Monday, April 24, 2017

Jodi - Velli malare

படம் : ஜோடி (1999)
இசை : A.R.ரஹ்மான்
பாடியவர்கள் : S.P. பாலசுப்ரமணியம், மகாலட்சுமி ஐயர்
பாடல்வரிகள்: வைரமுத்து







வெள்ளி மலரே வெள்ளி மலரே
வெள்ளி மலரே வெள்ளி மலரே
நேற்றுவரை நீ நெடுவனம் கண்டாய்
ஒற்றைக்காலில் உயரத்தில் நின்றாய்
மஞ்சள் மாலை மழையில் நனைந்தாய்
சித்திரை மாதம் வெயிலும் சுமந்தாய்
இத்தனை தவங்கள் ஏன் தான் செய்தாயோ
தேன் சிதறும் மன்மத மலரே என்றே சொல்வாயோ

இளந்தளிரே... இளந்தளிரே...
வெள்ளி மலரன்று இயற்றிய தவம் எதற்கு
பெண்மங்கை உந்தன் கூந்தல் சேர்வதற்கு
இளந்தளிரே... இளந்தளிரே...
வெள்ளி மலரன்று இயற்றிய தவம் எதற்கு
பெண்மங்கை உந்தன் கூந்தல் சேர்வதற்கு

ஓ… 

வெள்ளி மலரே வெள்ளி மலரே


ஏ… ஏ… ஏ…

மின்னொளியில் மலர்வன தாழம்பூக்கள்
கண்ணொளியில் மலர்வன காதல் பூக்கள்
நெஞ்சுடைந்த பூவே நில்

ஏ... வெட்கங்கெட்ட தென்றலுக்கு வேலையில்லை
தென்றலுக்கும் உங்களுக்கும் பேதமில்லை
ஆடைகொள்ளப் பார்ப்பீர் ஐயோ தள்ளி நில் நில்

வான்விட்டு வாராய் சிறகுள்ள நிலவே
தேன்விட்டுப் பேசாய் உயிருள்ள மலரே
உன்னைக்கண்டு உயிர்த்தேன் சொட்டுதே சொட்டுதே


வெள்ளி மலரே வெள்ளி மலரே…
வெள்ளி மலரே வெள்ளி மலரே


வனங்களில் பூந்தளிர் தேடும்போதும்
நதிகளில் நீர்க்குடைந்தாடும்போதும்
உந்தன் திசை தேடும் விழிகள்

தொலைவினில் தரைதொட்டு ஆடும் மேகம்
அருகினில் செல்லச்செல்ல ஓடிப்போகும்
நீயும் மேகம்தானா நெஞ்சைத் தொட்டுச்சொல் சொல்

மழையிலும் கூவும் மரகதக் குயில் நான்
இரவிலும் அடிக்கும் புன்னகை வெயில் நான்
உன் நெஞ்சில் வசிக்கும் இன்னொரு உயிர் நான்

வெள்ளி மலரே வெள்ளி மலரே…

நேற்றுவரை நீ நெடுவனம் கண்டாய்
ஒற்றைக்காலில் உயரத்தில் நின்றாய்
மஞ்சள் மாலை மழையில் நனைந்தாய்
சித்திரை மாதம் வெயிலும் சுமந்தாய்
இத்தனை தவங்கள் ஏன்தான் செய்தாயோ
தேன் சிதறும் மன்மத மலரே என்றே சொல்வாயோ


இளந்தளிரே இளந்தளிரே
வெள்ளி மலரன்று இயற்றிய தவம் எதற்கு
பெண்மங்கை உந்தன் கூந்தல் சேர்வதற்கு

வெள்ளி மலரே வெள்ளி மலரே…

Thirudan Police - Pesadhe

படம்: திருடன் போலீஸ் (2014)
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: ஹரிஹரசுதன், பூஜா
பாடல்வரிகள்: நா.முத்துகுமார்






பேசாதே பார்வைகள் வீசாதே
வேறென்ன மொழி வேண்டும்
மௌனமே போதாதா

நெருங்காதே நெருங்கியே விலகாதே
வேறென்ன இனி வேண்டும்
மௌனமே போதாதா

என் நெஞ்சில் வந்தே என்னென்ன செய்தாய்
மிதக்கிறேன் காற்றாக

உன் பேரைத்தானே என் நெஞ்சில் இன்று
இசைக்கிறேன் பாட்டாக

பேசாதே பார்வைகள் வீசாதே
வேறென்ன மொழி வேண்டும்
மௌனமே போதாதா


கண்ணில் உன்னை அளந்தது கொஞ்சம்
கண்ணை மூடி ரசித்தது கொஞ்சம்
இன்னும் என்ன சொல்ல அன்பே
தெரியாமல் நான் தவித்தேனே

உன்னால் என்னை இழந்தது கொஞ்சம்
உன்னால் என்னை அடைந்தது கொஞ்சம்
இன்னும் என்ன சொல்ல அன்பே
புரியாமல் நான் துடித்தேனே

காதல் என்று சொன்னால் நீண்ட மயக்கம்
இன்று புரிகின்றதே

உன்னால் எந்தன் பெண்மை புதிய தயக்கம்
இன்று அறிகின்றதே

நீ என்ன சொல்ல நான் என்ன சொல்ல
வார்த்தைகள் தேவைதானா

நீ என்னை வெல்ல நான் உன்னை வெல்ல
ஆனாலும் இந்த காதல் போரில் யுத்தம் அடங்காதே

பேசாதே பார்வைகள் வீசாதே
வேறென்ன மொழி வேண்டும்
மௌனமே போதாதா


நெருங்காதே நெருங்கியே விலகாதே
வேறென்ன இனி வேண்டும்

மௌனமே போதாதா


Sunday, April 23, 2017

Namma Ooru - Music Album

படம்: நம்ம ஊரு (2016)
இசை:  பைஜு ஜேக்கப்
பாடியவர்கள்: அஜிஸ் அசோக்
பாடல்வரிகள்: அகின் பிரபு






கண் முழிச்சி பாக்கையில 
காலு ரெண்டும் ஆட்டம் போட‌
விண்டு மில்லு  சுத்தும் போது
நெஞ்சுக்குள்ள ஆட்டம் பாட்டம்
ஏ... ஹே... ஹே...

எங்கூரு போக போறேன்
உசுர எல்லாம் பாக்க போறேன்
ஹே... எங்கூரு போக போறேன்
உசுர எல்லாம் பாக்க போறேன்

எங்கூரு போக போறேன் உசுர எல்லாம் பாக்க போறேன்
பச்சமல ஏறி நின்னு பாடும் குயில் ஆக போறேன்
பள்ளிகூட வாசல் தேடி மீண்டும் போயி நிக்க போறேன்
காடு மேடு கம்மா தாண்டி களத்து மேட்ட பாக்க போறேன்
எங்கூரு போக போறேன் உசுர எல்லாம் பாக்க போறேன்
பச்சமல ஏறி நின்னு பாடும் குயில் ஆக போறேன்

ஏலே மக்கா... ஏலே...
ஏலே மக்கா... வாலே...
வாலே....... வாலே.......லே.. லே...

ஏலே மக்கா... ஏலே மக்கா... 
ஏலே மக்கா... ஏ... ஏ... ஏ... ஏ...


சொந்தபந்தம் பாத்த போகும் ஏழு ஜென்மம் காத்தா
மீண்டும் ஒரு ஜென்மம் கேட்டு சாமிகிட்ட போவேன்
கோயிலுக்கு போகும் எங்க ஊரு பொண்ண பாத்தா
சாமியினு நெனைச்சு கை தானா வணங்கும்
மலமேல பனி போல மனசெல்லாம் பூ பூக்கும்
போற வழி தோட்டம் எல்லாம் எங்க தோட்டம் தான்
பாக்குறவன் எல்லாம் எங்க மாமன் மச்சான் தான்
யே... ஊரு மொத்தம் எங்க வீடு பசிய யாரும் பார்த்ததில்ல‌


வீரபாண்டி பார்த்து அட வீரம் சேர்த்த மண்ணு
தீண்டும் பல தோழன் கூட தோள தட்டி போவோம்
பச்சரிசி முருக்கு அட இளநீர எறக்கு
பஞ்சு மெத்த போல புல்லுமேடு இருக்கு
கடலோர அலபோல கனவெல்லாம் தெனம் வீசும்
பூத்ததில்ல‌ பாத்த‌ வர தோயில தோட்டம்
பாத்ததில்ல நேத்து வர சாதிக கூட்டம்
ஹே... வள்ளுவர் வாக்கோடு வாழும் மண்ணு நம்ம ஊரு



Saturday, April 22, 2017

Ponmana Selvan - Adichen Kadhal

படம்: பொன்மன செல்வன் (1989)
இசை:  இளையராஜா
பாடியவர்கள்: K.S. சித்ரா, மனோ
பாடல்வரிகள்: வாலி







தனன... தான தனன...

தனன... தான தனன...

அடிச்சேன் காதல் பரிசு
புடிச்ச ஆளும் பெருசு

என்னானு நெனச்ச வட்டமிட்டு
கண்ணால வளைச்ச‌

கண்ணுறக்கம் இல்லாம தவிச்சேன்
திட்டமிட்டு இந்நாளில் முடிச்சேன்

அடிச்சேன் காதல் பரிசு
புடிச்ச ஆளும் பெருசு


நேற்று இன்று...
நேற்று இன்று நாளை என்று நீண்ட நாளாய்
தூண்டில் போட்டு மாட்டிடாத‌ செம்மீனு

ஆசை மேலே ஆசை வைத்து 
புடிச்சிட்டாளே பெண்மானு

மாமன் கூட‌ மல்லாடி
ஜெயிச்ச பொண்ணு கில்லாடி

வேட்டியும் சேலையும்
போட்டி போட்டு ஒன்னாச்சி
அடிச்சேன் காதல் பரிசு
புடிச்ச ஆளும் பெருசு

என்னானு நெனச்ச வட்டமிட்டு
கண்ணால வளைச்ச‌

கண்ணுறக்கம் இல்லாம தவிச்சேன்
திட்டமிட்டு இந்நாளில் முடிச்சேன்


வாடியம்மா...
வாடியம்மா வாடுறேன் நான்
சாமி ஒன்ன படைக்கும் போதே எனக்குதானே வச்சானே

கூப்பிடாம கூட வாரேன்
கலங்கிடாதே மச்சானே

ஊரு உறவு எல்லாரும் 
காண வேணும் கல்யாணம்

மாலையில் நடக்கனும் 
இளையராஜா கச்சேரி

அடிச்சேன் காதல் பரிசு
புடிச்ச ஆளும் பெருசு

என்னானு நெனச்ச வட்டமிட்டு
கண்ணால வளைச்ச‌

கண்ணுறக்கம் இல்லாம தவிச்சேன்
திட்டமிட்டு இந்நாளில் முடிச்சேன்

அடிச்சேன் காதல் பரிசு
புடிச்ச ஆளும் பெருசு




Ponmana Selvan - Kaana Karunguyile

படம்: பொன்மன செல்வன் (1989)
இசை:  இளையராஜா
பாடியவர்கள்: K.S. சித்ரா, மனோ
பாடல்வரிகள்: கங்கை அமரன்





கான‌ கருங்குயிலே... காதல் ஓர் பாவமடி...

கான‌ கருங்குயிலே காதல் ஓர் பாவமடி
காதல் கண‌க்கினிலே கண்ணீர்தான் லாபமடி
ஆசை உண்டானது அதில் வீடு ரெண்டானது
அடி கானகருங்குயிலே காதல் ஓர் பாவமடி......


பூமியில் நான் பிறந்த ஜாதகம் மாறுது
என் விதி மேடை கட்டி நாடகம் ஆடுது
வஞ்சியே உன் மனம் என்னிடம் ஏன் வந்தது
வந்ததால் இத்தனை துன்பமும் வாய்ந்தது
வேதனை சோதனை யாரிடம் நான் சொல்வது
என் மனம் இன்றுதான் அம்பலம் ஆனது
நீயும் இந்த துக்கத்திலே நில்லு மறு பக்கத்திலே
நேரம் ஒரு காலம் வரகூடும் அன்று ஒன்னாகலாம்

கான‌கருங்குயிலே காதல் ஓர் பாவமடி
ஆசை உண்டானது அதில் வீடு ரெண்டானது


கண்களில் நீர் வழிந்து கன்ன‌த்தில் ஓடுது
கற்பனை ஆயிரம் தான் எண்ண‌த்தில் ஓடுது
வானமே இல்லையேல் வெண்ணிலா என்னாவது
வளர்வதா தேய்வதா யாரிடம் கேட்பது
பூமரம் இல்லையேல் பூங்கொடி என்னாவது
வாழ்வதா வீழ்வதா யாரிடம் கேட்பது
இருந்தால் இனி உன்னோடுதான்
இல்லையேல் உடல் மண்ணோடுதான்
மாலை இடும் வேளை வரும் நாளை என்று நான் வாழ்கிறேன்

கான‌ கருங்குயிலே காதல் ஓர் பாவமடி
ஆசை உண்டானது அதில் வீடு ரெண்டானது

அடி கான‌ கருங்குயிலே காதல் ஓர் பாவமடி

காதல் கண‌க்கினிலே கண்ணீர்தான் லாபமடி


Saturday, April 15, 2017

Kadhal Kan Kattuthe - Kadhale Unakkenna Pavam

படம்: காதல் கண் கட்டுதே (2017)
இசை: பவன்
பாடியவர்: கார்த்திக்
பாடல்வரிகள்: மோகன்ராஜா


Image result for kadhal kan kattuthe poster




காதலே உனக்கென்ன பாவம் செய்தேனோ 
இதுவரை விட்டு விட்டு எங்கே சென்றாயோ 
ஏ... காதலே உனக்கென்ன பாவம் செய்தேனோ 
இதுவரை விட்டு விட்டு எங்கே சென்றாயோ

எத்தனை நாட்களாய் இத்தனை காதலை 
உனக்கென சேர்த்து வைத்தேன் நெஞ்சே நான்
எத்தனை ஆழமாய் இத்தனை ஆசையை 
எனக்குள்ளே நான் மறைத்தேன் அன்பே

காதலே உனக்கென்ன பாவம் செய்தேனோ 
இதுவரை விட்டு விட்டு எங்கே சென்றாயோ


நேற்றிரவு விழித்திருந்தேன் 
காரணம் நீ காரணம் நீ காரணம் நீ 
அதிகாலையிலேயே விழித்துக்கொண்டேன் 
காரணம் நீ காரணம் நீ காரணம் நீ

உனை பிரிந்து எங்கே போனாலும் 
நினைவோடு நீயும் வருவாயே 
நீ இல்லா இடமும் எனக்கேது

உன்னருகில் சேர்ந்தே இருந்தாலும் 
கண் முழுதும் நீயே நிற்பாயே 
இமைகள் அது பாவம் இமைக்காது
எனை எதோ செய்கின்றாய்

காதலே உனக்கென்ன பாவம் செய்தேனோ... செய்தேனோ...
இதுவரை விட்டு விட்டு எங்கே சென்றாயோ


வீட்டு சுவற்றில் கிறுக்கும் 
சிறு பிள்ளை போல நானும் 
உந்தன் பேரை காற்றில் 
வரைகின்றேனே அவசரமாய்

உன்னை பார்க்கும் நொடியில் 
கண்ணாடி பார்க்க தோன்றும் 
உந்தன் கண்ணில் என்னை நான் பார்க்கின்றேனே

ஒரு கனவாகி நீ கலைந்து போனாலும் 
இரவெல்லாம் தொலைந்தே கனவுக்கு காத்திருப்பேன்

உளறியது வார்த்தை அல்ல 
நீ வசிக்கும் இதயம் என் கண்ணே 
உருகியது நானுமல்ல 
நீ கொடுத்த காதல் பெண்ணே

காதலே உனக்கென்ன பாவம் செய்தேனோ 
இதுவரை விட்டு விட்டு எங்கே சென்றாயோ

Wednesday, April 12, 2017

Enai Noki Paayum Thota - Maruvaarthai

படம்: எனை நோக்கி பாயும் தோட்டா (2017)
இசை: தர்பூகா சிவா
பாடியவர்: சித் ஸ்ரீராம்
பாடல்வரிகள்: தாமரை


Image result for Enai Noki Paayum Thota



மறு வார்த்தை பேசாதே மடிமீது நீ தூங்கிடு
இமை போல நான் காக்க கனவாய் நீ மாறிடு
மயில் தோகை போலே விரலுன்னை வருடும்
மனப்பாடமாய் உரையாடல் நிகழும்
விழிநீரும் வீணாக இமைத்தாண்டக் கூடாதென
துளியாக நான் சேர்த்தேன் கடலாகக் கண்ணானதே
மறந்தாலும் நான் உன்னை நினைக்காத நாளில்லையே
பிரிந்தாலும் என் அன்பு ஒருபோதும் பொய்யில்லையே


விடியாத காலைகள்... முடியாத மாலைகளில்
வடியாத வேர்வைத் துளிகள்... பிரியாத போர்வை நொடிகள்
மணிக்காட்டும் கடிகாரம் தரும்வாதை அறிந்தோம்
உடைமாற்றும் இடைவேளை அதன் பின்பே உணர்ந்தோம்
மறவாதே மனம்...  மடிந்தாலும் வரும்...
முதல் நீ... முடிவும் நீ...
அலர் நீ... அகிலம் நீ...


தொலைதூரம் சென்றாலும்... தொடுவானம் என்றாலும் நீ
விழியோரம்தானே மறைந்தாய்... உயிரோடு முன்பே கலந்தாய்
இதழ் என்னும் மலர்கொண்டு கடிதங்கள் வரைந்தாய்
பதில் நானும் தருமுன்பே கனவாகி கலைந்தாய்
பிடிவாதம் பிடி...  சினம் தீரும் அடி...
இழந்தோம்... எழில்கோலம்...
இனிமேல்... மழை காலம்...

மறு வார்த்தை பேசாதே மடிமீது நீ தூங்கிடு
இமை போல நான் காக்க கனவாய் நீ மாறிடு
மயில் தோகை போலே விரலுன்னை வருடும்
மனப்பாடமாய் உரையாடல் நிகழும்
விழிநீரும் வீணாக இமைத்தாண்டக் கூடாதென
துளியாக நான் சேர்த்தேன் கடலாகக் கண்ணானதே
மறந்தாலும் நான் உன்னை  நினைக்காத நாளில்லையே
பிரிந்தாலும் என் அன்பு ஒருபோதும் பொய்யில்லையே

மறு வார்த்தை பேசாதே மடிமீது நீ தூங்கிடு



Naanum Rowdy Dhaan - Neeyum Naanum

படம்: நானும் ரெளடி தான் (2015)
இசை: அனிருத் 
பாடியவர்: நிதி மோகன், அனிருத்
பாடல்வரிகள்: தாமரை


Image result for naanum rowdy thaan first look



நீயும் நானும் சேர்ந்தே செல்லும் தூரமே
நீலம் கூட வானில் இல்லை எங்கும் வெள்ளை மேகமே
போக போக ஏனோ நீளும் தூரமே
மேகம் வந்து போகும் போக்கில் தூறல் கொஞ்சம் தூறுமே
என் அச்சம் ஆசை எல்லாமே தள்ளி போகட்டும்
எந்தன் இன்பம் துன்பம் எல்லாமே உன்னை சேரட்டும்

ஓ... நான் பகல் இரவு... நீ கதிர் நிலவு
என் வெயில் மழையில் உன் குடை அழகு

கத்தாழ முள்ள முள்ள
கொத்தோடு கிள்ள கிள்ள
கொலையோடு அள்ள அள்ள வந்த புள்ள
முந்தான துள்ள துள்ள
மகராசி என்ன சொல்ல
முத்தத்தால் என்ன கொல்ல வந்த புள்ள

நான் பகல் இரவு  நீ கதிர் நிலவு
என் மன கண்களில் நீ முதற் கனவு

நீ வேண்டுமே எந்த நிலையிலும் எனக்கென நீ போதுமே


ஒலி இல்லா உலகத்தில் 
இசையாக நீயே மாறி காற்றில் வீசினாய்

காதில் பேசினாய்...

மொழி இல்லா மௌனத்தில் 
விழியாலே வார்த்தை கோர்த்து கண்ணால் பேசினாய்

கண்ணால் பேசினாய்...

நூறு ஆண்டு உன்னோடு
வாழவேண்டும் மண்ணோடு
பெண் உனைத் தேடும் எந்தன் வீடு

நான் பகல் இரவு நீ கதிர் நிலவு
என் வெயில் மழையில் உன் குடை அழகு

கத்தாழ முள்ள முள்ள
கொத்தோடு கிள்ள கிள்ள
கொலையோடு அள்ள அள்ள வந்த புள்ள
முந்தான துள்ள துள்ள
மகராசி என்ன சொல்ல
முத்தத்தால் என்ன கொல்ல வந்த புள்ள

நான் பகல் இரவு நீ கதிர் நிலவு
என் மன கண்களில் நீ முதற் கனவு

நீ வேண்டுமே இந்த பிறவியை கடந்திட நீ போதுமே

Naanum Rowdy Dhaan - Kannaana Kanne

படம்: நானும் ரெளடி தான் (2015)
இசை: அனிருத்
பாடியவர்: ஷான் ரோல்டன்
பாடல்வரிகள்: விக்னேஷ் சிவன்


Image result for naanum rowdy thaan first look



கண்ணான கண்ணே
நீ கலங்காதடி
கண்ணா....ன கண்ணே
கண்ணான கண்ணே நீ கலங்காதடி
நீ... கலங்காதடி
யார் போனா...
யார் போனா என்ன...
யார் போனா... யார் போனா....
யார் போனா என்ன நான் இருப்பேனடி
நீ... கலங்காதடி...


ஒரு கணம் ஒரு போதும் பிரியகூடாதே
என் உயிரே என் உயிரே நீ அழுக கூடாதே
நீ கண்ட கனவு எதுமே கலையகூடாதே
நான் இருக்கும் நாள் வரைக்கும் நீ அழுக கூடாதே

கிடச்சத இழக்குறதும் இழந்தது கிடைக்குறதும்
அதுக்கு பழகுறதும் நியாயம்தானடி
குடுத்தத எடுக்குறதும் வேற ஒன்ன குடுக்குறதும்
நடந்தத மறக்குறதும் வழக்கம் தானடி

கண்ணான கண்ணே நீ கலங்காதடி
என் உயிரோட ஆதாரம் நீ தானடி
கண்ணான கண்ணே நீ கலங்காதடி
யார் போனா என்ன நான் இருப்பேனடி


என் விரல் இடுக்குல உன் விரல் கெடக்கணும்
நசுங்குற அளவுக்கு இறுக்கி நா புடிக்கணும்
நான் கண்ண தொரக்கையில் உன் முகம் தெரியணும்
உசுருள்ள வரைக்குமே உனக்கு என்ன புடிக்கணும்

கடல் அலை போல உன் கால் தொட்டு உரசி
கடல் உள்ள போறவன் நான் இல்லடி
கடல் மண்ண போல உன் காலோட ஒட்டி
கரை தாண்டும் வரை நான் இருப்பேனடி

கண்ணான கண்ணே நீ கலங்காதடி
என் உயிரோட ஆதாரம் நீதானடி
கண்ணான கண்ணே நீ கலங்காதடி
யார் போனா என்ன நான் இருப்பேனடி

ஒரு கணம் ஒரு போதும் பிரியகூடாதே
என் உயிரே என் உயிரே நீ அழுக கூடாதே
நீ கண்ட கனவு எதுமே கலையகூடாதே
நான் இருக்கும் நாள் நாள் வரைக்கும் நீ அழுக கூடாதே

நித்தம் நித்தம் நீ ஒடஞ்சா ஓட்ட வைக்க நான் இருக்கேன்
கிட்ட வச்சு பாத்துக்கவே உயிரே வாழுரேண்டி
பெத்தவங்க போனா என்ன சத்தமில்லா உன் உலகில்
நித்தம் ஒரு முத்தம் வைக்கத்தான் உயிர் வாழுரேண்டி

Power Paandi - Paarthen

படம் : ப.பாண்டி (2017)
இசை : ஷான் ரோல்டன்
பாடியவர்கள் : ஷான் ரோல்டன், ஸ்வேதா மோகன்
பாடல்வரிகள்: செல்வராகவன்


Power paandi poster.jpg



பார்த்தேன் களவு போன நிலவ நான் பார்த்தேன்
சாஞ்சேன் என் நெஞ்சுக்குள்ள என்ன சுகம் சாஞ்சேன்
காத்து சில்லுனு வீசுது காதல் இம்புட்டுதான்
சாரல் சன்ன‌தி காட்டுது காதல் இம்புட்டுதான்
இடி மின்னல் அடிக்குது வெளிச்சத்துல

பார்த்தேன் களவு போன நிலவ நான் பார்த்தேன்
சாஞ்சேன் என் நெஞ்சுக்குள்ள என்ன சுகம் சாஞ்சேன்


திருவிழா ஒன்ன முன்னே காட்சிதான் கொடுக்கிறதே
எத்தன பிறவி தவமோ கண்ணு முன்னே நடக்கிறதே
தரையில காலும் இல்ல கனவுல மெதக்கிறனே
மழையில மண்ணின் வாசம் மயங்கி போய் கெடக்கிறனே
வேண்டுன சாமி எல்லாம் வரமா தந்த துணை நீதான்
நெஞ்சுகுழி தவிக்குது அழகே உன்ன...

பார்த்தேன்... பார்த்தேன்... 
சாஞ்சேன்..சாஞ்சேன்..

பார்த்தேன் களவு போன நிலவ நான் பார்த்தேன்
சாஞ்சேன் என் நெஞ்சுக்குள்ள என்ன சுகம் சாஞ்சேன்

காத்து சில்லுனு வீசுது காதல் இம்புட்டுதான்
சாரல் சங்கதி பாடுது காதல் இம்புட்டுதான்
இடி மின்னல் அடிக்குது வெளிச்சத்துல...

Popular Posts