Tuesday, July 27, 2010

Neengal Kettavai - Oh Vasantha Raja

படம் : நீங்கள் கேட்டவை (1984
இசை : இளையராஜா
பாடியவர் :  S.P.பாலசுப்ரமணியம், S.ஜானகி
பாடல் வரி : வைரமுத்து


Related image




ஓ வசந்த ராஜா தேன் சுமந்த ரோஜா
உன் தேகம் என் தேசம் என்னாளும் சந்தோஷம்
என் தாகங்கள் தீர்ந்திட நீ பிறந்தாயே


ஓ வசந்த ராஜா தேன் சுமந்த ரோஜா ஓ...


வெண் பஞ்சு மேகங்கள் உன் பிஞ்சுப் பாதங்கள்
மண் தொட்டதால் இன்று செவ்வானம் போலாச்சு
விண் சொர்க்கமே பொய் பொய் என் சொர்க்கம் நீ பெண்ணே
விண் சொர்க்கமே பொய் பொய் என் சொர்க்கம் நீ பெண்ணே
சூடிய பூச்சரம் வானவில்தானோ?


ஓ வசந்த ராஜா 


தேன் சுமந்த ரோஜா
உன் தேகம் என் தேசம் என்னாளும் சந்தோஷம்
என் தாகங்கள் தீர்ந்திட நீ பிறந்தாயே


ஓ வசந்த ராஜா 


தேன் சுமந்த ரோஜா ஓ.....


ஆராதனை நேரம் ஆலாபனை ராகம்
அலைபாயுதே தாகம் அனலாகுதே மோகம்
என் மேகமே வா வா இதழ் நீரைத் தூவு
என் மேகமே வா வா இதழ் நீரைத் தூவு
மன்மதக் கோவிலில் பாலபிஷேகம்


ஓ வசந்த ராஜா 


தேன் சுமந்த ரோஜா


உன் தேகம் என் தேசம் என்னாளும் சந்தோஷம்


என் தாகங்கள் தீர்ந்திட நீ பிறந்தாயே


ஓ வசந்த ராஜா 


தேன் சுமந்த ரோஜா ஓ.......

Popular Posts