலே
மௌனமாய் எரிகிறேன் காதலிலே


மேகம் போலே என் வானில் வந்தவளே
யாரோ அவளுக்கு நீ தான் என்னவளே
மேக மேக மேகக்கூட்டம் நெஞ்சில் கூடுதே
உந்தன் பேரைச் சொல்லிச் சொல்லி மின்னல் ஓடுதே


வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா
பேசும் கண்ணுக்கு என்னை புரியாதா

Popular Posts