Thursday, January 27, 2011

காதல் மன்னன் - வானும் மண்ணும்

படம் : காதல் மன்னன் (1998)
இசை : பரத்வாஜ்
பாடியவர் :  
ஹரிஹரன், K.S. சித்ரா
பாடல் வரி : வைரமுத்து







வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே
மண்ணில் நீலம் ஒட்டிக் கொண்டதே

ஒரு மூங்கில் காடெரிய சிறு பொறி ஒன்று போதும்
அந்த பொறி இன்று தோன்றியதே

காதல் இடம் பார்ப்பதில்லை
அது இனம் பார்ப்பதில்லை
அது பொசுக்கென்று பூத்திடுதே
ஒரு நீரோடை மீனுக்கு கரை மேலாசை வந்தது
இனி என்னென்ன நேர்ந்திடுமோ...

வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே
மண்ணில் நீலம் ஒட்டிக் கொண்டதே

ஒரு மூங்கில் காடெரிய சிறு பொறி ஒன்று போதும்
அந்த பொறி இன்று தோன்றியதே

காதல் இடம் பார்ப்பதில்லை
அது இனம் பார்ப்பதில்லை
அது பொசுக்கென்று பூத்திடுதே


ஒரு நீரோடை மீனுக்கு கரை மேலாசை வந்தது
இனி என்னென்ன நேர்ந்திடுமோ

நியாயமா இது பாவமா என்று சொல்ல யாரும் இங்கு இல்லை

மௌனமே மொழியானதால் அட பாஷை என்பதொரு தொல்லை
அடுத்தொன்று தோன்றவில்லை

வெண்ணிலா நீராற்றிலே என்றும் வீழ்ந்து பார்த்தவர்கள் இல்லை

பெண்ணிலா தங்க சேற்றிலே இன்று வீழ்ந்து போனதொரு தொல்லை
இலக்கணம் பார்க்கவில்லை

பிறக்கும் மொட்டுகள் தேதி பார்ப்பதுவும் இல்லை

உறவு மாறலாம் உந்தன் கையில் அது இல்லை


ஒரு நீரோடை மீனுக்கு கரை மேலாசை வந்தது
இனி என்னென்ன நேர்ந்திடுமோ

எவ்விடம் மழை தூவலாம் என்று மேகம் யோசிப்பது உண்டோ

ஜாதகம் சுப யோகங்கள் கண்டு காதல் கூடுவது உண்டோ
உணர்ச்சிக்கு பாதை உண்டோ

விதியினும் காதல் வலியது இதில் வேறு வாதம் ஒன்று உண்டோ

காதலின் திசை ஆயிரம் அது கண்டு சொன்னவர்கள் உண்டோ
கனவுக்கு வேலியுண்டோ

காலம் சொல்லுவதை காதல் கேட்பதுவும் இல்லை

ஆசையென்ற நதி அணையில் நிற்பதுவும் இல்லை

ஒரு நீரோடை மீனுக்கு கரை மேலாசை வந்தது
இனி என்னென்ன நேர்ந்திடுமோ

வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே

மண்ணில் நீலம் ஒட்டிக் கொண்டதே

Popular Posts