Thursday, December 22, 2016

Punnagai Mannan - Vaan megam

படம் : புன்னகை மன்னன் (1986) 
இசை : இளையராஜா 
பாடியவர் :  K.S. சித்ரா 
பாடல் வரி : வைரமுத்து


Image result for punnagai mannan




வான் மேகம் பூப்பூவாய்த் தூவும்
தேகம் என்னவாகும் இன்பமாக நோகும்
மழைத்துளி தெறித்தது எனக்குள்ளே குளித்தது
நினைத்தது பலித்தது குடைக்கம்பி துளிர்த்தது
வானம் முத்துக்கள் சிந்தி வாழ்க‌வென்றது
காதல் வென்றது மேகம் வ‌ந்தது பூக்கள் சிந்துது
ஆளுமில்லை சேர்த்தெடுக்க நூலுமில்லை கோர்த்தெடுக்க
வான் மேகம் பூப்பூவாய்த் தூவும்
தேகம் என்னவாகும் இன்பமாக நோகும்


வானிலே வானிலே நீரின் தோரணங்களோ... ஹோய்
என் மனம் பொங்குதே என்ன காரணங்களோ
அவன் விழி அசைத்த‌தில் இவள் மனம் அசைந்ததோ
தளிர்கரம் பிடிக்கையில் மலர்க்கொடி சிலிர்த்ததோ
சாலை எங்கும் இங்கே சங்கீத மேடையானதோ
வாடை பாடுதோ தூரல் போடுதோ தோகை ஆடுதோ
பூமியெங்கும் கவியரங்கம் சாரல் பாடும் ஜலதரங்கம்


வான் மேகம் பூப்பூவாய்த் தூவும்
தேகம் என்னவாகும் இன்பமாக நோகும்
மழைத்துளி தெறித்தது எனக்குள்ளே குளித்தது
நினைத்தது பலித்தது குடைக்கம்பி துளிர்த்தது
வானம் முத்துக்கள் சிந்தி வாழ்க‌வென்றது
காதல் வென்றது மேகம் வ‌ந்தது பூக்கள் சிந்துது
ஆளுமில்லை சேர்த்தெடுக்க நூலுமில்லை கோர்த்தெடுக்க
வான் மேகம் பூப்பூவாய்த் தூவும்
தேகம் என்னவாகும் இன்பமாக நோகும்

Saturday, December 17, 2016

Rekka - Kannamma

படம்: றெக்க‌ (2016)
இசை:  D. இமான் 
பாடியவர்கள்: ஸ்ரேயா கோஷல்
பாடல்வரிகள்: யுகபாரதி





கண்ண காட்டு போதும்
நிழலாககூட வாரேன்
என்ன வேணும் கேளு
குறையாம நானும் தாரேன்
நச்சுனு காதல கொட்டுற ஆம்பள
ஓட்டுறியே உசுர நீ... நீ...
நிச்சயமாகல... சம்மந்தம் போடல...
அப்பவுமே ஓறவு நீ... நீ...
அன்புல வெத வெதைச்சு என்ன நீ பறிச்சாயே…

கண்ண காட்டு போதும் 
நிழலாககூட வாரேன் 
என்ன வேணும் கேளு 
குறையாம நானும் தாரேன்
நச்சுனு காதல கொட்டுற ஆம்பள
ஓட்டுறியே உசுர நீ... நீ...
நிச்சயமாகல... சம்மந்தம் போடல...
அப்பவுமே ஓறவு நீ... நீ...
அன்புல வெத வெதைச்சு என்ன நீ பறிச்சாயே…


நெஞ்சுல பூமழைய
சிந்துற ஒன் நெனப்பு என்ன தூக்குதே...
எப்பவும் யோசனையை
முட்டுற ஒன் சிரிப்பு குத்தி சாய்க்குதே...
வக்கணையா நீயும் பேச
நா வாய‌டைச்சு போகுறேன்
வெட்டவெளி பாத நானும்
ன் வீட்டை வந்து சேருரேன்
சிறு சொல்லுல உறியடிச்சு என்ன நீ சாய்ச்ச..
சக்கர வெயில் அடிச்சு சட்டுனு ச்ச‌
றெக்கயும் மொளைச்சுடுச்சு கேட்டுக்க கிளி பேச்சு…

கண்ண காட்டு போதும்
நிழலாககூட வாரேன் ஓஹோ... ஓ
என்ன வேணும் கேளு
குறையாம நானும் தாரேன்.. ஓஹோ


ஓ... தொட்டதும் கைகளு
ஓட்டுற ஒன் கருப்பு என்ன மாத்துதே
ஒட்டடை போல என தட்டிடும்
ஒன் அழகு வித்த காட்டுதே
தொல்லைகளை கூட்டினாலும்
நீ தூரம் நின்னா தாங்கல
கட்டிலிடும் ஆசையால
என் கண்ணு ரெண்டும் தூங்கல
உன்ன கண்டதும் மனசுக்குள்ள எத்தனை கூத்து
சொல்லவும் முடியவில்லை சூட்டையும் ஆத்து
உன்ன என் உசுருக்குள்ள வெக்கணும் அட காத்து...

கண்ண காட்டு போதும்
நிழலாககூட வாரேன்
என்ன வேணும் கேளு
குறையாம நானும் தாரேன்

Friday, December 2, 2016

Maaveeran Kittu - Kannadikkala

படம்: மாவீரன் கிட்டு (2016)
இசை:  D. இமான்
பாடியவர்கள்: பூஜா வைத்யநாத், ஜித்தின் ராஜ்
பாடல்வரிகள்: யுகபாரதி 





கண்ணடிக்கல கைப்புடிக்கல
உள்ள வந்து ஒட்டிக்கிட்ட காதல் 
தாலாட்ட மெல்ல வாலாட்ட
கண்ணடிக்கல கைப்புடிக்கல
உள்ள வந்து ஒட்டிக்கிட்ட காதல்
தாலாட்ட மெல்ல தாலாட்ட
என் பாட்ட நித்தம் நீ கேட்ட
 
கண்ணடிக்கல கைப்புடிக்கல
பச்சப்பொய்ய சொல்ல சொல்லி வாங்கும்
பாராட்ட வண்ண பூ மூட்ட
கண்ணடிக்கல கைப்புடிக்கல
பச்சப்பொய்ய சொல்ல சொல்லி வாங்கும்
பாராட்ட வண்ண பூ மூட்ட
என் கூட்ட விட்டு போமாட்ட
 
உன்னையே தினம் தினம் இவள் ம‌னம் சுத்துதே தூசியா
என்னவோ சுகம் சுகம் அதில் விழ‌ என்னுதே ஈசியா
 
அருவால தூக்கும் ஆசை ஆசையா ஓ...ஓ...ஓ...

கண்ணடிக்கல கைப்புடிக்கல
உள்ள வந்து ஒட்டிக்கிட்ட காதல் தாலாட்ட
மெல்ல வாலாட்ட
 

சிலம்புகள் பறை இசை கேட்க
பர‌ம்பொருள் தெருவையும் பார்க்க
சிலம்புகள் பறை இசை கேட்க
பர‌ம்பொருள் தெருவையும் பார்க்க
 
வந்ததென்ன சொப்பனங்கள் சொல்லிடாமலே
உன்னையன்றி செல்வமில்லை இந்த வாழ்விலே
வந்ததென்ன சொப்பனங்கள் சொல்லிடாமலே
உன்னையன்றி செல்வமில்லை இந்த வாழ்விலே
 
அல்லல்படும் வாழ்வும் அழகாகும் இனிமேலே
கொட்டி கொடுத்தாலும் கிடைக்காதே உனைப்போல
 
உப்பளத்தில் விழுந்து நீ முத்தெடுத்து போனாயே உயிரே
 

கண்ணடிக்கல

கைப்புடிக்கல
 
உள்ள வந்து ஒட்டிக்கிட்ட காதல்
 
தாலாட்ட

மெல்ல வாலாட்ட 

கண்ணடிக்கல  கைப்புடிக்கல
உள்ள வந்து ஒட்டிக்கிட்ட காதல்
தாலாட்ட  மெல்ல வாலாட்ட

வாலாட்ட......
என் பாட்ட நித்தம் நீ கேட்ட
 
உன்னையே தினம் தினம் இவள் ம‌னம் சுத்துதே தூசியா
என்னவோ சுகம் சுகம் அதில் விழ‌ என்னுதே ஈசியா
 
அருவால தூக்கும் ஆசை ஆசையா ஹா... ஹா... ஹா...


Maaveeran Kittu - Elanthaari

படம்: மாவீரன் கிட்டு (2016)
இசை:  D. இமான்
பாடியவர்கள்: பூஜா வைத்யநாத்
பாடல்வரிகள்: யுகபாரதி 







இளந்தாரி சொல்லு என்ன வேணும்
தருவேனே நெஞ்ச அள்ளி நானும்
உன பாத்தா மல்லுக்கட்டத் தோணும்
ஒதுங்காம ஒத்துக்கொள்ளு போதும்
வெரசா தொட வா... முழுசா கெடவா
நெருங்காம தூர நின்னு நெல்லுக்குத்தாத

இளந்தாரி சொல்லு என்ன வேணும்
தருவேனே நெஞ்ச அள்ளி நானும்
உன பாத்தா மல்லுக்கட்டத் தோணும்
ஒதுங்காம ஒத்துக்கொள்ளு போதும்
 

ஒன்ன எனக்கு ரொம்பப் பிடிக்கும்
சொல்லுறத கேளு
கண்ணு முழிச்சா ஒன்ன நெனச்சி
சுத்துது என் காலு
குத்துக்கறிப்போல நீயும் ஏன்
என்ன கொடை சாய்க்குற
வெக்கையில‌ தூறல் மாதிரி
நெஞ்சுருக பார்க்குற
ருவாட்ட பாத்தா வட்டம் போடும் காக்கா
அதுபோல தானே ஒன்னா சேரும் வாழ்க்க
மனசாலே என நீயும் மஞ்சக்குளிக்க வைய்யி 

இளந்தாரி சொல்லு என்ன வேணும்
தருவேனே நெஞ்ச அள்ளி நானும்

 
நெஞ்சப் பொளந்து உள்ள இருக்கும்
உன்ன நெதம் பாப்பேன்
உச்சந்தலையில் அம்மி அரைக்கும்
முத்தம் இட கேட்பேன்
மெத்தையில தூங்கிடாமலே வித்தைகள காட்டிட
கையில் உள்ள ரேகை தேயலாம்
கட்டிக்கொள்ள பார்த்திட
உனக்காக தானே உப்பு புளி காரம்
ஒதுக்காம வாங்கி திங்குது என் தேகம்
தலவாழ இல போட்டு தண்ணி தெளிச்சி வைய்யி

இளந்தாரி சொல்லு என்ன வேணும்
தருவேனே நெஞ்ச அள்ளி நானும் 
வெரசா தொட வா... முழுசா கெடவா
நெருங்காம தூர நின்னு நெல்லுக்குத்தாத

இளந்தாரி... ம்...ம்....ம்...
தருவேனே... ம்...ம்....ம்...
இளந்தாரி...

Maaveeran Kittu - Inaivom

படம்: மாவீரன் கிட்டு (2016)
இசை:  D. இமான்
பாடியவர்கள்: பிரதீப் விஜய்
பாடல்வரிகள்: யுகபாரதி






உயிரெல்லாம் ஒன்றே உறவாவோம் இன்றே
காக்கைக் குருவி எங்கள் ஜாதி
என்றே சொன்னான் பாரதி
வாழும் உலகை அன்பால் வெல்ல
செய்வோம் செய்வோம் ஓர் விதி
நேயம் இருந்தால் போதுமடா
காயம் உடனே ஆறுமடா... ஆறுமடா...

இணைவோம்... இணைவோம்...
இதயம் பூக்க இணைவோம்...
இணைவோம்... இணைவோம்...
இடரை நீக்க இணைவோம்... 
இணைவோம்... இணைவோம்...
மனிதம் காக்க இணைவோம்... 
இணைவோம்... ஆ... ஆ... ஆஆஆஆஆ...

உயிரெல்லாம்… ஒன்றே உறவாவோம்…… இன்றே…
மேலே என்ன கீழே என்ன
ஏனோ இந்த பாடுகள்
ஆசை அன்பு காதல் கொண்டால்
தீரும் எல்லைக் கோடுகள்
வாசம் மலரின் மேடையடா
நேசம் உலகின் ஆடையடா... ஆடையடா...

இணைவோம்... இணைவோம்...
இதயம் பூக்க இணைவோம்...
இணைவோம்... இணைவோம்...
இடரை நீக்க இணைவோம்... 
இணைவோம்... இணைவோம்...
மனிதம் காக்க இணைவோம்... 
இணைவோம்………

ஏழை கோழை என்றே பார்த்து
வானம் பொழிவது இல்லையடா
நீயா நானா சண்டைப்போட
பூமி சுழல்வது இல்லையடா
மரமென்றால் காற்று மணலென்றால் ஊற்று
இயற்கையில் ஏது பிரிவினை
இணைவது தானே உறுதுணை
எதுவும் இங்கே கைவசமாக
அறிவோம் அறிவோம் மனிதமே
முடியும் என்றால் உதவிகள் செய்து
கலைவோம் கலைவோம் துயரமே... துயரமே...

இணைவோம்... இணைவோம்...
இதயம் பூக்க இணைவோம்...
இணைவோம்... இணைவோம்...
இடரை நீக்க இணைவோம்... 
இணைவோம்... இணைவோம்...
மனிதம் காக்க இணைவோம்... 
இணைவோம்...

Wednesday, November 16, 2016

Rekka - Kannamma

படம்: றெக்க‌ (2016)
இசை:  D. இமான்
பாடியவர்கள்: நந்தினி ஸ்ரீகர்
பாடல்வரிகள்: யுகபாரதி







கண்ணம்மா... கண்ணம்மா...
அழகு பூஞ்சிலை
என்னுள்ளேயே... என்னுள்ளேயே...
பொழியும் தேன் மழை
உன்னை நினைத்திருந்தால் 
அம்மம்மா நெஞ்சமே...
துள்ளி குதித்தது தான் 
எங்கெங்கும் செல்லுமே...
ஒளிவீசும் மணிதீபம் அது யாரோ நீ...

கண்ணம்மா... கண்ணம்மா...
அழகு பூஞ்சிலை
என்னுள்ளேயே... என்னுள்ளேயே...
பொழியும் தேன் மழை


செம்பருத்தி பூவைப்போல
ஸ்நேகமான வாய்மொழி
செல்லம் கொஞ்ச கோடை கூட
ஆகிடாதோ மார்கழி

பால்நிலா உன் கையிலே
சோறாகி போகுதே
வானவில் நீ சூடிட
மேலாடை ஆகுதே

கண்ணம்மா... கண்ணம்மா... நில்லம்மா…
உன்னை உள்ளம் என்னுதம்மா...

கண்ணம்மா... கண்ணம்மா...
அழகு பூஞ்சிலை
என்னுள்ளேயே... என்னுள்ளேயே...
பொழியும் தேன் மழை


உன்னுடைய கோலம் காண
கோயில் நீங்கும் சாமியே
மண்ணளந்த பாதம் காண
சோலையாகும் பூமியே

பாரதி உன் சாயலை
பாட்டாக மாற்றுவான்
தேவதை நீ தானென
வாயார போற்றுவான்

கண்ணம்மா... கண்ணம்மா... என்னம்மா...
வெட்கம் நெட்டி தள்ளுதம்மா...

கண்ணம்மா... கண்ணம்மா...
அழகு பூஞ்சிலை
என்னுள்ளேயே... என்னுள்ளேயே...
பொழியும் தேன் மழை
உன்னை நினைத்திருந்தால் 
அம்மம்மா நெஞ்சமே...
துள்ளி குதித்தது தான் 
எங்கெங்கும் செல்லுமே...
ஒளிவீசும் மணிதீபம் அது யாரோ நீ...


Thursday, October 6, 2016

Theri - En Jeevan

படம்: தெறி (2016)
இசை: G.V. பிரகாஷ் 
பாடியவர்கள்: சைந்தவி, ஹரிஹரன், வைக்கம் விஜயலெட்சுமி
பாடல்வரிகள்: நா.முத்துகுமார்


Image result




உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே

சொல்லாமல் உன் சுவாசம் என் மூச்சில் சேருதே
உன் கைகள் கோர்க்கும் ஓர் நொடி
என் கண்கள் ஓரம் நீர் துளி
உன் மார்பில் சாய்ந்து சாக தோணுதே... ஓ... ஓ...

உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே

சொல்லாமல் உன் சுவாசம் என் மூச்சில் சேருதே

உபய குசல சிரஜீவன ப்ரசுத்த பரித மஞ்சுள தர 

சுந்தாரே... சஞ்சாரே ...
அதர ருஜித மதுரித பக சுதன கனக ப்ரசம நிரத 
பாங்கன்யே... மாங்கல்யே...
மமதம சகி சமதச சத முக மனசுப சுமநலயிவ 
சுசுத சஹித தாமம்...விரஹ ரஹித பாவம் ...
ஆனந்த போகம்... ஆஜீவ காலம் ...
பாசானு பந்தம்... காலானு காலம்...
தெய்வானுகூலம் ...காவ்யாத்த சித்திம்... கா.....மயே...

விடிந்தாலும் வானம் இருள் பூச வேண்டும்

மடிமீது சாய்ந்து கதை பேச வேண்டும்

முடியாத பார்வை நீ வீச‌ வேண்டும்

முழுநேரம் என்மேல் உன்வாசம் வேண்டும்

இன்பம் எதுவரை நாம் போவோம் அதுவரை

நீ பார்க்க பார்க்க காதல் கூடுதே
உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே
சொல்லாமல் உன் சுவாசம் என் மூச்சில் சேருதே


ஏராளம் ஆசை என் நெஞ்சில் தோன்றும்

அதையாவும் பேச பல ஜென்மம் வேண்டும்

ஏழேழு ஜென்மம் ஒன்றாக சேர்ந்து

ஒன்னோடு இன்றே நான் வாழவேண்டும்

காலம் முடியலாம் நம் காதல் முடியுமா

நீ பார்க்க பார்க்க காதல் கூடுதே... ஓ... ஓ...
உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே

சொல்லாமல் உன் சுவாசம் என் மூச்சில் சேருதே

உன் கைகள் கோர்க்கும் ஓர் நொடி
என் கண்கள் ஓரம் நீர் துளி
உன் மார்பில் சாய்ந்து சாக தோணுதே


Kodi - Ei Suzhali

படம்: கொடி (2016)
இசை: சந்தோஷ் நாராயணன்
பாடியவர்கள்: விஜயநாராயன்
பாடல்வரிகள்: விவேக்


Image result for kodi movie



ஏய் சுழலி அழகி விலகி
கலக்கட்டி போறவளே இருடி திருடி
அழகுட்டிதான் நகரும் அரளி
நொற தள்ளி போனேன் வெட்கம் கொறடி
உன் வயசதான் தித்திப்பா தின்னேன்
உசுரதான் கத்தி சொன்னேன்...

பொட்ட கோழி அழகுல‌
என்ன கொத்தி அலையுற‌
விட்டா கொஞ்சம் பொழைக்குறேன் விடுடி...
முட்ட போட்டு மனசுல‌
கண்ண தூக்கி ஏறியுற‌
திட்டா ஏட்டி செதருதேன் ஏரலி

ஏய் சுழலி அழகி கலரி
கலக்கட்டி போறவளே இருடி திருடி
கெடமாட்டுக்கு உணவா அலலி
வித பொட்ட காட்ட திங்க குடுடி
நீ மனசொட கல்வெட்டா நின்ன‌
கண்வெட்டா வெட்டி கொன்ன‌...

பொட்ட கோழி அழகுல‌
என்ன கொத்தி அலையுற‌
விட்டா கொஞ்சம் பொழைக்குறேன் விடுடி
முட்ட போட்டு மனசுல‌
கண்ண தூக்கி ஏறியுற‌
திட்டா ஏட்டி செதருதேன் ஏரலி

ஏய் சுழலி....


ஆலங்காட்டு கர‌
ஆத்தில் நீந்தும் பெர‌
ஒடையுற அல்லி
ஒளருது நித்தம்
காதல வந்து
காதுல கத்தும்

பொழங்குற வண்டு
முழுங்குது முத்தம்
பூவுல தத்தி தாவுற சத்தம்
பொழியுது தேனு
பொதையுறேன் நானு
அட மழ கொட்டிச்சா

கனவுல மாட்டி
கொபு மீனு
முழிச்சதும் தப்பிச்சா

பொட்ட கோழி அழகுல‌
என்ன கொத்தி அலையுற‌
விட்டா கொஞ்சம் பொழைக்குறேன் விடுடி
முட்ட போட்டு மனசுல‌
கண்ண தூக்கி ஏறியுற‌
திட்டா ஏட்டி செதருதேன் ஏரலி

ஏய் சுழலி...
ஏய் சுழலி...
ஏய் சுழலி...
ஏய் சுழலி...


Sunday, September 25, 2016

Thodari - Pona Usuru

படம்: தொடரி (2016)
இசை: D. இமான்
பாடியவர்கள்: ஹரிசரண், ஸ்ரேயா கோஷல்
பாடல்வரிகள்: யுகபாரதி


Related image




போன உசுரு வந்துரிச்சு
உன்ன தேடி திருப்பி தந்துரிச்சு

போன உசுரு வந்துரிச்சு
உன்ன தேடி திருப்பி தந்துரிச்சு
இதுபோல ஒரு நாளே
வரவேணா இனிமேலே
நொடி கூட ஏட்டி இருக்காத‌
என்ன விட்டு நீயும் முன்ன செல்ல நெனைக்காத‌

போன உசுரு வந்துரிச்சு
உன்ன வாரி அணைக்க சொல்லிரிச்சு
இதுபோல இனிமேலும்
நடக்காதே ஒரு நாளும்
 நானும் ஒட்டி இருப்பேனே
என் கண்ணுக்குள்ளே உன்ன வச்சி சிரிப்பேனே


சேந்து இருக்கும் உள்ளத்துல‌
துணை யாரு நமக்கு வெள்ளத்துல‌

உயிர் காதல் அடங்காது
நெருப்பாலும் பொசுங்காது

நடந்தாலே அது சுகந்தானே

துணையாக நானும் வருவேனே

சத்தியமா என் பக்கத்துல நீ இருந்தா
அனலும் குளிரா மாறுமே

ஆக மொத்தம் உன் பாரமெல்லாம்
நான் சுமக்க பிறவி கடனும் தீருமே

ஓஓ... ஓஓ... ஓஓ... ஓ...


ஆடி அடங்கும் பூமியிலே
நாம வாடி வதங்க தேவயில்ல‌

ஒரு வாட்டி வரும் வாழ்க்கை
துணிவோமே அத ஏற்க‌

சிரிப்போமே நந்தவனம் போல‌
அது போதும் இந்த உயிர் வாழ

போகும் வர இந்த காதல்
நம்ம காக்குமுனு நெனைச்சா வெலகும் வேதன‌

போகயிலும் நாம ஒத்துமையா 
போக போறோம் இது தான் பெரிய சாதன‌


போன உசுரு வந்துரிச்சு
உன்ன வாரி அணைக்க சொல்லிரிச்சு
இது போல இனிமேலும்
நடக்காதே ஒரு நாளும்
உன்ன நானும் ஒட்டி இருப்பேனே
என் கண்ணுக்குள்ளே உன்ன வச்சி சிரிப்பேனே

Friday, August 26, 2016

Dharmadurai - Aandipatti

படம்: தர்மதுரை (2016)
இசை: யுவன் சங்கர் ராஜா
பாடியவர்கள்: செந்தில்தாஸ், சுர்முகி
பாடல்வரிகள்: வைரமுத்து


Dharma Durai(2016 film) Poster.jpg




ஓஹோ... ஓஹோ... ஓஹோஓஒஹோ...
ஓஹோ... ஓஹோ... ஓஹோஓஒஹோ...

ஆண்டிப்பட்டி கண‌வா காத்து ஆள் தூக்குதே
அய்த்த பொண்ணு என்னத்தாக்குதே
அடி முக்கா பொம்பளையே
என்ன முழுசா நம்பலையே
நான் உச்சந்தலையில் 
சத்தியம் செஞ்சும் அச்சம் தீரலையே 
 
உன் பவுசுக்கும் உன் பதவிக்கும் வெள்ளக்காரிப் புடிப்ப
இந்தக் கிறுக்கிய ஏழ சிறுக்கிய எதுக்காகப் புடிச்ச
 
ஒரு வெள்ளக்காரி காசு தீர்ந்தா வெறுத்து ஓடிப்போவா
இவ வெள்ளரிக்கா வித்துக்கூட வீடு காத்து வாழ்வா

ஓஹோ... ஓஹோ... ஓஹோஓஒஹோ...
ஓஹோ... ஓஹோ... ஓஹோஓஒஹோ...


ஓஹோ.. தாலிகட்ட பண்ணிக்கிட்டோம் நிச்சயத்த
 
தள்ளி நில்லு மீறாதய்யா சத்தியத்த
 
கொஞ்சம் தொட்டா குண்டர் சட்டம் பாயுமா
 
நண்டை சீண்டும் நரி தான் ஓயுமா
 
நீ மஞ்சக்கரு வேலம்ப்பூவு
அதில் மாசு தூசு ஒன்னும் சேரல
ஒரு மஞ்ச தாலி கட்ட போறேன்
உன் மாராப்பு நான்தான் புள்ள


ஓ... மெய்யாகுமா வேப்ப எண்ணை நெய்யாகுமா
 
பெண் மீனுக்கு தண்ணி மேல சந்தேகமா
 
ஏழப்பொண்ணு ஏமாந்து தான் போகுமா
 
என்னை எழுதித்தாரேன் போதுமா
 
ஊரில் உள்ள ஆளை எல்லாம் நான்
அண்ணன் அண்ணன்னு சொல்லிக்கூப்பிட்டேன்
ஒன்ன ஒன்ன மட்டும் தானே இப்போ
மாமான்னு நான் கூப்பிட்டேன்

ஓஹோ... ஓஹோ... ஓஓஒஹோ...
ஓஹோ... ஓஹோ... ஓஓஒஹோ...
ஆண்டிப்பட்டி கண‌வா காத்து ஆள் தூக்குதே
அய்த்த பொண்ணு என்னத்தாக்குதே
அடி முக்கா பொம்பளையே 
என்ன முழுசா நம்பலையே
நான் உச்சந்தலையில் 
சத்தியம் செஞ்சும் அச்சம் தீரலையே

உன் பவுசுக்கும் உன் பதவிக்கும் வெள்ளக்காரிப் புடிப்ப
இந்தக் கிறுக்கிய ஏழ சிறுக்கிய எதுக்காகப் புடிச்ச

ஒரு வெள்ளக்காரி காசு தீர்ந்தா வெறுத்து ஓடிப்போவா
இவ வெள்ளரிக்கா வித்துக்கூட வீடு காத்து வாழ்வா 

ஆண்டிப்பட்டி கண‌வா காத்து ஆள் தூக்குதே
அய்த்த பொண்ணு என்னத்தாக்குதே 

Popular Posts