Monday, May 30, 2016

Achcham Yenbadhu Madamaiyada - Thalli Pogathey

படம்: அச்சம் என்பது மடமையடா (2016)
இசை: A.R.ரஹ்மான்
பாடியவர்: சித் ஸ்ரீராம், அபர்ணா நாராயணன், ADK
பாடல்வரிகள்: தாமரை
Related image



ஹோவ்... ஒ ஹோவ்
ஒஒ ஹோவ்... ஹோவ்... ஹோவ்... ஹோவ்...

ஏனோ வானிலை மாறுதே...
மணித்துளி போகுதே...
மார்பின் வேகம் கூடுதே...
மனமோ ஏதோ சொல்ல
வார்த்தை தேடுதே.....

கண்ணெல்லாம் நீயேதான் நிற்கின்றாய்....
விழியின் மேல் நான் கோபம் கொண்டேன்....
இமை மூடிடு என்றேன்....

நகரும் நொடிகள்.....
கசையடி போலே
முதுகின் மேலே
விழுவதினாலே...
வரிவரிக் கவிதை
எழுதும் வலிகள்
எழுதா மொழிகள்..... எனது...

கடல் போலப் பெரிதாக நீ நின்றாய்.....
சிறுவன் நான், சிறு அலை மட்டும்தான்....
பார்க்கிறேன்...... பார்க்கிறேன்......

எரியும் தீயில் எண்ணெய் நீ ஊற்று...
நான் வந்து நீராடும் நீரூற்று

ஓ ஓ ஓ
ஊரெல்லாம் கண்மூடித் தூங்கும்
ஓசைகள் இல்லாத இரவே.....
ஓ ஓ ஓ
நான் மட்டும் தூங்காமல் ஏங்கி
உன்போலக் காய்கின்றேன் நிலவே......

கலாபம் போலாடும் கனவில் வாழ்கின்றேனே....

கை நீட்டி..... உன்னைத்...
தீண்டவே பார்த்தேன்...
ஏன் அதில் தோற்றேன்...?

ஏன் முதல் முத்தம்... முதல் முத்தம்
தரத் தாமதம் ஆகுது....?
தாமரை வேகுது.... தாமரை வேகுது....


ஹோவ்... ஒ ஹோவ்
ஒஒ ஹோவ்... ஹோவ்... ஹோவ்... ஹோவ்...
ஹோவ்... ஒ ஹோவ்
ஒஒ ஹோவ்... ஹோவ்... ஹோவ்... ஹோவ்...

தள்ளிப் போகாதே.... எனையும்
தள்ளிப் போகச் சொல்லாதே....
இருவர்.... இதழும்
மலர் எனும் முள்தானே.....

தள்ளிப் போகாதே.... எனையும்
தள்ளிப் போகச் சொல்லாதே....
இருவர்.... இதழும்
மலர் எனும் முள்தானே.....


தேகம் தடையில்லை... என நானும்
ஒரு வார்த்தை சொல்கின்றேன்....
ஆனால் அது பொய்தான்... என நீயும் 
அறிவாய் என்கின்றேன்....
அருகினில் வா.....!

கனவிலே தெரிந்தாய்
விழித்ததும் ஒளிந்தாய்
கனவினில் தினம் தினம் மழைத்துளியாய்ப் பொழிந்தாய்!
கண்களில் ஏக்கம்
காதலின் மயக்கம்
ஆனால் பார்த்த நிமிடம் ஒருவிதமான தயக்கம்
நொடி நொடியாய் நேரம் குறைய
என் காதல் ஆயுள் கரைய
ஏனோ ஏனோ மார்பில் வேகம் கூட
விதியின் சதி விளையாடுதே
எனை விட்டு பிரியாதன்பே....

எனை விட்டு பிரியாதன்பே
ஏனோ ஏனோ
ஏனோ ஏனோ
ஏனோ ஏனோ

அன்பே...



Friday, May 27, 2016

Achcham Yenbadhu Madamaiyada - Rasaali

படம்: அச்சம் என்பது மடமையடா (2016)
இசை: A.R.ரஹ்மான்
பாடியவர்: சத்ய பிரகாஷ், ஷாஷா திருப்பதி
பாடல்வரிகள்: தாமரை

Related image



பறக்கும் ராசாளியே ராசாளியே நில்லு
இங்கு நீ வேகமா நான் வேகமா சொல்லு
கடிகாரம் பொய் சொல்லும் என்றே நான் கண்டேன்
கிழக்கெல்லாம் மேற்க்காகிடாக கண்டேனே

பறவை போல் ஆகினேன் போல் ஆகினேன் இன்று
சிறகும் என் கைகளும் என் கைகளும் ஒன்று

ராசாளி... பந்தயமா... பந்தயமா...
நீ முந்தியா நான் முந்தியா பார்ப்போம்... பார்ப்போம்
முதலில் யார் சொல்வது யார் சொல்வது அன்பை
முதலில் யார் ஏய்வ‌து யார் ஏய்வது அம்பை
மெளனம் பேசாமலே பேசாமலே செல்ல‌
வாவி நீரில் கமலம் போல் ஆடி மெல்ல‌
கனவுகள் வருதே கண்ணின் வெளியே
என் தோள் மீது நீ
நான் குளிர் காய்கின்ற தீ


எட்டு திசை முட்டும் என்னை பகலினில்
கொட்டும் பனி மட்டும் துணை இரவினில்
நெட்டும் ஒரு பட்டு குரல் மனதினில் மடிவேனோ
முன்னில் ஒரு காற்றின்  களி முகத்தினில்
பின்னில் சிறு பச்சைக்கிளி முதுகினில்
வாழ்வில் ஒரு பயணம் இது முடிந்திட விடுவேனோ

எட்டு திசை முட்டும் என்னை பகலினில்
கொட்டும் பனி மட்டும் துணை இரவினில்
நெட்டும் ஒரு பட்டு குரல் மனதினில் மடிவேனோ
முன்னில் ஒரு காற்றின்  களி முகத்தினில்
பின்னில் சிறு பச்சைக்கிளி முதுகினில்
வாழ்வில் ஒரு பயணம் இது முடிந்திட விடுவேனோ

ராசாளி... பந்தயமா... பந்தயமா...
முதலில் யார் சொல்வது யார் சொல்வது அன்பை
முதலில் யார் ஏய்வ‌து யார் ஏய்வது அம்பை


நின்னு கோரி...
நின்னு கோரி... நின்னு கோரி...
ஓ... நானுஷா... நின்னு கோரி...
உன்... நனனன...... நின்னு கோ...ரி...
கோ....ரி...

வெயில் மழை வெட்கும் படி நனைவதை
விண்மீன்களும் வீம்பாய் என்னை தொடர்வதை
ஊருக்கொரு காற்றின் மனம் கமழ்வதை மறவேனே
முன்னம் இது போலே புது அனுபவம்
கண்டேன் என சொல்லும் படி நினைவில்லை
இன்னும் எதிர்காலத்திலும் வழி இல்லை மறவேனே

வெயில் மழை வெட்கும் படி நனைவதை
விண்மீன்களும் வீம்பாய் என்னை தொடர்வதை
ஊருக்கொரு காற்றின் மனம் கமழ்வதை மறவேனே
முன்னம் இது போலே புது அனுபவம்
கண்டேன் என சொல்லும் படி நினைவில்லை
இன்னும் எதிர்காலத்திலும் வழி இல்லை மறவேனே


ராசாளி... பந்தயமா... பந்தயமா...
முதலில் யார் சொல்வது யார் சொல்வது அன்பை
முதலில் யார் ஏய்வ‌து யார் ஏய்வது அம்பை
மெளனம் பேசாமலே பேசாமலே செல்ல‌
வாவி நீரில் கமலம் போல் ஆடி மெல்ல‌
கனவுகள் வருதே கண்ணின் வெளியே
என் தோள் மீது நீ
நான் குளிர் காய்கின்ற தீ
என் தோள் மீது நீ
நான் குளிர் காய்கின்ற தீ
குளிர் காய்கின்ற தீ...
குளிர் காய்கின்ற தீ...


Saturday, May 7, 2016

Irudhi Suttru - Ey Sandakaara

படம்: இறுதிச் சுற்று (2016)
இசை: சந்தோஷ் நாரயணன்
பாடியவர்: தீ
பாடல்வரிகள்: விவேக்


ஏய்... சண்டக்கரா குண்டு முழியில
ரெண்டு உயிரை தேடி பாயுதே
குத்து சண்ட இத்தோட நிப்பாட்டு போதும்
முத்த சண்ட என்னோட நீ போட வேணும்
தனிமை தொரத்த அலையுற நானும்
மனச திறந்து என்ன காப்பாத்து
தேடி கட்டிக்கப் போறேன்
தாவி ஒட்டிக்கப் போறேன்
தாலி கட்டிக்கப் போறேன் – ஆமா
மோதி முச்சிக்கப் போறேன்
பாதி பிச்சிக்கப் போறேன்
பாவி வெச்சிக்கப் போறேன் – ஆமா

எதிரானையே அழகாளனே
உன்னை வந்து ஒரசாம ஒதுங்கியே நடந்தேன்
எது மோதி நா இடம் மாறினேன்
தடுமாறி முழிச்சா நா உனக்குள்ளே கிடந்தேன்
கண்கட்டி வித்தை காட்டி
என்னை எப்போ கட்டி போட்ட
நான் என்னை எழுதி நீட்ட
அதில் வெட்கம் மட்டும் கிழிச்சு போட்ட
தேடி கட்டிக்கப் போறேன்
தாவி ஒட்டிக்கப் போறேன்
தாலி கட்டிக்கப் போறேன் – ஆமா
மோதி முச்சிக்கப் போறேன்
பாதி பிச்சிக்கப் போறேன்
பாவி வெச்சிக்கப் போறேன் – ஆமா

சிறு ஓடையில் ஒரு ஓடமா
மனசோட ஒரு காதல் மிதந்தோடுதடா
உனை பாத்ததும் வழி ஓரமா
உயிரோட ஒரு பாதி கழண்டோடுதடா
என் ஆச ரொம்ப பாவம்
கொஞ்சம் கண் எடுத்து பாரு
நீ மோச பார்வை வீசி
மதி கெட்டு திரியும் மதியை பாரு

தனிமை தொரத்த அலையுற நானும்
மனச திறந்து என்ன காப்பாத்து
தேடி கட்டிக்கப் போறேன்
தாவி ஒட்டிக்கப் போறேன்
தாலி கட்டிக்கப் போறேன் – ஆமா
மோதி முச்சிக்கப் போறேன்
பாதி பிச்சிக்கப் போறேன்
பாவி வெச்சிக்கப் போறேன் – ஆமா

Irudhi Suttru - Vaa Machaney

படம்: இறுதிச் சுற்று (2016)
இசை: சந்தோஷ் நாரயணன்
பாடியவர்: ஷான் ரோல்டன்
பாடல்வரிகள்: விவேக்





Download this MP3

அஞ்சு நூறு தாளைப் பாத்து ஆட்டம் போடுறா 
ஆஞ்ச மீனா குழம்புக்குள்ளத் தாளம் போடுறா 
செஞ்சுவச்ச ஆசையெல்லாம் தீக்கப்பாக்குறா 
நெஞ்சுக்குள்ள இராணியாட்டம் உச்சி நோக்குறா 
கிடைச்சா இடத்தைப் புடிப்பா 
அடுத்து எதுவும் நடக்கும் தடுக்காதே 

வா மச்சானே மச்சானே 
பூ வச்சாளே வச்சாளே 
தீக்குச்சாட்டம் தொட்டாளே சுட்டாளே 
வா மச்சானே மச்சானே 


கறியும் சோறும் கடிச்சுத் துன்ன கிளம்பி நிக்கிறா 
தனுசுப் படம் பாக்க ஏங்கி புலம்பிச் சொக்குறா
கோதாவுல இறங்கச் சொன்னா தாதாப் பொண்ணு 
கண்ணுல கெத்து இவ கண்ணுல கெத்து 
வாய்ப்பில்லாம வச்சிடுவா வாயில குத்து 
வாயில குத்து வாயில குத்து 

ஏ... வா மச்சானே மச்சானே 
பூ வச்சாளே வச்சாளே 
தீக்குச்சாட்டம் தொட்டாளே சுட்டாளே 
வா மச்சானே மச்சானே


ஒத்த நாளுல இவங்க வாழ்க்கை சக்கரம் 
தத்தி ஓடுதே கடலே காக்கும் சத்திரம் 
எந்த நேரமும் சிரிப்பச் சொந்தமாக்குவா 
திட்டம்போட்டு வந்துப்புட்டா திமுருப் பொண்ணு... ஹோய்

வா மச்சானே மச்சானே 
பூ வச்சாளே வச்சாளே 
தீக்குச்சாட்டம் தொட்டாளே சுட்டாளே 
வா மச்சானே மச்சானே

வா மச்சானே மச்சானே 
பூ வச்சாளே வச்சாளே 
தீக்குச்சாட்டம் தொட்டாளே சுட்டாளே 
வா மச்சானே மச்சானே

Friday, May 6, 2016

Thangamagan - Uyire Uyire

படம்: தங்கமகன் (2015)
இசை: அனிருத்
பாடியவர்: தனுஷ், நிகிதா காந்தி
பாடல்வரிகள்: தனுஷ்

Related image




உயிரே உயிரே...உயிரின் உயிரே...
உயிரே உயிர் உ... உ... உயிரே...
விழியே விழியே... விழியின் விழியே...
விழியே விழி வி... வி... விழியே...
உயிரே... விழியே...
விழியின் உ... உ... உயிரே...

இது போதை நேரம் எதுவும் பேசாதே...
தடுமாறினாலும் தயக்கம் காட்டாதே...


இது போதை நேரம் எதுவும் பேசாதே...
தடுமாறினாலும் தயக்கம் காட்டாதே...

அடியே... அடியே... உன் வானில் தள்ளாதே...
அடியே... அடியே... விழி தூக்கம் கொல்லாதே...
அடியே... அடியே... இளமை விழியே...
இதழ்கள் இணைத்து இதயம் துடிப்போம்...


தீராதப் பேச்சு ஓ.. ஓ..
காதுக்குள் மூச்சு ஓ.. ஓ..
கன்னத்தில் முத்தம் ஓ.. ஓ..
முத்தத்தின் சத்தம் ஓ.. ஓ..


மாறாதப் பார்வை ஓ.. ஓ..
மார்போடு நானும் ஓ.. ஓ..
பொய்யான கோபம் ஓ.. ஓ..
பொல்லாத கைகள் ஓ.. ஓ..
உன்னோடும் என்னோடும் நான் காணும் நாளை ஓ.. ஓ..
ஒன்றோடு ஒன்றாகும் வேளை ஓ.. ஓ....


சொல்லாத ஆசை எல்லாம் நீதானே பெண்ணே ஓ.. ஓ..
தள்ளாடும் ஆயுள்வரை வேண்டும் ஓ.. ஓ..
என் காதல் பாடல் எல்லாம் நீதானே பெண்ணே ஓ.. ஓ..
என் மாலை நேரம் எல்லாம் வேண்டும் ஓ.. ஓ..

அடியே... அடியே... உன் வானில் தள்ளாதே...
அடியே... அடியே... விழி தூக்கம் கொல்லாதே...
அடியே... அடியே... இளமை விழியே...
இதழ்கள் இணைத்து இதயம் துடிப்போம்...


உயிரே உயிரே...உயிரின் உயிரே...
உயிரே உயிர் உ... உ... உயிரே...
விழியே விழியே... விழியின் விழியே...
விழியே விழி வி... வி... விழியே...
உயிரே... விழியே...
விழியின் உ... உ... உயிரே...
இது போதை நேரம் எதுவும் பேசாதே...

தடுமாறினாலும் தயக்கம் காட்டாதே...

இது போதை நேரம் எதுவும் பேசாதே...
தடுமாறினாலும் தயக்கம் காட்டாதே...


Thangamagan - Enna Solla

படம்: தங்கமகன் (2015)
இசை: அனிருத்
பாடியவர்: ஸ்வேதா மோகன்
பாடல்வரிகள்: தனுஷ்


Related image




என்ன சொல்ல ஏது சொல்ல
கண்ணோடு கண் பேச வார்த்தயில்ல
என்னென்னவோ உள்ளுக்குள்ள
வெல்ல சொல்லாம என் வெட்கம் தள்ள

சின்னச் சின்ன ஆச
உள்ள திக்கித் திக்கிப் பேச
மல்லிகப்பூ வாசம்
கொஞ்சம் காத்தோட வீச
உத்து உத்துப் பார்க்க
நெஞ்சில் முத்து முத்தா வேர்க்க
புத்தம் புது வாழ்க்க
என்ன உன்னோட சேர்க்க

என்னோடு நீ உன்னோடு நான்
ஒன்றோடு நாம் ஒன்றாகும் நாள்
என்னோடு நீ உன்னோடு நான் ஒன்றாகும் நாள்...
என்னோடு நீ உன்னோடு நான்
ஒன்றோடு நாம் ஒன்றாகும் நாள்
என்னோடு நீ உன்னோடு நான் ஒன்றாகும் நாள்...


சொல்லாமல் கொள்ளாமல்
நெஞ்சோடு காதல் சேர
நெஞ்சோடு காதல் சேர மூச்சு முட்டுதே
இந்நாளும் எந்நாளும்
கை கோர்த்துப் போகும் பாதை
கை கோர்த்துப் போகும் பாதை கண்ணில் தோன்றுதே
சொல்லாத எண்ணங்கள்
பொல்லாத ஆசைகள்
உன்னாலே சேருதே பாரம் கூடுதே..
தேடாத தேடல்கள்
காணாத காட்சிகள்
உன்னோடு காண்பதில் நேரம் போகுதே

சின்னச் சின்ன ஆச
உள்ள திக்கித் திக்கிப் பேச
மல்லிகப்பூ வாசம்
கொஞ்சம் காத்தோட வீச
உத்து உத்துப் பார்க்க
நெஞ்சில் முத்து முத்தா வேர்க்க
புத்தம் புது வாழ்க்க
என்ன உன்னோட சேர்க்க

என்னோடு நீ உன்னோடு நான்
ஒன்றோடு நாம் ஒன்றாகும் நாள்
என்னோடு நீ உன்னோடு நான் ஒன்றாகும் நாள்...
என்னோடு நீ உன்னோடு நான்
ஒன்றோடு நாம் ஒன்றாகும் நாள்
என்னோடு நீ உன்னோடு நான் ஒன்றாகும் நாள்...

என்ன சொல்ல ஏது சொல்ல
கண்ணோடு கண் பேச வார்த்தயில்ல
என்னென்னவோ உள்ளுக்குள்ள
வெல்ல சொல்லாம என் வெட்கம் தள்ள


Wednesday, May 4, 2016

Sethupathi - Konji Pesida Venaam

படம்: சேதுபதி (2016)
இசை: நிவாஸ் கே.பிரசன்னா
பாடியவர்: K.S.சித்ரா, ஸ்ரீராம் 
பாடல்வரிகள்: நா.முத்துக்குமார்





கொஞ்சி பேசிட வேணாம் உன் கண்ணே பேசுதடி
கொஞ்சமாக பார்த்தா மழைசாரல் வீசுதடி
நா நின்னா நடந்தா கண்ணு உன் முகமே கேட்குதடி
அடி தொலைவில இருந்தாதானே பெருங்காதல் கூடுதடி
தூரமே தூரமாய் போகும் நேரம்

கொஞ்சி பேசிட வேணாம் உன் கண்ணே பேசுதடா
கொஞ்சமாக பார்த்தா மழைசாரல் வீசுதடா
நா நின்னா நடந்தா கண்ணு உன் முகமே கேட்குதடா
அட தொலைவில இருந்தாதான பெருங்காதல் கூடுதடா
தூரமே தூரமாய் போகும் நேரம்


ஆசை வலையிடுதா
நெஞ்சம் அதில் விழுதா
எழுந்திடும் போதும் அன்பே
மீண்டும் விழுந்திடுதா

தனிமை உனை சுடுதா
நினைவில் அனல் தருதா
தலையணைப் பூக்களிலெல்லாம்
கூந்தல் மணம் வருதா


குறு குறு பார்வையால் கொஞ்சம் கடத்துறியே

குளிருக்கும் நெருப்புக்கும் நடுவுல நிறுத்துறியே

வேறு என்ன வேணும் மேகம் மழை வேணும்
சத்தம் இல்லா முத்தம் தர வேணும்….

கொஞ்சி பேசிட வேணாம் உன் கண்ணே பேசுதடி

கொஞ்சமாக பார்த்தால் மழைசாரல் வீசுதடா

கொஞ்சி பேசிட வேணாம் உன் கண்ணே பேசுதடா
கொஞ்சமாக பார்த்தால் மழைசாரல் வீசுதடா… 

Miruthan - Munnal Kadhali

படம்: மிருதன் (2016)
இசை: D. இமான்
பாடியவர்:  விஷால் தட்லானி, சரண்யா கோபிநாத்
பாடல்வரிகள்: மதன் கார்க்கி 








ஏய் முன்னாள் காதலி என் முன்னாள் காதலி
உன் காதல் இன்றியும் நான் வாழ்வேன் பாரடி
ஏய் முன்னாள் காதலி என் முன்னாள் காதலி
எவனோடோ போகிறாய் போய் நீயும் வாழடி
வலி இருந்தும் சோகம் இல்லை
உன்மேல் துளி கோபம் இல்லை
பெண்ணே நீ இல்லாமல் என் எதிர்காலம் தூரம் இல்லை

முன்னாள் காதலி முன்னாள் காதலி
உன் பொய்கள் தந்த தித்திப்பில் மயங்கிக் கிடந்தேன்
முன்னாள் காதலி முன்னாள் காதலி
உண்மைக் கசக்கும் வேளையில் மயக்கம் தெளிந்தேன்
ஏய் முன்னாள் காதலி என் முன்னாள் காதலி
உன் காதல் இன்றியும் நான் வாழ்வேன் பாரடி
ஏய் முன்னாள் காதலி... காதலி...

தன்னந்தனிமையில் ஒரு காதலை வளர்த்தவன்
யாரும் அறியும்முன் அதை உயிருடன் புதைக்கிறேன்
எனுள் நுழைந்திடும்போது அதிர்வின்றியே நுழைந்தாயடி
வெடிக்கிடம் விடும்போதோ தொடர்பூகம்பம் விழைத்தாயடி
யாரோடு வாழ்ந்தாலும் நீ இன்பம் காணுவாய்
என்றேனும் ஓர் நாளில் என் காதல் காணுவாய் வருந்துவாய்

முன்னாள் காதலி முன்னாள் காதலி
உன் பொய்கள் தந்த தித்திப்பில் மயங்கிக் கிடந்தேன்
முன்னாள் காதலி முன்னாள் காதலி
உண்மைக் கசக்கும் வேளையில் மயக்கம் தெளிந்தேன்
ஏய் முன்னாள் காதலி என் முன்னாள் காதலி
உன் காதல் இன்றியும் நான் வாழ்வேன் பாரடி
ஏய் முன்னாள் காதலி என் முன்னாள் காதலி
எவனோடோ போகிறாய் போய் நீயும் வாழடி
வலி இருந்தும் சோகம் இல்லை
உன்மேல் துளி கோபம் இல்லை
பெண்ணே நீ இல்லாமல் என் எதிர்காலம் தூரம் இல்லை

முன்னாள்... முன்னாள்... முன்னாள்...
முன்னாள் காதலி முன்னாள் காதலி
உன் பொய்கள் தந்த தித்திப்பில் மயங்கிக் கிடந்தேன்
முன்னாள் காதலி முன்னாள் காதலி
உண்மைக் கசக்கும் வேளையில் மயக்கம் தெளிந்தேன்

முன்னாள் காதலி முன்னாள் காதலி முன்னாள் காதலி
முன்னாள் காதலி முன்னாள் காதலி முன்னாள் காதலி
முன்னாள் காதலி முன்னாள் காதலி முன்னாள் காதலி
முன்னாள் காதலி முன்னாள் காதலி முன்னாள் காதலி



Miruthan - Mirutha Mirutha

படம்: மிருதன் (2016)
இசை: D. இமான்
பாடியவர்: ஸ்ரேயா கோஷல், விஜய் யேசுதாஸ்
பாடல்வரிகள்: மதன் கார்கி 





மிருதா... மிருதா... மிருதா...
நீ யாரென இவளிடம் சொல்வாயா?
மிருதா மிருதா மிருதா 
உன் காதலை உயிருடன் கொல்வாயா?
இவள் நெஞ்சினில் மெதுவாய் நுழைவாயா?
இவள் கண்களின் முன்னே சிதைவாயா?
மிருதா...

நான் மனிதன் அல்ல
கொல்லும் மிருகம் அல்ல
இரண்டுக்கும் நடுவில் ஏதோ ஒன்று
நான் நிஜமும் அல்ல 
நீ கனவும் அல்ல
இரண்டுக்கும் இடையில் ஆனோம் இன்று

மிருதா... மிருதா... மிருதா...
நீ யாரென இவளிடம் சொல்வாயா?
மிருதா... மிருதா... மிருதா...
உன் காதலை உயிருடன் கொல்வாயா?

நான் அழுகை அல்ல
நீ சிரிப்பும் அல்ல
இரண்டுக்கும் இடையில் கதறல் இது
நான் சிலையும் அல்ல
நீ உளியும் அல்ல
இரண்டுக்கும் இடையில் சிதறல் இது
நான் முடிவும் அல்ல
நீ தொடக்கம் அல்ல
இரண்டுக்கும் இடையில் பயணம் இது
நான் இருளும் அல்ல
நீ ஒளியும் அல்ல 
இரண்டுக்கும் இடையில் விடியல் இது

தொலைவில் அன்று பார்த்த கணமா
அருகில் இன்று நேரும் ரணமா…
கொல்லாமல் நெஞ்சை கொல்வதென்ன கூறாய்
வாய் விட்டு அதை கூறாயோ
சொல்லாமல் என்னை விட்டு நீயும் போனால்
என்னாவேன் என்று பாராயோ

சில மேகங்கள் பொழியாமலே
கடந்தே விடும் உன் வானிலே
எந்தன் நெஞ்சமும் ஒரு மேகமே 
அதை சிந்தும் முன்னே வானம் தீர்ந்ததே

மிருதா... மிருதா... மிருதா...
நீ யாரென இவளிடம் சொல்வாயா?
மிருதா... மிருதா... மிருதா...
உன் காதலை உயிருடன் கொல்வாயா?
இவள் நெஞ்சினில் மெதுவாய் நுழைவாயா?
இவள் கண்களின் முன்னே சிதைவாயா?
மிருதா…

நான் மனிதன் அல்ல
கொல்லும் மிருகம் அல்ல
இரண்டுக்கும் நடுவில் ஏதோ ஒன்று.
நான் நிஜமும் அல்ல
நீ கனவும் அல்ல
இரண்டுக்கும் இடையில் ஆனோம் இன்று

Popular Posts