Showing posts with label Nagma. Show all posts
Showing posts with label Nagma. Show all posts

Saturday, March 14, 2020

Kadhalan - Kaatru Kuthirayile

படம் : காதலன் (1994)
இசை : A.R.ரஹ்மான்
பாடியவர் : சுஜாதா
பாடல் வரிகள் : வைரமுத்து


Image result for kadhalan




காற்று குதிரையிலே
என் காற்குழல் தூது விட்டேன்

காற்று குதிரையிலே
என் காற்குழல் தூது விட்டேன்
அது நேற்று நடந்ததனை
உன் நெஞ்சில் எழுதட்டுமே

ஆற்றங்கரை புதரில்
சிக்கி ஆடும் நுரை போலே
வேற்று கிரகத்திலே நாம்
விளையாட போவதெப்போ?

Saturday, March 31, 2018

Kadhalan - Kadhalikum Pennin

படம் : காதலன்(1994)
இசை : ரஹ்மான்
பாடியவர் : S.P.B, உதித் நாராயணன், பல்லவி
பாடல்வரி : வைரமுத்து


Image result for kadhalan song




காதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினால்
சின்ன தகரம் கூட தங்கம் தானே
காதலிக்கும் பெண்ணின் வண்ண கன்னம் ரெண்டிலே
மின்னும் பருவம் கூட பவளம் தானே
சிந்தும் வேர்வை தீர்த்தம் ஆகும்
சின்ன பார்வை மோட்ஷம் ஆகும்
காதலின் சங்கீதமே
ம்.. ஹும் பூமியின் பூபாளமே
காதலின் சங்கீதமே
ம்.. ஹும் பூமியின் பூபாளமே


காதலிக்கும் பெண் வடிக்கும் கையெழுத்திலே
கண்ட பிழைகள் கூட கவிதை ஆகுமே

காதல் ஒன்றும் சுத்தம் கித்தம் பார்ப்பதில்லையே
எச்சில் கூட புனிதம் ஆகுமே

குண்டு மல்லி ரெண்டு ரூபாய்
உன் கூந்தல் ஏறி உதிரும் பூ கோடி ரூபாய்

பஞ்சு மிட்டாய் அஞ்சு ரூபாய்
நீ பாதி தின்று தந்ததால் லட்ச ரூபாய்

காதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினால்
சின்ன தகரம் கூட தங்கம் தானே
காதலிக்கும் பெண்ணின் வண்ண கன்னம் ரெண்டிலே
மின்னும் பருவம் கூட பவளம் தானே

சிந்தும் வேர்வை தீர்த்தம் ஆகும்
சின்ன பார்வை மோட்ஷம் ஆகும்

காதலின் சங்கீதமே

ம்.. ஹும் பூமியின் பூபாளமே

காதலின் சங்கீதமே

ம்.. ஹும் பூமியின் பூபாளமே


காதல் ஒன்றும் நல்ல நேரம் பார்ப்பதில்லையே
ராகு காலம் கூட ராசி ஆகுமே

காதலுக்கு அன்னபட்ஷி தேவை இல்லையே
காக்கை கூட தூது போகுமே

காதல் ஜோதி புகைவதில்லை
காதல் என்றும் குற்றமே பார்ப்பதில்லை

இதில் அர்ப்பமானது எதுவும் இல்லை
இந்த நுட்பம் ஊருக்கு புரியவில்லை

வானும் மண்ணும் மாறியே போகும்
காதல் என்றும் வாழுமே
ஆதாம் ஏவாள் பாடிய பாடல்
காற்றில் என்றும் கேட்குமே
காதல் கெட்ட வார்தையா என்ன யாரும் சொல்லலாம்
நீ சொல்லவேண்டும் என்று
காதல் முள்ளின் வேலியா என்ன யாரும் செல்லலாம்
நீ செல்லவேண்டும் என்று

Sunday, February 12, 2017

Kadhalan - Kollayile Thennai

படம் : காதலன் (1994)
இசை : A.R. ரஹ்மான்
பாடியவர்கள் : P. ஜெயசந்திரன்
பாடல்வரிகள்: வைரமுத்து






கொல்லையிலே தென்னை வைத்து
குருத்தோலைப் பெட்டி செஞ்சு

சீனி போட்டு நீ திங்க
செல்லமாய் பிறந்தவளோ

மரக்கிளையில் தொட்டில் கட்ட
மாமன் அவன் மெட்டுக் கட்ட

அரண்மனைய விட்டு வந்த
அல்லிராணி கண்ணுறங்கு

மரக்கிளையில் தொட்டில் கட்ட
மாமன் அவன் மெட்டுக் கட்ட

அரண்மனைய விட்டு வந்த
அல்லிராணி கண்ணுறங்கு

Saturday, December 29, 2012

Kadhalan - Ennavale Adi Ennavale

படம் : காதலன் (1994)
இசை : A.R. ரஹ்மான்
பாடியவர்கள் : உன்னி கிருஷ்ணன்
பாடல்வரிகள்: வைரமுத்து





என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்
எந்த இடம் அது தொலைந்த இடம்
அந்த இடத்தையும் மறந்து விட்டேன்
உந்தன் கால் கொலுசில் அது தொலைந்ததென்று
உந்தன் காலடி தேடி வந்தேன்
காதலென்றால் பெரும் அவஸ்தையென்று
உனைக் கண்டதும் கண்டு கொண்டேன்
எந்தன் கழுத்து வரை இன்று காதல் வந்து
இரு கண் விழி பிதுங்கி நின்றேன்
என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்


வாய்மொழியும் எந்தன் தாய்மொழியும்
இன்று வசப்படவில்லையடி
வயிற்றுக்கும் தொண்டைக்கும்
உருவமில்லா ஒரு உருண்டையும் உருலுதடி
காத்திருந்தால் எதிர் பார்த்திருந்தால்
ஒரு நிமிஷமும் வருஷமடி
கண்களெல்லாம் எனைப் பார்ப்பது போல்
ஒரு கலக்கமும் தோன்றுதடி
இது சொர்கமா நரகமா சொல்லடி உள்ளபடி
நான் வாழ்வதும் விடைகொண்டு போவதும்
உந்தன் வார்த்தையில் உள்ளதடி…
என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்


கோகிலமே நீ குரல் கொடுத்தால்
உனைக் கும்பிட்டுக் கண்ணடிப்பேன்
கோபுரமே உனைச் சாய்த்துக்கொண்டு
உந்தன் கூந்தலில் மீன் பிடிப்பேன்
வெண்ணிலவே உனைத் தூங்க வைக்க
உந்தன் விரலுக்கு சொடுக்கெடுப்பேன்
வருட வரும் பூங்காற்றையெல்லாம்
கொஞ்சம் வடிகட்டி அனுப்பி வைப்பேன்
என் காதலின் தேவையை காதுக்குள் ஓதி வைப்பேன்
உன் காலடி எழுதிய கோலங்கள்
புதுக் கவிதைகள் என்றுரைப்பேன்…

என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்


Thursday, December 20, 2012

Love Birds - Naalai Ulagam

படம் : லவ் பேர்ட்ஸ் (1996)
இசை : A.R. ரஹ்மான்
பாடியவர்கள் : உன்னிகிருஷ்ணன், சுஜாதா
பாடல்வரிகள் : வைரமுத்து





நாளை உலகம் இல்லை என்றானால்
அழகே என்ன செய்வாய்
நாளை உலகம் இல்லை என்றானால்
அழகே என்ன செய்வாய்

கண்களை திறந்து காலங்கள் மறந்து
கடைசியில் வானத்தை பார்த்துக்கொள்வேன்
மண்டியிட்டு அமர்ந்து மண்ணகம் குனிந்து
கடைசியில் பூமிக்கு முத்தம் வைப்பேன்
உன் மார்பினில் விழுந்து மை விழி கசிந்து
நீ மட்டும் வாழ தொழுகை செய்வேன்

நாளை உலகம் இல்லை என்றானால்
அழகே... என்ன செய்வாய்


நாளை உலகம்.....
நாளை உலகம் இல்லை என்றானால்
அன்பே என் செய்வாய்

ஒரு நூறாண்டு வாழ்ந்திடும் வாழ்வை
ஒரு நாளில் வாழ்ந்துக் கொள்வேன்
உன் இதழ்களின் மேலே இதழ்களை
சேர்த்து இரு விழி மூடிக் கொள்வேன்
மரணத்தை மறக்கும் மகிழ்ச்சியை தந்து
மரணத்தை மரிக்க வைப்பேன்
நாளை உலகம் இல்லை என்றானால்
அழகே என்ன செய்வாய்
நாளை உலகம் இல்லை என்றானால்
அழகே என்ன செய்வாய்


காதலின் தேவை இருக்கின்ற வரைக்கும்
பூலோகம் அழிவதில்லை

ஆயிரம் மின்னல் தெறிக்கின்ற போதும்
வானம் கிழிவதில்லை

கடல் நிலமாகும் நிலம் கடல் ஆகும்
நம் பூமி மறைவதில்லை

உடல்களும் போகும் உணர்வுகள் போகும்
உயிர் காதல் அழிவதில்லை
நாளை உலகம் இல்லை என்றானால்
உயிரே என்ன செய்வாய்

வானயும் வணங்கி மண்ணையும் வணங்கி
உனை நான் தழுவி கொள்வேன்
ஆயிரம் பூவில் படுக்கையும் அமைத்து
உனையும் அணைத்து உயிர் தரிப்பேன்
என்னுயிர் மண்ணில் பிரிகிற வரைக்கும்
உன்னுயிர் காத்து உயிர் துறப்பேன்

நாளை உலகம் இல்லை என்றானால்
அழகே என்ன செய்வாய்



Tuesday, November 27, 2012

லவ் பேர்ட்ஸ் - மலர்களே மலர்களே


படம் : லவ் பேர்ட்ஸ் (1996)
இசை : A.R.ரஹ்மான்
பாடியவர்கள் : ஹரிஹரன், K.S.சித்ரா
பாடல்வரிகள்: வைரமுத்து





மலர்களே மலர்களே இது என்ன கனவா
மலைகளே மலைகளே இது என்ன நினைவா
உருகியதே... எனதுள்ளம்
பெருகியதே... விழி வெள்ளம்
விண்ணோடும் நீ தான்
மண்ணோடும் நீ தான்
கண்ணோடும் நீ தான்... வா...ஆ


மேகம் திறந்து கொண்டு மண்ணில் இறங்கி வந்து
மார்பில் ஒளிந்து கொள்ள வா வா

மார்பில் ஒளிந்து கொண்டால் மாரன் அம்பு வரும்
கூந்தலில் ஒளிந்து கொள்ள வரவா

என் கூந்தல் தேவன் தூங்கும் பள்ளி அறையா அறையா?
மலர் சூடும் வயதில் என்னை மறந்து போவது தான் முறையா?

நினைக்காத நேரமில்லை காதல் ரதியே ரதியே
உன் பெயரை சொன்னால் போதும் நின்று வழி விடும் காதல் நதியே

என் சுவாசம் உன் மூச்சில் உன் வார்த்தை என் பேச்சில்

ஐந்தாறு நூற்றாண்டு வாழ்வோம் என் வாழ்வே வா
மலர்களே மலர்களே இது என்ன கனவா
மலைகளே மலைகளே இது என்ன நினைவா
உருகியதே... எனதுள்ளம்
பெருகியதே... விழிவெள்ளம்
விண்ணோடும் நீ தான்
மண்ணோடும் நீ தான்
கண்ணோடும் நீ தான்... வா..


பூவில் நாவிரிந்தால் காற்றில் வாய் திறந்தால்
காதல் காதல் என்று பேசும்

நிலா தமிழ் அறிந்தால் அலை மொழி அறிந்தால்
நம் மேல் கவி எழுதி வீசும்

வாழ்வோர் வளர்பிறை தானே வண்ண நிலவே நிலவே
வானோடு நீலம் போல இணைந்து கொண்டது தான் உறவே

உறங்காத நேரம் கூட உந்தன் கனவே கனவே
உணோடு உயிரை போல உறைந்து போனது தான் உறவே

மறக்காது உன் ராகம் மரிக்காது என் தாகம்

உனக்காக உயிர் வாழ்வேன் வா என் வாழ்வே வா
மலர்களே மலர்களே இது என்ன கனவா
மலைகளே மலைகளே இது என்ன நினைவா


உருகியதே... எனதுள்ளம்
பெருகியதே... விழி வெள்ளம்

விண்ணோடும் நீ தான்
மண்ணோடும் நீ தான்

கண்ணோடும் நீ தான்... வா...

Tuesday, August 16, 2011

மேட்டுக்குடி - அன்புள்ள மன்னவனே

படம்: மேட்டுக்குடி (1996)
இசை: சிற்பி
பாடியவர்கள்: மனோ, ஸ்வர்ணலதா
பாடல் வரி: வைரமுத்து









அன்புள்ள மன்னவனே ஆசை காதலனே
அன்புள்ள மன்னவனே ஆசை காதலனே
இதயம் புரியாதா என் முகவரி தெரியாதா


கிளியே கிளியே போ தலைவனை தேடி போ
முள்ளில் தூங்குகிறேன் கனவை அள்ளிப்போ
தனிமையில் கண்ணீரை கண்களில் ஏந்திப்போ
அன்புள்ள மன்னவனே ஆசை காதலனே
அன்புள்ள மன்னவனே ஆசை காதலனே
இதயம் புரியாதா என் முகவரி தெரியாதா


வா வா கண்ணா என்றே கெஞ்சிக் கேட்க போ போ
வாசல் பார்த்து வாழும் வாழ்வை சொல்ல போ போ
இளமை உருகும் துன்பம் இன்றே சொல்ல போ போ
நிதமும் இதயம் ஏங்கும் நிலமை சொல்ல போ போ
கிளியே கிளியே போ போ
காதல் உள்ளத்தின் மாற்றம் சொல்ல போ
மீண்டும் மன்னிப்பு கேட்டுக் கொள்ள போ
நடந்ததை மறந்திட சொல்
உறவினில் கலந்திட சொல்
மடியினில் உறங்கிட சொல்
கண்கள் தேடுது திருமுகம் காண
அன்புள்ள மன்னவனே ஆசை காதலனே
இதயம் புரியாதா என் முகவரி தெரியாதா


வந்தேன் என்று கூற வண்ணக்கிளியே போ போ


வாசமல்லிப் பூவை சூட்டச் சொல்லு போ போ


இதயம் இணையும் நேரம் தனிமை வேண்டும் போ போ


உந்தன் கண்கள் பார்த்தால் வெட்கம் கூடும் போ போ
கிளியே கிளியே போ போ


நித்தம் பல நூறு முத்தம் கேட்க போ


சத்தம் இல்லாமல் ஜன்னல் சாத்தி போ


விழிகளில் அமுத மழை 


இனி ஒரு பிரிவு இல்லை


உறவுகள் முடிவதில்லை


கங்கை வந்தது நெஞ்சினில் பாய


அன்புள்ள மன்னவனே ஆசை காதலனே
இதயம் புரியாதா என் முகவரி தெரியாதா

Popular Posts