Thursday, March 30, 2017

Idharkuthaane Aasaipattai Balakumara - Yaen Endral

படம்: இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா (2013)
இசை: சித்தார்த் விபின்
பாடியவர்: ஹரிஹரன், விஷ்ணு பிரியா, மாளவிகா
பாடல்வரிகள்: மதன் கார்க்கி 


Image result for idharkuthane aasaipattai balakumara songs lyrics




ஹே ரேணு... என் லை`ப் ல நடந்த ஒரே நல்ல விஷயம் நீ தான்
நீ மட்டும் இல்லனா என்னைக்கோ என்னையும் இந்த‌ மனநல காப்பகத்துல சேர்த்துருப்பாங்க‌ ரேணு...

நான் உன்கிட்ட ஐ லவ் யூ சொன்னதவிட ஸாரி சொன்னது தான் அதிகம். ஆனா இன்னைக்கு ஸாரி சொல்ல மாட்டேன், பொய் சொல்ல மாட்டேன்.... 
ஏன் தெரியுமா....
ஏன் என்றால்.... உன் பிறந்தநாள்

உலகப் பூக்களின் வாசம்
உனக்குச் சிறை பிடிப்பேன்
உலர்ந்த மேகத்தைக் கொண்டு
நிலவின் கறை துடைப்பேன்
ஏன் என்றால்.... உன் பிறந்தநாள்
ஏன் என்றால்.... உன் பிறந்தநாள்


கிளை ஒன்றில் மேடை அமைத்து
ஒலிவாங்கி கையில் கொடுத்து
பறவைகளைப் பாடச் செய்வேன்
இலை எல்லாம் கைகள் தட்ட
அதில் வெல்லும் பறவை ஒன்றை 
உன் காதில் கூவச் செய்வேன்!

உன் அறையில் கூடு கட்டிட கட்டளையிடுவேன்
அதிகாலை உன்னை எழுப்பிட உத்தரவிடுவேன்
ஏன் என்றால்...என்றால்.... உன் பிறந்தநாள்
ஏன் என்றால்.... உன் பிறந்தநாள்


மலையுச்சி எட்டி, பனிக்கட்டி வெட்டி 
உன் குளியல் தொட்டியில் கொட்டி
சூரியனை வடிகட்டி 
பனியெல்லாம் உருக்கிடுவேன்
உன்னை அதில் குளிக்கத்தான் 
இதம் பார்த்து இறக்கிடுவேன்... ய... ய.... ய....

கண்ணில்லா பெண் மீன்கள் பிடித்து... ஒ.... ஓஓஓ....
உன்னோடு நான் நீந்த விடுவேன் ஒ.... 
நீ குளித்து முடித்துத் துவட்டத்தான்
என் காதல் மடித்துத் தந்திடுவேன்
ஏன் என்றால்.... உன் பிறந்தநாள்
ஏன் என்றால்.... உன் பிறந்தநாள்


நெஞ்சத்தை வெதுப்பகமாக்கி
அணிச்சல் செய்திடுவேன்
மெழுகுப் பூக்களின் மேலே
என் காதல் ஏற்றிடுவேன்

நீ ஊதினால் அணையாதடி 
நீ வெட்டவே முடியாதடி
உன் கண்களை நீ மூடடி
என்ன வேண்டுமோ அதைக் கேளடி
ஏன் என்றால்.... உன் பிறந்தநாள்
ஏன் என்றால்.... உன் பிறந்தநாள்


Wednesday, March 8, 2017

Maruthu - Karuvakaatu Karuvaaya

படம் : ம‌ருது (2016)
இசை : D. இமான்
பாடியவர்கள் : வந்தனா சீனிவாசன், ஜித்தின் ராஜ், ஜெயமூர்த்தி
பாடல்வரிகள்: வைரமுத்து


Image result





கருவகாட்டு கருவாயா
கூட காலமெல்லாம் வருவாயா
முத்தம் கொடுக்கும் திருவாயா
என்ன மூச்சுமுட்ட விடுவாயா
கால் வளந்த மன்னவனே... வா...
காவலுக்கு நின்னவனே... வா... வா...

நான் வெல்லாங்கரட்டு முளைச்ச மொட்டு
உன் வேட்டி எடுத்து வேலி கட்டு
உன் அண்ணாக்கயத்தில் முடிஞ்சிகிட்டு
என் ஆயுள் முழுக்க அன்ப கொட்டு

தானே நானே... த‌னன்னனே....
தானே த‌னன்னனே....
தானே நானே... தானே நானே...

தானே ந‌னன்னனே....


தன்னந்தனி மானு
இவ தண்ணியில்லா மீனு
மஞ்சத்தாலி போட்ட 
நீ மட்டுந்தானே ஆளு

குத்தமில்லா பொண்ணு
நீ குத்தவச்ச தேனு
கண்ணுக்குள்ள வச்சு 
உன்ன காப்பாத்துவேன் நானு

தொடுத்த பூவுக்கு நார் பொறுப்பு
என் துவண்ட‌ சேலைக்கு நீ பொறுப்பு
இழுத்த இழுப்புக்கு நான் பொறுப்பு
என் இடுப்பு வலிக்கு நீ பொறுப்பு

நட்சத்திரம் எத்தனையோ
எண்ணிக்கை தெரிஞ்சது எனக்கு
மச்சம் மட்டும் எத்தனையோ
இன்னமும் எடுக்கல கணக்கு

நான் வெல்லாங்கரட்டு முளைச்ச மொட்டு
உன் வேட்டி எடுத்து வேலி கட்டு
உன் அண்ணாக்கயத்தில் முடிஞ்சிகிட்டு
என் ஆயுள் முழுக்க அன்ப கொட்டு
கருவகாட்டு கருவாயா
கூட காலமெல்லாம் வருவாயா
முத்தம் கொடுக்கும் திருவாயா...


ஏ... பாசமுள்ள நெஞ்சில்
நான் வாசம் பண்ணப் போறேன்
வாரம் வரும் முன்னே 
உன்ன மாசம் பண்ணப்போறேன்

சாமக்கோழி கூவ
உன் சங்கதிக்கு வாரேன்
ஒத்த முத்தம் தந்தா 
நான் ரெட்டப்புள்ள தாரேன்

பாலு தயிரா உறையும் முன்னே
பத்து தடவ சேர்ந்திருப்போம்
தியிரு மோரா மாருமட்டும்
உயிரும் உயிரும் கலந்திருப்போம்

உசுரையும் மானத்தையும் உங்கிட்ட
கொடுத்திட்டேன் தலைவா
ஏழுசென்மம் தீரும் மட்டும் 
எனக்கு இருக்கனும் உறவா

நான் வெல்லாங்கரட்டு முளைச்ச மொட்டு
உன் வேட்டி எடுத்து வேலி கட்டு
உன் அண்ணாக்கயத்தில் முடிஞ்சிகிட்டு
என் ஆயுள் முழுக்க அன்ப கொட்டு
கருவகாட்டு கருவாயா

Popular Posts