Tuesday, October 6, 2015

ரோமியோ ஜுலியட் - இதற்குத்தானே

படம்: ரோமியோ ஜுலியட் (2015)
இசை: D. இமான்
பாடியவர்: வைக்கம் விஜயலெட்சுமி
பாடல்வரிகள்: மதன் கார்கி





இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரி
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரி
எங்கே உன் வாழ்க்கை போகுதோ
எங்கே உன் தூக்கம் போனதோ
நூல் பொம்மை ஒன்றாய் நீ ஆடுகின்றாய்
ராஜகுமாரி ரத்தின குமாரி
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரி
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரி
எங்கே நீ கேட்ட ராஜ்ஜியம்
அய்யோ நீ இங்கே பூஜ்ஜியம்
ஒர் தங்க கூண்டில் நீ மாட்டிக் கொண்டாய்
ராஜகுமாரி ரத்தினகுமாரி


உன் கூந்தல் மாறி உன் ஆடை மாறி
நீ நடக்கும் தோரணைகள் மாறி
உற்சாகம் பாய்ச்சும் உன் பேச்சும் மாறி
நீ சூடும் மூரல் வேறாக மாறி
மாறி மாறி யாவும் மாறி
ராஜகுமாரி ஏ... ரத்தினகுமாரி
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரி
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரி


பழைய நிலைக்கு திரும்பவே
சிறிய இதயம் விரும்புதே
வழிகள் அதற்கு எங்கே
குழப்பம் எதற்கு இங்கே
முடிந்த முடிந்த உறவுகள்
விடிந்த மனதில் அரும்புதே
பொருளும் இதற்கு எங்கே
குழப்பம் எதற்கு இங்கே
காசுக்கு தானே நீ ஆசைப்பட்டு போனாய்
பாசத்துக்கு ஏங்கும் ஓர் பூனையாக ஆனாய்
புழுதி சிரிப்போ இங்கே
பளிங்கு சிறையோ அங்கே
ராஜகுமாரி ரத்தினகுமாரி

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரி
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரி
எங்கே நீ கெட்ட வானவில்
எங்கே நீ சொன்ன வேதியல்
யார் போல உன்னை நீ மாற்றுகின்றாய்
ராஜகுமாரி ஏ... ரத்தினகுமாரி
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரி

ரோமியோ ஜுலியட் - தூவானம்

படம்: ரோமியோ ஜுலியட் (2015)
இசை: D. இமான்
பாடியவர்கள்: விஷால் தட்லானி, சுனிதா சாரதி
பாடல்வரிகள்: தாமரை




தூவானம் தூவ... தூவ...
மழை துளிகளில் உன்னை கண்டேன்
என் மேலே ஈரம் ஆக
உயிர் கரைவதை நானே கண்டேன்
கடவுள் வரங்கள் தரும் பலகதை கேட்டேன்
அவரே வரமாய் வருவதை இங்கு பார்த்தேன்
வேறு என்ன வேண்டும் வாழ்வில்

தூவானம் தூவ... தூவ...

மழை துளிகளில் உன்னை கண்டேன்


குயிலென மனம் கூவும் மயிலென தரை தாவும்

என்னோடு நீ நிற்க்கும் வேளையில்
புழுதியும் பளிங்காகும் புழுக்களும் புணுகாகும்
கால் வைத்து நீ செல்லும் சாலையில்
யார் தீங்கு செய்தாலும் மன்னிக்க தோன்றும்
நீ தந்த இம்மாற்றம் என் வெட்கம் தூண்டும்
காதல் வந்தால் கோவம் எல்லாமே
காற்றோடு காற்றாக போகின்றதே

தூவானம் தூவ... தூவ...

மழை துளிகளில் உன்னை கண்டேன்


இரவுகள் துணை நாடும் கனவுகள் கடை போதும்

நீ இல்லை என்றால் நான் காகிதம்
விரல்களில் விரல் கோர்க்க உதட்டினை உவப்பாக்க
நீ வந்தால் நான் வண்ண ஓவியம்
நெஞ்சுக்குள் பொல்லாத ஆறேழு வீணை
ரீங்காரம்தான் செய்து கொல்கின்ற ஆணை
நீ தான் கை தூக்க வேண்டும் என் கண்ணே
கை நீட்டு தாலாட்டு கண் மூடுவேன்

தூவானம் தூவ... தூவ...

மழை துளிகளில் உன்னை கண்டேன்
என் மேலே ஈரம் ஆக
உயிர் கரைவதை நானே கண்டேன்
கடவுள் வரங்கள் தரும் பல கதை கேட்டேன்
அவரே வரமாய் வருவதை இங்கு பார்த்தேன்
வேறு என்ன வேண்டும் வாழ்வில்...

Popular Posts